Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

VAO முதல் IAS வரை!டாக்டர் சங்கர சரவணன்

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

VAO முதல் IAS வரை!டாக்டர் சங்கர சரவணன்

Published:Updated:

ரூபாய்-1

போட்டித் தேர்வு பொருளாதாரப் பாடத்தில், பொருளாதார விஷயங்கள் மட்டுமின்றி பொருளாதாரத்தால் ஏற்படும் சமூக மாற்றங்கள் மற்றும் விளைவுகள் பற்றிய கேள்விகளும் கேட்கப்படுவதுண்டு. 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில், விரைவான நகரமயமாதல் காரணமாக ஏற்படும் சமூகப் பிரச்னைகள் பற்றி கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அந்தக் கேள்வி, Discuss the various social problems which originated out of the speedy process of urbanisation in India என்று ஆங்கிலத்தில் அமைந்திருந்தது.

இந்தக் கேள்விக்கு 200 வார்த்தை களில் விடையளிக்க வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 10 ஆகும். இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் போது நகரமயமாதல் காரணமாக கூட்டுக் குடும்பமுறை உடைந்து தனிக் குடும்பமுறை பெருகி இருப்பது, வீட்டு வாடகை, வீடின்மை, நகரங் களில் சேரிகள் அதிகரித்திருப்பது, பொது போக்குவரத்து வசதியில் திருப்தி யின்மை காரணமாக தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, ஆளுக்கு ஒரு கார் ஓட்டிச் செல்வதால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், போதிய கழிவறை வசதியின்மை, இரவில் பாதுகாப்பின்மை, குழந்தை குற்றங்கள் போன்ற பலவற்றைப் பற்றியும் தேர்வர் எழுத முடியும். 

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்


விடை எழுதும்போது மிகவும் இறுக்கமாக எழுதாமல் சற்று சுவை கூட்டியும் எழுத முடியும். உதாரணமாக, மேற்படி தேர்வைத் தமிழிலேயே எழுதிய மாணவர் ஒருவர் இந்தக் கேள்விக்கான விடையை, ‘இப்போது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலே அது கூட்டுக் குடும்பம்தான்’ என்ற முகநூல் கூற்றைக் குறிப்பிட்டு தன் விடையைத் தொடங்கி, நகரமயமாதலின் பல்வேறு சிக்கல்களான கூட்டுக் குடும்ப முறை சிதைவு, முதியோர் பிரச்னைகள், விவாகரத்து, கல்வி முறையில் நகரமய மாதலின் தாக்கம் என தன் விடையை எழுதிச் சென்றதாகக் குறிப்பிட்டார். அந்த மாணவர் ஐஏஎஸ் தேர்வில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூபாய்-2

ஐபிபிஎஸ் (IBPS - Institute of Banking Personnel Selection) நடத்தும் வங்கித் தேர்வுகளில் கேட்கப்படும் பொருளாதாரக் கேள்விகள் தனித் தன்மை வாய்ந்தவை. அவை பெரும்பாலும், வங்கித் துறை செயல்பாடு கள் சார்ந்து அமையும். சான்றாக, சில கேள்விகளைப் பார்க்கலாம்.
1. Which of the following statements is not correct regarding Certificate of Deposit?

a. it is a negotiable money market instrument

b. it is a usance promissory note

c. it is issued only in physical form and not in demat form

d. it is issued at a discount to face value

e. All are correct

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

2. Popular Bank with a view to expand its business in Australia, opened an account with Commonwealth Bank of Australia in Australian Dollars in Melbourne. This account for Commonwealth Bank will be known as:

a. NOSTRO account
b. VOSTRO account
c. Glass account
d. Mirror account
e. None of these

3. In the Kissan Credit Card account of a farmer, the account has shown credit balance. What interest is to be paid for this?

a. no interest is payable as it is an overdraft account
b. no interest is payable as the balance will be treated as in a current account
c. saving bank interest will be paid
d. FD interest as applicable for corresponding maturity shall be paid.
e. None of these

4. The Reserve Bank of India (RBI), in August 2014, announced that its board had given approval to create an additional post in the rank of Deputy Governor. Which post is in reference here?

a. Chief Operating Officer
b. Managing Director
c. Chief Executive Officer
d. General Manager
e. None of these

5.  The Union Cabinet on 20 August 2014 approved the blueprint for the Digital India project, which envisages all government services be delivered electronically by
a. 2016
b. 2018
c. 2020
d. 2022

6. What is the liability of the Banker in Case of Wrongful Dishonor of Cheques?

a. He is liable to compensate the customer for the loss suffered by him
b. He is not liable to compensate the customer for the loss
c. He can transfer the matter to the Customer Grievance Redressal Department
d. Both the customer and the banker have to split the compensation in the ratio of 50:50
e. None of these

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

இனி, இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம்.

1. (c) It is issued only in physical form and not in demat form
2. (b) VOSTRO account
3. (c) Saving bank interest will be paid
4. (a) Chief Operating Officer
5. (b) 2018
6. (a) He is liable to compensate the customer for the loss suffered by him,

இனி, இவைகுறித்த விளக்கங்களைப் பார்க்கலாம். முதல் கேள்வி, வைப்புச் சான்றிதழ் (Certificate of Deposit) எனப்படும் பணச் சந்தை ஆவணம் பற்றியது. பணச் சந்தையில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆவணங்களான உண்டியல் பில்கள், வணிகத் தாள்கள் (Commercial Papers), அரசுக் கடன் பத்திரங்கள் (Gilt edged securities) போன்றவற்றின் தனித்தன்மை, அவற்றுக்கிடையேயான வேறுபாடு போன்றவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் இதுமாதிரியான கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க முடியும்.

பிராமிசரி நோட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று, டிமாண்ட் பிராமிசரி நோட்; மற்றொன்று, யுசான்ஸ் பிராமிசரி நோட். டிமாண்ட் பிராமிசரி நோட்டை பொறுத்தமட்டில், நோட்டை எழுதி கொடுத்தவர், கடன் கொடுத்தவர் கேட்கிறபோது கடனை திருப்பிக் கொடுத்தாக வேண்டும். ஆனால், யுசான்ஸ் பிராமிசரி நோட்டை பொறுத்தமட்டில், கடனை எப்போது திருப்பித் தரவேண்டும் என்ற காலமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
 

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

இரண்டாவது கேள்வி, வெளிநாட்டு வங்கியில் தொடங்கப்படும் VOSTRO கணக்கு தொடர்பானது. VOSTRO என்ற லத்தின் சொல்லுக்கு ‘உங்களுடையது’ என்பது பொருள். எனவே, VOSTRO அக்கவுன்ட் என்பது ஒரு அமெரிக்க அல்லது இங்கிலாந்து வங்கியின் இந்திய நிறுவனம் ஒன்று தொடங்கும் வங்கிக் கணக்கை குறிக்கும். இந்திய நிறுவனம் ஒன்று இந்தியர் களின் சேமிப்பை டாலர்களில் பராமரிக்க நினைத்து, அதற்கான ஒரு கணக்கை அமெரிக்க வங்கி ஒன்றில் தொடங்கி னால், அது VOSTRO கணக்குக்கு உதாரணம். இந்தக் கணக்கில் அமெரிக்க வங்கி, கணக்குத் தொடங்கிய இந்திய நிறுவனத்தின் சார்பில் பணத்தைப் பராமரிக்கிறது.

மூன்றாவது கேள்வியைப் பொறுத்தமட்டில், விவசாயிகள் கடன் அட்டைக்கு சேமிப்புக் கணக்கு வட்டியே வழங்கப்படு கிறது. விவசாயிகள் கடன் அட்டை எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது, முதன்முதலாக அதை வழங்கிய வங்கி எது போன்ற தகவல்களை இந்தக் கேள்வியோடு இணைத்து படித்துக்கொள்வது நல்லது. சில சமயங்களில் வேறு தேர்வுகளில் விவசாயிகள் நலனுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி கேட்கப்படும்போது, இந்த விவசாயிகள் கடன் அட்டை பற்றி நீங்கள் கொள்குறி வகை வினாக்களுக்கு படித்த இரண்டு, மூன்று தகவல்களை தொகுத்து விடையாக எழுத முடியும். எனவே, படிக்கும்போது இது கொள்குறி வினாவுக்கான விடை, இது விரிவான விடை எழுதுவதற்கு தேவைப்படுவது என பிரித்துக் கொள்ளாமல் எந்த விஷயத்தையும், எந்த விடைக்கு வேண்டுமானாலும் பொருந்துகிற மாதிரி தயாரிப்பை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நான்காவது கேள்விக்கான விடையை செய்தித்தாளை கவனமாகப் படித்து வருவதன்மூலம் தேர்வர் ஒருவர் தர முடியும். இந்தமாதிரி கேள்விகள் தேர்வுக்குப் படிக்கும்போது, செய்தித் தாளில் வரும் செய்திகள் போட்டித் தேர்வில் எவ்வாறு வினாக்களாக மாறுகின்றன என்பதை உணர்ந்து,  அது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து குறிப்பு எடுத்து படிக்க வழிகாட்டும்.

ஐந்தாவது கேள்விக்கான விடை, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா பற்றியது. 2018-ம் ஆண்டுக்குள் இந்தியா விலுள்ள அனைத்து அரசு சேவைகளை யும் டிஜிட்டல் முறையில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு அந்தத் திட்டத்துக்கான மாதிரி ஒன்றை அங்கீகரித்தது தொடர்பாக செய்தித்தாளில் வந்த செய்தியின் அடிப்படையில் அமைந்தது இந்த வினா. இதைப் பற்றி படிக்கின்றபோது  E-Governance எனப்படும் மின் ஆளுகை குறித்தும், அதை அரசாங்கம் எவ்வாறு செயல்படுத்தி வருகிறது என்பது குறித்தும், அதிலுள்ள பிரச்னை கள் குறித்தும் அறிவது நல்லது. காரணம், இதுகுறித்த புதிய தொழில்நுட்பங்கள், அந்த தொழில் நுட்பங்களோடு தேர்வர்களுக்கு இருக்கக்கூடிய பரிச்சயம் ஆகியவைக் குறித்த கேள்விகள் நேர்முகத் தேர்விலும் கேட்கப்படலாம்.

உதாரணமாக, ஒரு வங்கித் தேர்வில் ஒரு சிடியை காப்பி செய்வது எப்படி? Burning a cd என்பதன் பொருள் என்ன? என கணினி பயன்பாடு சார்ந்த நடைமுறைக் கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து தேர்வர் ஒருவர் சமீபத்தில் குறிப்பிட்டார். கணினியில் நமக்கு எந்த அளவு தியரிட்டிகளாகத் தெரியும், எந்த அளவு பிராக்டிக்கலாக பரிச்சயம் உண்டு என்ற விஷயத்தை நேர்முகத் தேர்வின்போது ஒளிவுமறைவின்றி கூற வேண்டும். தெரியாத விஷயத்தைத் தெரியும் என்று கூறினால், அதுபற்றி பிராக்டிக்கலான கேள்விகள் கேட்கும் போது தெரியாமல், நமது நேர்மை சந்தேகத்துக்குள்ளாக வாய்ப்புண்டு.

எனவே, இதுபோன்ற கேள்விகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆறாவது கேள்வி, காசோலை நடைமுறை தொடர்பான, அதேசமயத்தில் வங்கியர் ஒருவர் தன் பணியில் கவனக்குறைவாக இருப்பதால் அவருக்கு ஏற்படும் விளைவைச் சுட்டிக்காட்டும் போக்கில் அமைந்தது. இந்தமாதிரி வங்கிப் பணியில் உள்ள கவனக்குறைவு மற்றும் நடைமுறைச் சிக்கல் பற்றிய கேள்விகள் சுவையானதாக அமை வதோடு, இந்தமாதிரி கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பதில் இந்தப் பணியில் நாம் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவும் அமையும்.
(தயாராவோம்)

படங்கள்:  கு.பாலசந்தர்