நடப்பு
Published:Updated:

கமாடிட்டி: மெட்டல் & ஆயில்

கமாடிட்டி: மெட்டல் & ஆயில்

 தங்கம்!

‘‘அமெரிக்க ஃபெடரல் வங்கி,  பொருளாதாரம் வளர்ச்சி அடைவதால் பாண்டு வாங்கும் கொள்கைகளில் மாற்றம் செய்து வருகிறது. சர்வதேச சந்தைகள் மந்தநிலையில் இருந்தாலும் அது எந்தவிதத்திலும் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்காததால், டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கியும் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு எதிர்பார்த்ததைவிட வேகமாக வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளதால், தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்து, அதன் விலையும் குறைந்து வர்த்தகமானது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,140 ரூபாயாக வர்த்தகமானது.

வரும் வாரங்களிலும் தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதாரத்தைப் பொறுத்து குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்புள்ளது. இந்திய கமாடிட்டி சந்தையைப் பொறுத்தவரையில், இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகமாவதால், விலை மேலும் குறைந்து 10 கிராம் தங்கம் 25,470 என்ற அளவில் வர்த்தகமானது. வரும் வாரங்களில் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை பங்குச் சந்தைகளின் வளர்ச்சியால் குறைந்தே வர்த்தகமாகும்.’’

கமாடிட்டி:  மெட்டல் & ஆயில்

 வெள்ளி!

வெள்ளி விலை சர்வதேச சந்தையில் சிறிய அளவிலான ஏற்றத்தில் காணப்பட்டது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு வெள்ளியின் மீதான முதலீட்டை சற்று அதிகரிக்கச் செய்தது. அதோடு, ஜப்பான் சந்தைகளின் கொள்கைகளில் கொண்டுவந்துள்ள மாற்றம் உலோகங்களின் விலை உயர காரணமாகியது. இதனால் சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 15.4 டாலராக இருந்தது. இந்திய கமாடிட்டி சந்தையில் வெள்ளியின் விலை 0.2% அதிகரித்து வர்த்தகமானது. வரும் வாரங்களில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் சர்வதேச விலை நிலவரங்களைப் பொறுத்து வெள்ளியின் விலை அமையும் என்று கூறப்படுகிறது.

 காப்பர்!

காப்பரின் விலை சர்வதேச சந்தைகளில் அதிகரித்தே வர்த்தகமானது. ஐரோப்பிய மத்திய வங்கி கொண்டுவரவுள்ள மாற்றங்கள், ஐரோப்பிய பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நோக்கில் உலோகங்களின் விலை அதிகரித்தது. இதனால் காப்பரின் விலை 0.26% அதிகரித்து வர்த்தகமானது. இறக்கத்தில் உள்ள சீனாவின் பொருளாதாரத்தைத் திரும்ப கொண்டுவரும் நடவடிக்கைகளை அந்த அரசு எடுத்து வருவதால் காப்பரின் விலை அடுத்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி:  மெட்டல் & ஆயில்

இந்திய கமாடிட்டி சந்தையில் 0.5% அதிகரித்து வர்த்தகமானது. இந்திய சந்தையில் காப்பரின் விலை வரும் வாரத்தில் சர்வதேச விலை நிலவரங்களைப் பொறுத்து அமையும்.

 கச்சா எண்ணெய்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 1% குறைந்து வர்த்தகமானது. டாலரின் மதிப்பு அதிகரித்து வர்த்தகமானதும், அதிகரித்து வரும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியும் இந்த இறக்கத்துக்கு  காரணமாகியது. அது மட்டுமல்லாமல், சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் குழாய் வெடித்தது என்ற வதந்தியும், அமெரிக்க எண்ணெய் இருப்பு குறித்த தகவலும் விலையை சற்று அதிகப் படுத்தின. ஆனால், விலை பிறகு மீண்டும் குறைந்தது.

கமாடிட்டி:  மெட்டல் & ஆயில்

கடந்த ஜூன் மாதத்திலிருந்து 30% வீழ்ச்சியை கச்சா எண்ணெய் சந்தித்துள் ளது. வரும் நவம்பர் 27-ம் தேதி ஓபிஇசி கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்திய கமாடிட்டி சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஒரு பேரல் 4,816 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்திய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச விலை நிலவரங்களைப் பொறுத்து  இருக்கும்.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!