நடப்பு
Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் (Turmeric)

கடந்த வாரத்தில் முதலீட்டாளர்கள் மேற்கொண்ட ஷார்ட் கவரிங் காரணமாக ஃப்யூச்சர் சந்தையில் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமானது. அதேசமயம், நேரடி சந்தையில் விலை குறைந்து காணப்பட்டது. தரமற்ற மஞ்சள் வரத்து காணப்பட்டதும், வரும் நாட்களில் அதிகமான மஞ்சள் உற்பத்தி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும்தான் விலை குறைந்ததற்குக் காரணம். தெலங்கானாவில் மஞ்சள் உற்பத்தி அதிகரித்திருப்பதும் இன்னொரு காரணம்.

2014-15-ம் ஆண்டில் தெலங்கானாவில் மஞ்சள் விதைப்பு 44,600 ஹெக்டேர் அளவுக்குக் காணப்படுகிறது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் 43,100 ஹெக்டேராக இருந்தது. 2013-14-ம் ஆண்டில் மஞ்சள் உற்பத்தி 10-15% குறைந்து, 40 லட்சம் பைகளாக இருந்தது. ஏப்ரல் - ஜூலை, 2014-ல் மஞ்சள் ஏற்றுமதி அளவு 27,000 டன். இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 5% அதிகம்.

அதிக உற்பத்தி, தரமற்ற மஞ்சள் வரத்து போன்ற காரணங்களால் வரும் நாட்களிலும் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமாகும். அதேசமயம், வட இந்தியாவில் மஞ்சளுக்கான தேவை அதிகமாகக் காணப்படுவதால், மஞ்சள் விலை மேலும் குறையாமல் தடுக்கப்படும்.

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம் (Jeera)

சிரியா மற்றும் துருக்கியில் தொடர்ந்து அரசியல் பதற்றம் நிலவுவதால், இந்திய ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்து, விலையும் உயர்ந்தது.  ஸ்பைசஸ் போர்டு தகவல்படி, ஏப்ரல் 2014 - மார்ச் 2015 வரை இந்தியா ஏற்றுமதி செய்த ஜீரகத்தின் அளவு ஒரு லட்சம் டன். இதன் மதிப்பு ரூ.1,300 கோடி. உள்நாட்டுச் சந்தைகளின் தேவை அதிகரிப்பு, வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆர்டர் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்திய ஜீரகம் வரும் வாரங்களிலும் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி!

கடுகு விதை (Mustard seed)

கடுகு ஆயிலுக்கு அதிகத் தேவை காணப்பட்டதால், சென்ற வாரம் கடுகு விதை விலை அதிகரித்து வர்த்தகமானது. செப்டம்பர் 2014 நிலவரப்படி, கடுகு மீல் ஏற்றுமதியானது 1.52% குறைந்து, 58,567 டன்களாகக் காணப்படுகிறது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 59,472 டன்னாக இருந்தது. 2013-14-ம் ஆண்டின் நிலவரப்படி கடுகு விதை விதைப்பானது, 7.13 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.73 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.

அக்ரி கமாடிட்டி!

வேளாண்மை அமைச்சகத்தின் நான்காவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2013-14-ம் ஆண்டில் கடுகு விதை உற்பத்தி 7.96 மில்லியன் டன். இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டைவிட 0.85% குறைவு. கடுகு ஆயில் தேவை அதிகமாக இருப்பதால், இந்த வார விலை நிலவரமே அடுத்த வாரமும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னா (Chana)

அக்ரி கமாடிட்டி!

சென்ற வாரம் சென்னாவின் தேவை அதிகரித்துக் காணப்பட்டதால், விலையும் அதிகரித்தே வர்த்தகமானது. சந்தை நிலவரப்படி, ராபி பருவப் பயிர் விதைப்பு காலதாமதாகத் தொடங்கி உள்ளதால், கடந்த சில நாட்களாக சென்னாவுக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது. வேளாண்மை அமைச்சகத்தின் அறிக்கையில் கடந்த அக்.31-ம் தேதி நிலவரப்படி, ராபி பருவத்தில் விதைக்கும் பயிர் விதைப்பானது 7.84 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.66 லட்சம் ஹெக்டேராக இருந்தது.  சென்னாவின் தேவை அதிகரிப்பு மற்றும் சென்னாவுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் வரும் வாரங்களிலும் சென்னாவின் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி!