Published:Updated:

நிஃப்டி: அடுத்த இலக்கு 9500 புள்ளிகள்!

சி.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

இந்திய பங்குச் சந்தை கடந்த வாரத்தில் புதிய உச்சத்தைத் தொட்டது. அதாவது, சென்செக்ஸ் 28000 புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்தது. நிஃப்டி புள்ளிகள் 8338 புள்ளிகளுக்கு உயர்ந்து சாதனை படைத்தது. உச்சத்தைத் தொட்ட பங்குச் சந்தை, அதற்குபின் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சந்தை இப்படியேதான் இருக்குமா, இதன் அடுத்தகட்டம் எப்படி இருக்கும் என சென்னையின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் பி.ராமிடம் கேட்டோம்.

‘‘இந்திய பங்குச் சந்தையின் ஏறுமுகம் கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் முதலே தொடங்கிவிட்டது. நிஃப்டி அதன் குறைந்தபட்ச புள்ளியான 5118-லிருந்து 2008 மற்றும் 2012-ல் இருந்த உச்சமான 6415-க்கு (முதல் மூவ்) உயர்ந்தது. அதன்பிறகு கரெக்‌ஷனை சந்தித்து, 5933க்கு (இரண்டாவது மூவ்) வந்தது. அதன்பிறகு ஏற்றத்தைக் கண்டு (எலியட்வேவ் தியரி அடிப்படையில் 3வது மூவ்) 8000 புள்ளிகளுக்கு உயர்ந்தது. தற்போது 8350 நிலையில் காணப்படுகிறது. இந்த ஏற்றம் முடிவுக்கு வரவேண்டும் என்றால், நிஃப்டி புள்ளிகள் 7750-க்கு கீழே இறங்க வேண்டும். இது நடக்கவில்லை என்றால், சந்தை அடுத்த உச்சத்துக்குச் செல்லும். இதே காளைச் சந்தை நிலை தொடர்ந்தால், நிஃப்டி 9000 அல்லது அதற்குமேலே உயரும். 9000-ஐ தாண்டும் பட்சத்தில், நிஃப்டியின் அடுத்த இலக்கு 9500-ஆக இருக்கும்.

இந்தக் கணிப்பு  சில டெக்னிக்கல் அனாலிசிஸ் ஃபார்முலாக்கள் மற்றும் ஃபெப்பனோசி முறை கணக்கீடு அடிப்படையில் செய்யப்படுகிறவை.  இந்த இடத்தில் முதலீட்டாளர்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். காளைச் சந்தையில் உச்சம் என்று எதுவும் கிடையாது. குறியீடு அதன் போக்கில் புதிய உச்சத்துக்குச் செல்லக்கூடும். தற்போதைய நிலையில், நிஃப்டியின் பி/இ விகிதம் 21.33-ஆக உள்ளது. நிஃப்டியின் பிரைஸ் டு புக் ரேஷியோ 3.54-ஆக இருக்கிறது. நிஃப்டி பங்குகளின் டிவிடெண்ட் யீல்டு 1.25ஆக இருக்கிறது.

நிஃப்டி: அடுத்த இலக்கு 9500 புள்ளிகள்!

2008, ஜனவரியில் நிஃப்டி புள்ளிகள் 6300 நிலையில் இருந்தது. அப்போது (ஜனவரி 8), நிஃப்டியின் பி/இ விகிதம் 28.29 ஆகவும், பிரைஸ் டு புக் ரேஷியோ 6.55 ஆகவும் டிவிடெண்ட் யீல்டு 0.82 ஆகவும் இருந்தது. இதன்படி, 2008  இண்டெக்ஸ் உச்ச நிலையிலிருந்து 35 சதவிகிதம் அதிகமாக தற்போது இருந்தாலும்,  மதிப்பளவில் 35 சதவிகிதம் குறைவாக வர்த்தகமாகிறது. இதேபோல், பிரைஸ் டு புக் ரேஷியோவும் 45% மதிப்பு குறைந்து வர்த்தகமாகிறது.

நிஃப்டி: அடுத்த இலக்கு 9500 புள்ளிகள்!

இந்த நிலையில் நிஃப்டி 9500 புள்ளிகளுக்கு உயர்ந்தால், தற்போதைய மதிப்பு நிலையிலிலிருந்து 25% அதிகரிப்பாக இருக்கும். சந்தை அதிக அமைதியோடு இருக்க வேண்டும் என்றால், செங்குத்தான ஓர் ஏற்றம் நிகழ வேண்டும். இதுவரை அந்த ஏற்றம் வராததால், இனி அடுத்த இரண்டு மாதங்களில் ஏற்றம் வர வாய்ப்புள்ளது.  அந்தவகையில் ஷார்ட் செல்லிங்கைத் தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், குறுகிய

நிஃப்டி: அடுத்த இலக்கு 9500 புள்ளிகள்!

கால பலவீனத்தால் சந்தை கரெக்‌ஷனைச் சந்தித்தால், அதனை வாய்ப்பாகக் கருதி முதலீடு செய்யத் தவறக்கூடாது. அப்போதுதான், சந்தை காளையின் பிடிக்கு மீண்டும் வரும் போது, அதிக லாபம் ஈட்ட முடியும்.

பொதுவாக, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத ஆரம்பத்தில் நிஃப்டி புள்ளிகள் 10 சதவிகிதத்துக்குமேல் ஏற்றத்தைச் சந்திப்பது வழக்கம். துணிச்சலான டிரேடர்கள், 8450-க்கு மேல் புல் பொசிஷன்களை 8300-க்கு கீழே ஸ்டாப் லாஸ் வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்யலாம். இதற்கான இலக்கு 8550-8600ஆக இருக்கும். ஒவ்வொரு 50 புள்ளிகள் ஏற்றத்துக்கும் 150 புள்ளிகள் பொசிஷனை மாற்றிக்கொள்ளவும். உஷாரான டிரேடர்கள் 8500 டிசம்பர் கால் ஆப்ஷன்களை (சுமார் 130) 70-க்கு கீழே ஸ்டாப் லாஸ் வைத்து வர்த்தகம் செய்யலாம். இதற்கான இலக்கு 300-க்கு மேல். லாங் சைடில் வர்த்தகம் செய்ய ஆலோசனை சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், மேலே குறிப்பிட்ட ஸ்டாப் லாஸ் நிலையைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பது அவசியம்” என்றார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு