பிரீமியம் ஸ்டோரி

 கச்சா எண்ணெய்!

‘‘சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2010 செப்டம்பருக்குப்பின் மிகக் குறைந்த விலையாக பேரல் ஒன்று 80 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகி வருகிறது. இதற்குக் காரணம், ரஷ்யா மீது கடந்த சில மாதங்களுக்குமுன் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததே. இதனால் ரஷ்யப் பொருளாதாரம் பாதிப்படைந்தது. எனவே, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விற்கத் துவங்கியது. அதேசமயம், அமெரிக்கா ஒரு நாளைக்கு 3.4 மில்லியன் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வெளியிட்டதும் இந்த இறக்கத்துக்குக் காரணமாகியுள்ளது.
உற்பத்தி அதிகரித்த நிலையில், தேவை குறைந்ததும் கச்சா எண்ணெய் விலை குறையக் காரணமானது. மற்ற சந்தை களான ஜப்பான், சீனா, மற்றும் ஐரோப்பாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக தேவை குறைந்து விலை இறக்கத்தை அதிகப்படுத்தின.

இந்திய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பெரிய மாற்றமின்றி வர்த்தகமாகிறது. இந்த நிலையில் ஒரு லிட்டருக்கு ரூ.1.5 கலால் வரியை அதிகப்படுத்தியுள்ளது, சர்வதேச சூழல்களால் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைச் சமாளிக்கத்தான் என்று தெரிகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இன்னும் குறைந்தே வர்த்தகமாக வாய்ப்புள்ளது’’.

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

 தங்கம்!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் ஏற்றத்துடனேயே வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையில் யென்னுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது அமெரிக்கச் சந்தைகளில் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர் களின் ஆர்வம் பங்குச் சந்தை முதலீட்டில் அதிகரித்து வருவதால், தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறைந்துள்ளது. இதுதவிர,

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

அமெரிக்காவில் வெளியாகியுள்ள வேலைவாய்ப்பின்மை பற்றிய தகவல் களால் தங்கத்தின் விலை சற்று ஏற்றமடைந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1,152 டாலராக வர்த்தகமாகிறது.

இந்திய சந்தையிலும் தங்கம் விலை சர்வதேச நிலவரங்களைப் பொறுத்தே வர்த்தகமாகிறது. இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 0.7% குறைந்து, 25,635 ரூபாயாக உள்ளது. அதிகரித்துவரும் அமெரிக்கப் பொருளாதாரத்தால் இந்திய சந்தைகளில் வரும் வாரத்திலும் தங்கத்தின் விலையில் இறக்கம் காணப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 வெள்ளி!

வெள்ளியின் விலை இறக்கத்தில் வர்த்தகமானது. அடிப்படை உலோகங் களின் விலை குறைந்து வர்த்தகமானதும், ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கத்தின் விலையும் வெள்ளியின் விலை குறையக் காரணமானது. சர்வதேச சந்தையில் விலை குறைந்து ஒரு அவுன்ஸ் 15.6 டாலராக உள்ளது. இந்திய கமாடிட்டி சந்தையில் வெள்ளியின் விலை குறைந்தே வர்த்தகமாகிறது. வரும் வாரத்திலும் வெள்ளியின் விலை சர்வதேச நிலவரங்களைப் பொறுத்து இறக்கத்தில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

 காப்பர்!

காப்பரின் விலை சர்வதேச சந்தையில் 1.1% குறைந்து வர்த்தகமாகியது. காப்பரை அதிகம் உபயோகப்படுத்தும் சீனாவில் வெளியான பொருளாதாரத் தகவல்கள் இறக்கத்தையே குறிப்பிடுவதாக இருப்பதால், காப்பரின் விலை இறக்கத்தில் உள்ளது. அமெரிக்கச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, அடிப்படை உலோகங்களின் விலை குறைய காரணமாகியுள்ளது.

இந்திய சந்தைகளில் சற்று அதிகரித்துக் காணப்பட்ட காப்பரின் விலை சர்வதேச சந்தைகளைப் பொறுத்து மாறுபடும் என்பதால், அடுத்த வாரத்தில் இந்திய சந்தையிலும் காப்பரின் விலை குறைந்தே வர்த்தகமாகும் என்று கூறப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு