இதற்குமுன் சில மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள் குறித்து இந்தப் பகுதியில் அலசினோம். அந்த வகையில் இந்த வாரம் டிஎஸ்பி-பிஆர் மைக்ரோ கேப் ஃபண்ட் பற்றி பார்ப்போம். சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் டிஎஸ்பி-பிஆர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் ஒன்றாகும்.
சந்தை மதிப்பில் டாப் 300 நிறுவனங் களைத் தவிர்த்து, பிற நிறுவனங்களில் இந்த ஃபண்ட் முதலீடு செய்கிறது. பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீட்டை தனது பெஞ்ச்மார்க்காக வைத்துக் கொண்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களால் அதிகமாக வைத்தி ருக்கப்படாத நிறுவனப் பங்குகளில் தனது முதலீட்டை மேற்கொள்கிறது. மேலும், சந்தையால் அதிகமாக ஆராயப்படாத நிறுவனங்களை ஆராய்ந்து முதலீடு செய்கிறது.
இந்த ஃபண்ட் வைத்துள்ள நிறுவனங்களின் சராசரி சந்தை மதிப்பு ரூ.2,491 கோடியாகும். அதேசமயத்தில், இந்த ஃபண்ட் கேட்டகிரியில் உள்ள பிற ஃபண்டுகளின் சராசரி சந்தை மதிப்பு ரூ.11,400 கோடியாகும். ஆகவேதான் இந்த ஃபண்ட் மைக்ரோ கேப் என்று அழைக்கப்படுகிறது.
இதன் போர்ட்ஃபோலியோவில் மிட் கேப் பங்குகள் 24 சதவிகிதமும், ஸ்மால் கேப் பங்குகள் 74 சதவிகிதமும், எஞ்சியது லார்ஜ் கேப் பங்குகளிலும் உள்ளது. 64 பங்குகள் இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ளதால், ஒரு பங்கினைத் (இண்டோகோ ரெமடீஸ் – 5.40%) தவிர்த்து, அனைத்துப் பங்குகளும் 4 சத விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது ரிஸ்க்கை வெகுவாகக் குறைத்துவிடு கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மைக்ரோ கேப் கேட்டகிரியில் உள்ள பங்குகளின் ரிஸ்க் அதிகம். சந்தை வீழ்ச்சியைக் காணும்போது, இந்தப் பங்குகளின் மதிப்பு வேகமாக கீழே இறங்கும். அதேசமயத்தில், தற்சமயம் போல் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது, இந்தப் பங்குகளின் ஏற்றமும் வேகமாக இருக்கும். அதை இந்த ஃபண்டின் கடந்த ஒரு வருட கால வருமானத்திலிருந்தே (114.50%) நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
சந்தையை ஒட்டிய இதன் ஏற்ற இறக்கம் அதிகமாக இருப்பதால், இந்த ஃபண்டினை செல்வத்தைப் பெருக்குவ தற்கான நோக்கத்துடன் மட்டுமே அணுகுங்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைகளான ஓய்வுக்காலம், குழந்தைகளின் கல்வி/ திருமணச் செலவு போன்ற நோக்கங்களுக்காக இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்.

சிறிய நிறுவனப் பங்குகளில் இந்த ஃபண்டைப்போல, நன்றாக ஆராய்ந்து முதலீடு செய்யும்போது, நீண்ட நாட்களில் வருமானம் மிக நன்றாக இருக்கும். ஸ்மால் அண்ட் மிட் கேப் கேட்டகிரியில் இந்த ஃபண்ட் டாப் 5 ஃபண்டுகளில் ஒன்றாக உள்ளது.
நேரடியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள், லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்துவிட்டு, மிட் அண்ட் ஸ்மால் கேப் கேட்டகிரி முதலீட்டுக்கு இந்த ஃபண்டை நாடலாம்.

அதேபோல், பல லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரேமாதிரியான போர்ட் ஃபோலியோவைக் கொண்டுள்ளது என அங்கலாய்த்துக் கொள்பவர்கள், இந்த ஃபண்டின் வித்தியாசமான போர்ட் ஃபோலியோவை நாடலாம்.
இந்த ஃபண்ட் தற்போது ரூ.1,590 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் வினித் சாம்ப்ரே மற்றும் ஜெய் கோத்தாரி ஆவர்.

இந்த ஃபண்டை, நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது, நிதித் துறையில் அண்டர்வெயிட்டா கவும், கெமிக்கல்ஸ், இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டா கவும் உள்ளது. இதன் பீட்டா (1.09) சந்தையைவிட சற்று அதிகமாக இருந்தாலும், இதன் ஆல்ஃபா பிரமாதமாக (12.12%) உள்ளது.

பல ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்டுகள் கடந்த ஒரு வருடத்தில் பிரமாதமான வருமானத்தைத் தந்துள்ளதை அடுத்து புதிய முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டுகளை நோக்கி படையெடுத்துள்ளார்கள்.

புதிய நுழைவுகளைக் குறைப்பதற்காக, மொத்த முதலீட்டை இந்த ஃபண்ட் தவிர்க்க விரும்புகிறது. ஆகவே, மொத்தமாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே இந்த ஃபண்டில் தற்போது முதலீடு செய்ய முடியும். அதேபோல், எஸ்ஐபி / எஸ்டிபி முறை முதலீட்டையும் அதிகபட்சமாக இரண்டு லட்சத்துக்கு லிமிட் செய்துள்ளது.
யாருக்கு உகந்தது:
இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள் தங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை இந்த ஃபண்டுக்காக தாராளமாக ஒதுக்கிக் கொள்ளலாம்.
யாருக்கு உகந்ததல்ல:
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
