Published:Updated:

ஷேர்லக் : சரிவுக்காக காத்திருக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

ஷேர்லக் : சரிவுக்காக காத்திருக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

ஷேர்லக் : சரிவுக்காக காத்திருக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

ஷேர்லக் : சரிவுக்காக காத்திருக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

Published:Updated:

‘‘நாணயம் விகடனுக்கு 10-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவா? பலே பலே, ஹேப்பி பர்த்டே டு நாணயம் விகடன்'' என்று வாழ்த்திய ஷேர்லக்கிடம் நாம் கேட்ட முதல் கேள்வி, ‘‘கோட்டக் மஹிந்திரா பேங்க், ஐஎன்ஜி வைஸ்யா பேங்க்கை வாங்கி இருக்கிறதே?’’ என்பதுதான்.

‘‘தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா பேங்க், ஐஎன்ஜி வைஸ்யா பேங்க்-ஐ ரூ.15,000 கோடி தந்து கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.  1000 ஐஎன்ஜி வைஸ்யா பேங்க் பங்கு களுக்கு 725 கோட்டக் மஹிந்திரா பங்குகள் அளிக்கப்பட இருக்கிறது. இந்த டீல் கோட்டக் மஹிந்திரா பேங்க் முதலீட்டாளர் களுக்கு லாபம் அளிப்பதாக இருக்கும் என்கிறார்கள். இந்த இரு வங்கிகளும் இணைவதால், தனியார் வங்கிகளில் நான்காவது பெரிய வங்கியாக மாறி யிருக்கிறது'' என்றார்.

‘‘பங்குச் சந்தை நெறிமுறைகளை செபி அமைப்பு வலுப்படுத்தி வருகிறதே?'' என்று கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் : சரிவுக்காக காத்திருக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

‘‘இன்சைடர் டிரேங்கை இந்திய பங்குச் சந்தை யிலிருந்து முற்றிலும் அகற்ற செபி திட்டமிட்டுள்ளது. நிறுவனப் பங்கின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வெளிவராத தகவல்கள் குறித்து நிறுவனங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அப்படி வெளிவரும்பட்சத்தில் அதற்கு நிறுவனத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் செபி சொல்லி இருக்கிறது.

நிறுவனத்தில் பங்குகள் வைத்திருந்து அதனை வர்த்தகம் செய்தால் மட்டுமே இன்சைடர் டிரேங் என்பதற்குள் வருவார்கள் என்பதையும் தாண்டி, நிறுவனம் தொடர்பான புள்ளிவிவரங்களை கையாள்பவர்கள் மற்றவர்களுக்கு தகவல் தந்தாலே அது இன்சைடர் டிரேங்-ன்கீழ் வந்துவிடும் என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும், பங்குகளின் டீலிஸ்ட் காலத்தை 137 நாள்களிலிருந்து 76 நாட்களாகக் குறைத்துள்ளது. சின்ன அளவில் விதிமுறைகளை மீறும் நபர்கள் மற்றும் நிறுவனங் களுக்கு சுலபமாக செட்டில்மென்ட் வழங்கவும் செபி திட்டமிட்டுள்ளது. இதன்படி பணம் மற்றும் நேரம் கணிசமாக மிச்சமாகும் என செபி நினைக்கிறது’’ என்றார்.

‘‘பங்குச் சந்தை உச்சத்தில் இருப்பதால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எச்சரிக்கையாக செயல்பட ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்களே?''  என்று விசாரித்தோம்.

‘‘சந்தை செங்குத்தாக ஏற ஆரம்பிக்கும்போதே பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உஷாராகி ரொக்க கையிருப்பை அதிகரித்திருக்கின்றன. இந்த நடவடிக்கை, சந்தை தடாலடியாக இறங்கினால் முதலீடு செய்யதான் என்கிறார்கள் விவரம் தெரிந்த அனலிஸ்ட்கள். ரிலையன்ஸ் ஸ்மால் கேப் குரோத் (15.67% - ரூ.1,236 கோடி) , யூடிஐ மிட் கேப் குரோத் (11.9% - ரூ.1,870 கோடி), ரிலையன்ஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி குரோத் (11.18% - ரூ.1883 கோடி), ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா குரோத் (8.94% - ரூ.1,236 கோடி) ஆகிய நிறுவனங்கள் நிறைய பணத்தை கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறது’’ என்றார்.

‘‘அதானி குழுமத்துக்கு வங்கிக் கடன் கிடைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறதே?’’ என்றோம்.

‘‘ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கப் பணிக்கான இந்தக் கடனை எஸ்பிஐ வங்கியிடமிருந்து அதானி குழுமம் வாங்குகிறது. இந்த நிலையில், ‘அதானி நிறுவனத்துக்கு கடன் வழங்கத்தான் ஒப்புதல்தான் அளித்திருக்கிறோம். இயக்குநர் கூட்டத்தில் விவாதித்து அதன்பிறகுதான் கடன் வழங்கப்படும்' என்று எஸ்பிஐ சொல்லியிருப்பது கவனத்துக்கு உரியது. தற்போதைய நிலையில், நிலக்கரி விலை குறைந்து வருவதால், அதானி குழுமம் கடனை சரியாக திரும்பக் கட்டுமா என்கிற சந்தேகம் கிளம்பி இருக்கிறது. மேலும், இந்தக் குழுமத்துக்கு ரூ.72,630 கோடிக்கு மேல் கடன் இருக்கிறது'' என்றார்.

‘‘எம்சிஎக்ஸ் அக்ரி கமாடிட்டியிலும் களம் இறங்குகிறது போலிருக்கே?’’ என்றார்.

‘‘கமாடிட்டி பங்குச் சந்தையான எம்சிஎக்ஸ், புதிய அக்ரி கமாடிட்டி கான்ட்ராக்ட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அக்ரி கமாடிட்டியையாவது அறிமுகம் செய்துவிட வேண்டும் என்று துடிக்கிறது'' என்றார்.
‘‘செப்டம்பர் காலாண்டில் பிஇ முதலீடு 27% உயர்ந்துள்ளதே?’’ என்று கேட்டோம்.

‘‘தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக இந்தியாவில் பிரைவேட் ஈக்விட்டி (பிஇ) முதலீடு அதிகரித்து வருகிறது. இது செப்டம்பர் காலாண்டில் 27% அதிகரித்து 301 கோடி டாலராக உயர்ந்துள்ளது’’ என்றவரிடம், ‘‘பங்குச் சந்தை முதலீடு எப்படி இருக்கும்?’’ என்று கேட்டோம்.
‘‘வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டிருக் கிறது. சென்செக்ஸ் 267 புள்ளிகள் அதிகரித்து 28335-ஆக அதிகரித்துள்ளது.

நிஃப்டி புள்ளிகள் 75 உயர்ந்து 8477-க்கு உயர்ந்துள்ளது. கோட்டக் பேங்க், ஐஎன்ஜி பேங்க்-ஐ வாங்குவதை அடுத்து வங்கிப் பங்குகள் கணிசமாக உயர்ந்தது.  சர்வதேச பங்குச் சந்தைகளின் வளர்ச்சி 2015-ம் ஆண்டில் சிறப்பாக இருக்கும் என மெரில் லிஞ்ச் கணித்திருக்கிறது’’ என்று சொன்னார் நம்பிக்கையோடு.

‘‘இந்திய சந்தையில் எஃப்ஐஐக்கள் முதலீடு எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டோம் அவர் புறப்படும் முன்பு.

‘‘பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வரும் அதேநேரத்தில், பாண்டுகளில் அதன் முதலீட்டை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டில் இதுவரைக்கும் 2,373 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. இது எஃப்ஐஐகளின் பாண்டு முதலீடு உச்சவரம்பான 2,500 கோடி டாலரில் 98% ஆகும். இதற்குமுன் 2010-ம் ஆண்டில் தான் அதிகபட்சமாக 1,005 கோடி டாலரை எஃப்ஐஐகள் பாண்டுகளில் முதலீடு செய்துள்ளன’’ என்றவர், ‘‘காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் நீரே நல்ல பங்குகளை சொன்னதால், நான் பிறகு சொல்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism