தங்கம்!
‘‘கடந்த நவம்பர் 7-ம் தேதி 1,131 டாலர் என்கிற அளவில் வர்த்தகமான ஒரு அவுன்ஸ் தங்கம், பின்பு ஏற்றம் கண்டு, தற்போது 1,200 டாலருக்கு மேல் உயர்ந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தது, அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தது, அடுத்த ஆண்டு மத்தியில்தான் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவது ஆகிய காரணங்களினால், மீண்டும் சிறிய இறக்கத்தை அடைந்து, 1,192 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1,215 டாலர் வரை செல்லலாம். இலக்கு விலை 1,165-1,140 டாலராக இருக்கும். இந்திய சந்தைகளில் தங்கத்தின் விலை நிலையாகவே வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளில் தங்கம் ரூ.26,800-26,900 வரை வர்த்தகமாகும்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளி!
வெள்ளியின் விலை சர்வதேச சந்தை களில் சற்று அதிகரித்து வர்த்தகமானது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தது, பொருளாதாரத் தகவல்கள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டியது போன்ற காரணங்களினால் வெள்ளியின் விலை சற்று ஏற்றம் கண்டது. ஆனால், சீனாவில் தொழில் துறை குறியீடுகள் இறக்கத்தில் உள்ளது, வெள்ளியின் விலை இறக்கத்துக்கு வழிவகுக்கும். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 16.2 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. வரும் வாரங் களில் விலை குறைந்து வர்த்தகமாகும் என்று கூறப்படுகிறது. இந்திய கமாடிட்டி சந்தையில் இறக்கத்தில் இருந்த வெள்ளியின் விலை 1.52% குறைந்து வர்த்தகமானது. இந்திய சந்தைகளில் வெள்ளியின் விலை சர்வதேச நிலவரங்களைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.

காப்பர்!

காப்பர் சர்வதேச சந்தைகளில் 0.4% விலை குறைந்தே வர்த்தகமானது. இதற்கு சீனாவில் உற்பத்தி குறைந்துள்ள தும், சர்வதேச அளவில் ஜூலை மாத தேவைக்குப் பின் இருப்பு 40,000 டன்னி லிருந்து ஆகஸ்ட் மாதம் 83,000 டன்னாக அதிகரித் திருப்பதும் தேவை குறைவாக உள்ளதையே காட்டுகிறது. இதனால் சர்வதேச சந்தைகளில் காப்பரின் விலை குறைந்தே வர்த்தக மாகிறது. ஐரோப்பாவில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையும் அடிப்படை உலோகங்களின் விலை குறையக் காரணமாகிறது. இந்திய கமாடிட்டி சந்தையிலும் காப்பர் விலை 1% குறைந்து வர்த்தகமாகிறது. இந்திய சந்தையில் சர்வதேச நிலவரங்களைப் பொறுத்து காப்பரின் விலை அமையும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய்!
கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தைகளில் சிறிய ஏற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த வாரத்தில் கணிசமாகக் குறைந்த கச்சா எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது. ஓபிஇசி உறுப்பினர்களான ஈரான், வெனிசுலா, லிபியா ஆகிய நாடுகள் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை சற்று நிலைபெற தொடங்கியது. அமெரிக்காவில் வீடுகளின் மறுவிற்பனை அதிகரித்துள்ளதும், தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்துள்ளதும் விலை நிலைபெறக் காரணமாகியுள்ளது.
கமாடிட்டியில் சந்தேகமா?
கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 04466802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!