Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

Published:Updated:

 ஏலக்காய் (CARDAMOM)

சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. கடந்த வாரத்தில் பெரும்பாலான ஏலக்காய் சந்தைகளில் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

கடந்த வாரம் செவ்வாய் அன்று  மட்டும் சந்தையின் வரத்து 102 டன்னாக இருந்தது. அன்றைய தினத்தின் ஒரு கிலோ ஏலக்காயின் அதிகபட்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலை முறையே ரூ.1,033 மற்றும் ரூ.779 ஆகும். நடப்பு ஆண்டில் ஏலக்காய் உற்பத்தியானது 20,000 டன்னாக இருக்கும் என்றும், இது இதற்கு முந்தைய ஆண்டில் 22,000 டன்னாக இருந்தது என்றும் ஏலக்காய் வர்த்தகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல, இந்திய அரசானது இந்தியாவின் மொத்த ஏலக்காய் உற்பத்தி 2013-14-ம் ஆண்டில் 21,000 டன்னாக இருக்கும் என்றும், இது இதற்கு முந்தைய ஆண்டில் 18,000 டன் னாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்ரி கமாடிட்டி!

 கொத்துமல்லி (CORIANDER)

அதிக உற்பத்தி இருக்கும் என்கிற காரணத்தினால் சென்ற வாரத்தில் கொத்துமல்லி விலை குறைந்து காணப்பட்டது. இதற்கு மிக முக்கியக் காரணம், அதிக விலை கிடைக்கும் என்கிற எண்ணம் விவசாயிகள் மத்தியில் அதிகரித்திருப்பதுதான். இதனால் வேறு பயிர்களை உற்பத்தி செய்துவந்த ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச விவசாயிகள் கொத்துமல்லிக்கு மாறினார்கள். இருப்பினும், அரசாங்கத் தின் மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2013-14 அக்டோபர்-செப்டம்பர் மாதங்களில் 4.28 லட்சம் டன் கொத்துமல்லி உற்பத்தி இருக்கும் என்று தெரிகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.24 டன்களாக இருந்தது.

 மஞ்சள் (TURMERIC)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை குறைவு, மஞ்சள் சந்தைக்கு அதிக வரத்துக் காணப்பட்டது ஆகிய காரணங்களால் கடந்த வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து காணப்பட்டது. கடந்த புதன்கிழமையில் ஈரோடு மஞ்சள் மண்டிக்கு சுமார் 6,000 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) வரத்து காணப் பட்டது. இது, இதற்கு முந்தைய தின வரத்தைவிட அதிகமாகும்.

அக்ரி கமாடிட்டி!

இருப்பினும், மஞ்சள் அதிகம் உற்பத்தி செய்யும் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி குறைந்து காணப்படுவது, வருங்காலத்தில் மஞ்சள் விலைக்கு சாதகமாக அமையும். நடப்பு ஆண்டில் மஞ்சள் உற்பத்தி 35-37 லட்சம் பைகளாக (ஒரு பை என்பது 75 கிலோ) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, இதற்கு முந்தைய ஆண்டில் 52 லட்சம் பைகளாக இருந்தது. வர்த்தகர்கள் சொல்லியிருக்கும் தகவல்களின்படி, நிஜாமாபாத் (12%) மற்றும் மஹாராஷ்டிரா (13%) ஆகிய இடங்களில் மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது. இதுவும் மஞ்சள் விலைக்கு சாதகமாக அமையும்.

 ஜீரகம் (JEERA)

அக்ரி கமாடிட்டி!

கடந்த வாரம் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது. இதற்கு மிக முக்கியக் காரணம் தேவை அதிகரித்தது தான்.

ஜீரகம் உற்பத்தியாகும் ஏரியாக்களில் பயிருக்கு தேவையான வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலை காணப்பட்டதால் பயிர் விதைப்பு தாமதமாகி வருகிறது. விவசாயிகள் கொத்துமல்லி போன்ற பயிர் விதைப்புக்கு அதிக ஆர்வம்காட்டி வருவதால், எதிர்பார்க்கப்பட்ட ஜீரகப் பயிர் விதைப்பு ஏரியாக்களின் அளவு குறையலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இருப்பினும் ஏற்றுமதி தேவை அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தைகளில் வரத்துக் குறைவு போன்ற காரணங்கள் ஜீரகத்தின் விலைக்கு சாதகமாக இருக்கும். ஏப்ரல் 2014-மார்ச் 2015-க்குள் 1,300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சம் டன் ஜீரகம் ஏற்றுமதி செய்யக் கணக்கிடப்பட்டுள்ளதாக ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism