ரூபாய்-1

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரப் பாடத்தில் அதிகமாகக் கேட்கப்படும் ஒருசில சொற்களை இப்போது பார்க்கலாம்.நடப்புக் கணக்கு இருப்பு (Current Account Balance) என்பது ஒரு நாட்டின் சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் இடையேயான இடைவெளியாகும். நடப்புக் கணக்கு இருப்பு சாதகமாக இருக்கிறது என்றால், ஒரு நாட்டின் சேமிப்பின் ஒரு பகுதி வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.

மாறாக, நடப்புக் கணக்கு இருப்பு பாதகமாக இருக்கிறது என்றால், ஒரு நாட்டின் உள்நாட்டு முதலீட்டில் ஒரு பகுதி வெளிநாட்டவர் சேமிப்பில் இருந்து பெறப்பட்டுள்ளது என்று பொருள்.

வரிசாரா வர்த்தகத் தடைகள் (Non Tariff Trade Barriers) என்பது ஒரு நாடு, வெளிநாட்டில் இருந்து தன் நாட்டுக்குள் இறக்குமதியாகும் பொருட்களைக் கட்டுப்படுத்த வரிவிதிப்பைத் தவிர, வேறு சில தகுதரங் களையும் (Quality Standards), சட்ட ரீதியான கட்டுப்பாடு களையும் (உற்பத்தியில் குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்தக்கூடாது), சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுப்பாடு களையும் காரணம் காட்டுவதைக் குறிக்கும்.

அதிவிருப்ப தேசக் கொள்கை (Most Favoured Nation Policy) - உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த 1995-க்குப் பின் இந்த சொற்றொடர் செய்திகளில் அதிகமாக இடம் பிடிக்கத் தொடங்கியது. ஒரு நாடு, தன்னோடு வர்த்தகம் செய்யும் மற்றொரு நாட்டுக்குக் கொடுக்கும் சலுகைகளை உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள எல்லா நாடுகளுக்கும் சமமாக கொடுக்க வேண்டும் என்பதே அதிவிருப்ப தேசக் கொள்கையாகும். இந்தக் கொள்கை சமத்துவ கோட்பாட்டின் (Idea of Equality) அடிப்படையிலானது என்கிறது உலக வர்த்தக நிறுவனம்.

மைஸரி இண்டெக்ஸ் (Misery Index) என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இது வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் மற்றும் பணவீக்கத்தின் விகிதம் இரண்டையும் சேர்த்து குறிக்கும் ஒரு குறியீட்டு எண்ணாகும். இந்தக் குறியீட்டு எண் வேலையில்லா மக்களின் வாழ்க்கைத் தரத்தை பணவீக்கம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அளவெடுத்துச் சொல்கிறது.

வாழ்க்கைத் தரம் (Quality of Life) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டி ருப்போம். சமூக மேம்பாட்டின் முக்கிய அளவீடாகக் கருதப்படும் வாழ்க்கைத் தரம் என்ற சொற்றொடர் மூன்று காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. வயது வந்தோர் எழுத்தறிவு விகிதம் (Adult Literacy Rate), சிசு இறப்பு விகிதம் (Infant Mortality Rate) மற்றும் சராசரி ஆயுட்காலம் (Life Expectancy) ஆகிய மூன்றுமே அந்தக் காரணிகள்.

இரட்டைப் பற்றாக்குறை (Twin deficit) என்ற வார்த்தையைப் பொருளாதார வல்லுநர்கள் அவ்வப்போது பயன்படுத்துவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஒரு நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் சேர்த்து குறிக்கும் வார்த்தையே இரட்டைப் பற்றாக்குறை என்பது. பெரும் பொருளாதாரக் கோட்பாடுகளின்படி (Macroeconomic Theories), ஒரு நாடு தொடர்ந்து இரட்டைப் பற்றாக்குறையைச் சந்தித்து வந்தால், அந்த நாட்டின் பண மதிப்பு திடீரென வேகமாக வீழ்ச்சியடையும் என்பது அறியத்தக்கது.
மூலதனத் திரட்சியில் (Capital Formation) ரவுண்ட் ட்ரிப்பிங் (Round Tripping) என்ற வார்த்தை அவ்வப்போது பத்திரிகை செய்தி களில் இடம் பிடிப்பதை நீங்கள் பார்த்திருக்க லாம். இந்த வார்த்தை பொதுவாக கம்பெனி நிர்வாகத்தில் பயன்படுத்தப்படுவது. இதை ஒருவித பண்டமாற்று என்றும் சொல்வார்கள். ஒரு நிறுவனம், தான் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஒரு சொத்தை மற்றொரு நிறுவனத்துக்கு விற்பதாகச் செய்யும் ஒப்பந்தத்தில் பின்னர் தக்கசமயத்தில் விற்ற விலைக்கே அதை மீள்வாங்கிக் கொள்வதாக குறிப்பிடுவதை கம்பெனி நிர்வாகத்தில் ‘ரவுண்ட் ட்ரிப்பிங்’ என்பார்கள்.

இது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் உக்திகளில் ஒன்று என்று பொருளாதார வல்லுநர்கள் விமர்சிப்பார்கள். இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை சில குறிப்பிடத்தக்க முதலீடுகள் மூலம் வெள்ளையாக்கி இந்தியாவுக்கு கொண்டு வருவதையும் இந்த வார்த்தைக் குறிக்கிறது.

ரூபாய் - 2

தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார கொள்கை இந்தியாவில் மிதமிஞ்சிய நுகர்வை யும், அளவுக்கு அதிகமான வெள்ளைப் பொருள் உற்பத்தியையும் ஏற்படுத்தி உள்ளது என்ற கருத்தை விளக்குமாறு சில ஆண்டுகளுக்கு முன் ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் ஒரு வினா கேட்கப்பட்டது.

தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் 1991-ல் அறிமுகப் படுத்தப்பட்டபின் இந்திய பொருளாதாரத்தில் அந்நிய நேரடி முதலீடு, அந்நிய தொழில் நுட்பங்களின் வருகை ஆகியவை அதிகரித்த தால் மத்தியதர மக்களைக் குறிவைத்து வெள்ளைப் பொருட்கள் எனப்படும் ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தி அதிகமானதாக பொருளாதார அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டி விலையில் ஆடம்பரப் பொருட்களை விளம்பரப்படுத்தி விற்கத் தொடங்கின. இதனால், இந்திய மத்தியதர வர்க்கம் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டது.

இந்திய வங்கித் துறை பற்றி பேசும்போது நரசிம்மம் குழுவின் பரிந்துரை குறித்து செய்திகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். நரசிம்மம் குழு 1991-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. எம்.நரசிம்மம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஆவார். இந்தியாவின் நிதியமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக இந்த கமிட்டி ஆய்வு செய்தது. 1991-ம் ஆண்டு நரசிம்மம் கமிட்டி மத்திய நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்த அறிக்கை 1995-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

நரசிம்மம் கமிட்டி வங்கித் துறையில் நான்கடுக்கு வங்கி முறையை பரிந்துரை செய்தது. நான்கடுக்கு வங்கி முறையில், மூன்று அல்லது நான்கு சர்வதேச வங்கிகளும், 8 அல்லது 10 தேசிய வங்கிகளும் முதல் இரண்டு அடுக்குகளில் செயல்படும். மூன்றாவது அடுக்கில் மண்டல வங்கி களும், நான்காவது அடுக்கில் ஊரக வங்கி களும் செயல்படும்.

மேலும், இந்த கமிட்டி அறிக்கை, வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் தொடங்கப்படுவதை ஆதரித்ததோடு, இந்தியா வில் தொடங்கப்படும் வெளிநாட்டு வங்கிகளும், இந்தியாவின் உள்நாட்டு வங்கிகளும் சம அந்தஸ்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
மத்திய அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க எஸ்எல்ஆர்., சிஆர்ஆர் போன்ற வங்கித் துறை கருவிகளைப் பயன்படுத்துவதை குறை கூறியது. (எஸ்எல்ஆர், சிஆர்ஆர் குறித்து இந்தத் தொடரில் ஏற்கெனவே விளக்கியுள்ளோம்.) மேலும், வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென்றும், வங்கிகளின் கடன் கொடுக்கும் தன்மையை ரிசர்வ் வங்கி பெருமளவுக்கு கட்டுப்படுத்தக்கூடாது என்றும் இந்த அறிக்கை கூறியது.

வர்த்தக வங்கிகளை நேரடியாக ரிசர்வ் வங்கியும், மறைமுகமாக நிதி அமைச்சகமும் கட்டுப்படுத்தும் இரட்டை கட்டுப்பாட்டு நிலை மாற வேண்டும் என்றும், இந்த கமிட்டி பரிந்துரை செய்தது. இந்த கமிட்டியின் பல பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன. இருப்பினும், அவை எந்த அளவுக்கு முழுமையாக கடைப்பிடிக்கப் படுகின்றன என்பதைப் பற்றி அவ்வப்போது பத்திரிகைகளில் வரும் பொருளாதார கட்டுரை களில் விவாதிக்கப்படுவதை நீங்கள் கவனிக்கலாம்.

வன் பணம் (Hard Currency), மென் பணம் (Soft Currency) என்ற வார்த்தைகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அமெரிக்கன் டாலர், யூரோ போன்றவை வன் பணங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன. வன் பணம் என்பது அதிக லாபம் கிடைக்கும் பகுதிக்கு எளிதாக நகர்ந்து செல்லும் வெளிநாட்டு பணம் என்று வரையறுக் கப்படுகிறது.

அதேசமயத்தில், மென் பணம் என்பது, குறைந்த மாற்றுவிகிதம் கொண்ட பணமாகும். அந்தக் குறைந்த மாற்றுவிகிதத்துக்கு காரணம், அந்தப் பணத்தை தனது நாணயமாகக் கொண்டுள்ள நாட்டில் நிலவும் பாதக அந்நிய செலுத்துகை (Unfavourable Balance of Payments) அல்லது அந்த நாட்டில் அந்நிய செலாவணி வீழ்வதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

ரூபாய் - 3

இந்தத் தொடரில் கடந்த 30 வாரங்களாக பல்வேறு போட்டித் தேர்வு பொருளாதார செய்திகளைப் பேசிவந்துள்ளோம். போட்டித் தேர்வில் பொருளாதாரம் என்பது கடினமானப் பாடமாக கருதப்படாமல் தேர்வு எழுதுபவர் களால் எளிமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தத் தொடர் தொடங்கப்பட்டது.

இந்தத் தொடர் வெளிவந்தபோது தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருந்து போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள் இந்தத் தொடர் பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தும், இந்தப் பகுதியில் இன்னென்ன விஷயங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தும் வந்தார்கள். அந்த அடிப்படையிலேயே தேர்வர்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார விஷயங்கள் போட்டித் தேர்வு வினாக்கள் அடிப்படையில் இந்தப் பகுதியில் விளக்கப்பட்டன.

அதேபோல், நாணயம் விகடன் வாசகர்களும் இந்தத் தொடரோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு, இந்தத் தொடரில் அவ்வப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையை எழுதி அசத்தினார்கள்.

‘‘பொது அறிவு என்பது ஒரு கடல். அதில் மூழ்கிவிடக் கூடாது. நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்பது பொது அறிவு பற்றிய பொன்மொழி களில் ஒன்று. போட்டித் தேர்வு பொதுஅறிவு தாள்களில் கேட்கப்படும் பொருளாதாரப் பாடம் தொடர்பான வினாக்களுக்கும் இந்த மேற்கோள் பொருந்தும்.

போட்டித் தேர்வில் கேட்கப்படும் பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடைகள் அளிப்பதற்கு, தேர்வர் ஒருவர் பொருளாதார நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, பொருளாதாரத்தைப் புரிந்து கொண்ட சாதாரண இந்தியக் குடிமகனாக இருந்தாலே போதும்.

பொருளாதாரம் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ளது. அது தொடர்பான அடிப்படை விவரங்கள், சில கலைச் சொற்கள், அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள், உலக பொருளாதார நிறுவனங் கள், மக்கள் நலன்கருதி கொண்டு வரப்படும் பொருளாதாரம் சார்ந்த திட்டங்கள், அவற்றின் விளைவுகள் மற்றும் விமர்சனங்கள்... இவை தான் போட்டித் தேர்வு பொருளாதாரத்தின் சாரமாக இருக்கிறது என்பதை இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்தவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் எனில், அதுவே இந்தத் தொடரின் வெற்றியாக அமையும். இது ஒரு தொடக்கம்தான். இந்தப் பயணத்தை நீங்கள் தொடர்ந்தால், நீங்கள் ஐஏஎஸ் ஆவது உறுதி. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

(நிறைவு பெற்றது)