நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !

செ.கார்த்திகேயன், ச.ஸ்ரீராம்

கடந்த பத்து வருடங்களில் காப்பர் எப்படி இருந்தது, எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து சொல்கிறார் குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் தினேஷ் பாலாஜி.

 முக்கிய உலோகம்!

‘‘அடிப்படை உலோகங்களில் இரும்பு, அலுமினியத்துக்கு அடுத்து அதிகமாகப் பயன்படும் உலோகங்களில் மிகவும் முக்கியமானது காப்பர். 2004-ல் சரிவில் இருந்த காப்பர் 2005-ல் ஏற்றம் காணத் துவங்கியது. 2004-ம் ஆண்டு ஒரு டன் காப்பர் மிகக் குறைந்த விலையான ரூ.1,37,781-ஆக இருந்தது. 2008-ல் ரூ.3.4 லட்சமாக உயர்ந்து, சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக ரூ.1.4 லட்சமாகக் குறைந்தது. 2010-ல் மீண்டும் ரூ.4.40 லட்சத்தைத் தொட்டு ஒரு டன் காப்பர், தற்போது (நவம்பர் மாத கான்ட்ராக்ட்) ரூ.4,03,150-ஆக  உள்ளது.

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !

 இனி என்ன...?

2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் காப்பருக்கான தேவை அதிகமாக இருக்கும் என்பதால் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !

ஆனால், 2016-17ல் இதே நிலையிலேயே காப்பர் வர்த்தகமாகும் என்ற சூழல் இருப்பதால், விலையில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படும். அதுமட்டுமின்றி, 2004-ம் ஆண்டு் நிகழ்ந்தது போன்ற சரிவை சந்திக்காமல் இருக்க சுரங்கங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதும் விலையை கணிசமாகக் குறையாமல் தடுக்கும். கடந்த பத்து வருடங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, காப்பரின் விலை முதலீடு மற்றும் நெறிமுறைகள் காரண மாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் வெள்ளியின் விலை எப்படி இருக்கிறது, அடுத்த 10 ஆண்டு களில் எப்படி இருக்கும் என்பது பற்றி கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் விளக்குகிறார்.

‘‘2004-க்குப் பிறகுதான் வெள்ளியின் விலை அதிகரிக்கத் துவங்கியது. 2005-ம் ஆண்டு சீனா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாததாலும், ஊகங்களின் அடிப்படையிலும் விலை அதிகரித்து உச்சத்தில் வர்த்தகமானது.
2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை சர்வதேச நாடுகள் சந்தித்ததும் விலையேற்றத்துக்கு  காரணமாக அமைந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 7 டாலரில் இருந்த ஒரு அவுன்ஸ் வெள்ளி, அதிகபட்சமாக 44 டாலர் வரை சென்று, தற்போது 16.58 டாலர்களாக விலை போகிறது.

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !

அதிகரித்த உற்பத்தி!

உலக அளவில் வெள்ளி உற்பத்தி செய்யும் நாடுகளான கவுதமாலா, மெக்சிகோ, சிலி மற்றும் பெரு நாடுகள் 2014-ல் 3.5%, அதாவது 868 மில்லியன் அவுன்ஸ்கள் உற்பத்தி செய்தது.

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !

இது சென்ற வருடம் 819 மில்லியன் அவுன்ஸ் களாக இருந்தது. ஆனால், சென்ற வருடத்தைக் காட்டிலும் 2014-ல் 6.7% தேவை குறையக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தொழில்ரீதியான மற்றும் ஆபரணத் தேவைகள் சிறிய அளவிலும், வெள்ளிக்கட்டி, காசுகளுக்கான தேவைகள் பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக, வெள்ளியின் பயன்பாடு என்பது சோலார் மின் உற்பத்தியில் அதிகம் என்று கூறப்படுகிறது.

2011-ல் Photovoltiac-PV பயன்பாட்டுக்கு  65 மில்லியன் அவுன்ஸ் என்ற அளவில் தேவை இருந்தது. ஆனால், 2014-ல் பாதியாகக் குறைந்து 35 மில்லியன் அவுன்ஸ்களாக உள்ளது.

விலை உயருமா?

கடந்த ஜனவரி துவங்கி அக்டோபர் வரையில் இந்தியாவின் வெள்ளி இறக்குமதியை சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது 14% அதிகரித்துள்ளது.

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !

இனிவரும் நாட்களில் டாலரின் மதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் விலை 12 டாலர் வரைகூட குறையலாம்.

இந்திய சந்தைகளில் வெள்ளியின் விலை 1 கிலோ ரூ.30,000-க்கு கீழ் செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே, வெள்ளியின் விலைப்போக்கை உன்னிப்பாக கவனிப்பது அவசியம்.’’ 


முக்கியமான இரண்டு விவசாய விளைபொருட்களின் விலைப்போக்கு பற்றி சொல்கிறார் ஜேஆர்ஜி வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார்.

‘‘நறுமணப் பொருட்களின் அரசி என்று அழைக்கப்படும் ஏலக்காய், கவுதமாலாவில்தான் அதிகமாக உற்பத்தியாகிறது. ஓர் ஆண்டில் உலக அளவில் உற்பத்தியாகும் ஏலக்காய் அளவு 35,000 டன்னாக இருந்து வருகிறது. இதில் கவுதமாலாவின் பங்கு 66% (25,000 டன்). கடந்த இருபது வருடங் களாகவே உலக அளவில் ஏலக்காய் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
 

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !

மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஏலக்காயை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் கேரளா (70%), கர்நாடகா (20%), தமிழ்நாடு (10%) ஆகிய மாநிலங்களில் அதிகமாக ஏலக்காய் விளைவிக்கப்படுகிறது.

இதுவரை..!

2007-2010 வரையிலான காலகட்டத்தில் தேவை காரணமாக ஏலக்காய் விலையானது அதிகரித்துக் காணப்பட்டது. அப்போது ஒரு கிலோ ஏலக்காய் விலை 2,000 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது.
இதன்பிறகு ஏற்பட்ட தேவை குறைவு மற்றும் ஏற்றுமதி தேவை குறைவு காரணமாக ஒரு கிலோ ஏலக்காய் ரூ.500-க்கு குறைந்து வர்த்தகமானது. 2012-ம் ஆண்டின் இறுதியில் ரூ.1,600 என்கிற அளவில் நிலைபெற்றது.

இனி..!

நடப்பு ஆண்டில் ஏலக்காய் உற்பத்தி போதிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பருவகால விலை நிலவரப்படி, டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் விலை அதிகரிப்பு இருக்கும். அந்தசமயத்தில் ஒரு கிலோ ஏலக்காய் விலை ரூ.1,200-1,300-க்கு வர்த்தகமாகும்.

அதேசமயம், குறைந்தால் ரூ.600 என்கிற அளவிலும், அதிகரித்தால் ரூ.1,300 என்கிற அளவிலும் வர்த்தகமாகும்.’’

உலகத்திலேயே மஞ்சளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. உலகத்தின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 80-85% மஞ்சளானது இந்தியாவில் உற்பத்தியாகிறது. ஓர் ஆண்டுக்கு மொத்தம் 6-7 லட்சம் டன் வரை மஞ்சள் உற்பத்தியாகிறது.

இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மஞ்சளானது அதிக அளவில் உற்பத்தி செய்யப்படு கிறது.

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !

இந்தியாவில் உற்பத்தியாகும் மஞ்சள் உள்நாட்டு தேவை போக, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. கமாடிட்டி வர்த்தகத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு சந்தைதான் முக்கியமானது.

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !

இதுவரை..!

இது 2008-11-ம் ஆண்டில் மஞ்சள் தேவை அதிகரித்துக் காணபட்டபோது, அதன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் விலை உயர்ந்து வர்த்தகமானது. அதனால் 2010-ம் ஆண்டின் இறுதியில் ஒரு குவிண்டால் மஞ்சள் 16,000 ரூபாய்க்கு வர்த்தக மானது. அதன்பிறகு விலை இறக்கத்தைச் சந்தித்து, 2012-ல் 3,000 ரூபாய்க்கு வந்தது. தற்போது உற்பத்தியானது நிலைபெற்றிருப்பதால், 2012லிருந்து ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.3,000-7,600 வரை வர்த்தகமாகி வருகிறது.

இனி..!

அதிகமாக மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலமான தெலங்கானாவில் போதுமான அளவு மழை இல்லாத காரணத்தால், நடப்புப் பருவத்தில் 20-30% மஞ்சள் உற்பத்தி குறையும் என்றும், இந்த உற்பத்திக் குறைவை கையிருப்பில் உள்ள மஞ்சள் பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மஞ்சளுக்கான அறுவடை வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு குவிண்டால் ரூ.5,000 முதல் 7,000 அளவில் வர்த்தகமாகும். இது 2015 இரண்டாம் அரையாண்டில் அதிகரித்து ரூ.8,000-8,500 என்கிற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.’’

கவனிக்க வேண்டிய கமாடிட்டிகள் !