Published:Updated:

வாழ்க்கையை மெருகேற்றிய மிளகாய்ப்பொடி!

சுஜாதா, இப்ப தொழிலதிபர்...பா.சிதம்பர பிரியா,  படங்கள்: எல்.ராஜேந்திரன்

வாழ்க்கையை மெருகேற்றிய மிளகாய்ப்பொடி!

சுஜாதா, இப்ப தொழிலதிபர்...பா.சிதம்பர பிரியா,  படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:

குடும்பத் தலைவி டு தொழிலதி பராகி இருக்கிறார், சங்கரன் கோவிலைச் சேர்ந்த சுஜாதா சந்திரன். தன்னை ஏணி ஏற்றி விட்ட ஏழு வருட மிளகாய் வத்தல் பொடி தயாரிப்பு அனுபவங் களையும்; கிலோவில் தொடங்கி, டன் வரையிலான தன் தயாரிப்பு வளர்ச்சியையும் நம்மிடம் பகிர்கிறார் சுஜி மிளகாய்த்தூள் உரிமையாளர் சுஜாதா!

வாழ்க்கையை மெருகேற்றிய மிளகாய்ப்பொடி!

''என் கணவர் பி.ஏ.எஸ்.சந்திரன், வத்தல் மண்டி வெச்சிருக் கார். விவசாயிகள்கிட்ட இருந்து மிளகாய் வத்தல்களை வாங்கி விற்பனை செய்றார். என் பையன் விஷ்ணுவசந்த், எம்.பி.ஏ படிக்கிறான். பொண்ணு ஷண்முகப்பிரியா, பி.டெக் படிக்கிறா. இவங்க ரெண்டு பேரும் பள்ளிப் படிப்பை முடிக்க இருந்த நிலையில, 'பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க... நாம ஏதாச்சும் சுயதொழில் பண்ணலாமே’னு தோணுச்சு. 'கையில் வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைவானேன்'னு சொல்ற மாதிரி, கணவர் மிளகாய் வத்தல் வியாபாரம் செய்றதால, வத்தல் பொடி தயாரிக்கலாம்னு முடிவெடுத்து, அவர்கிட்ட சொன்னேன். 'சூப்பர் ஐடியா!’னு ஊக்கம் கொடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் கிலோ கணக்கில் தயார் செய்து நண்பர்கள், பக்கத்து வீடுகள், ஹோட்டல்களுக்குக் கொடுத்தேன். கெமிக்கல்ஸ் எதுவும் சேர்க்காம, தரமான வத்தல்களால் தயார் செஞ்சிருந்ததால, வாங்கின எல்லாருக்குமே பிடிச்சுப்போக, வாடிக்கை யாளர்கள் ஆனாங்க. ஒரு பக்கம் வத்தல் பொடி யோட நெடி, காரம் எல் லாம் உடல்நிலையை சிரமப்படுத்தினாலும்,

வாழ்க்கையை மெருகேற்றிய மிளகாய்ப்பொடி!

நாமளே சொந்தமா தொழில் பண்றோம், அது வெற்றிகரமா போகுது, நம்ம உழைப்பில் சம்பாதிச்ச காசு கையில் இருக்குங்கிற சந்தோஷமே எல்லா கஷ்டத்தையும் ஈஸியா கடக்க வெச்சது!'' எனும் சுஜாதா, இந்தக் காலகட்டத்தில் பி.பி.ஏ, எம்.எஸ்ஸி என்று மேற்படிப்பும் படித்திருக்கிறார்.

''தொழில் சம்பந்தமா பெரிய பெரிய நிறுவனங் களுக்கு வாய்ப்புக் கேட்கப் போகும்போது, "நாம இன்னும் கொஞ்சம் படிச்சிருக்கலாமே'னு தோணும். அதனால, என் பையன் காலேஜ்ல சேர்ந்தப்போ, நானும் தொலைதூரக்கல்வியில பி.பி.ஏ சேர்ந்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அடுத்து மனவளக்கலை  யோகாவில் எம்.எஸ்ஸி படிச்சு... 85 சதவிகித மதிப்பெண்களோட தேர்ச்சி பெற்றேன். படிப்பு, தொழில், குடும்பம்னு பல பொறுப்புகள சுமந்த நிலையில, என்னை சோர்வடையாம காப்பாத்தினது மனவளக்கலைதான்.

வாழ்க்கையை மெருகேற்றிய மிளகாய்ப்பொடி!

அதுக்கு அப்புறம் பெரிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு கேட்கச் செல்லும் சமயங்களில், நான் ஒரு பி.பி.ஏ,   எம்.எஸ்ஸி கிராஜுவேட்னு அறிமுகப்படுத்திக்கும் போது, மனசு முழுக்க தன்னம்பிக்கை நிறைஞ்சிருக்கும். ஸ்நாக்ஸ் மற்றும் ஊறுகாய் கம்பெனிகளுக்கு சாம்பிள் கொடுத்தேன். நிறம், மணம், காரம் சரியான அளவில் இருந்ததால, ரெகுலர் ஆர்டர் கிடைச்சுது. பெரிய ஊறுகாய் நிறுவனங்களுக்கு வத்தல் பொடி அனுப்பும்போது, ஏற்றுமதி தரத்தை உறுதிபடுத்துறதுக்காக மூலப்பொருளான வத்தல் பொடிக்கு நாங்களும் தரச்சான்று பெற வேண்டி இருந்தது. கும்மிடிப்பூண்டியில் உள்ள 'ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா’வுக்கு ஒவ்வொரு 'லாட்’, அதாவது ஒவ்வொரு மாதமும் மொத்தமாகத் தயாரிக்கும்போது சாம்பிள் அனுப்பி, 'தரமானது, கலப்படம் ஏதும் இல்லை’னு உறுதிச்சான்று வாங்கி அனுப்பினேன்!'' என்றவர், தன் தொழில் சூத்திரங்கள் சொன்னார்.

வாழ்க்கையை மெருகேற்றிய மிளகாய்ப்பொடி!

''விவசாயிகள்கிட்ட நேரடியா வத்தல்களை கொள்முதல் செய்றதோடு, டிமாண்டுக்கு ஏற்ப மற்ற மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்வேன். நான்கு வகை மிளகாயிலயும் முதல் தர வத்தல்களை நிறம், காரம், மணம், சுவைக்கு ஏற்ப வாங்கி, தரம் பிரிச்சு ஸ்டாக் செய்வேன். இதையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்து அரைக்கிறதுதான் ஒருத்தர் எங்க பொடியை ஒரு முறை வாங்கினா, தொடர்ந்து வாங்க வைக்கக் காரணம். எந்த விகிதத்தில் கலந்து அரைக்கிறோம்கிறது கம்பெனி சீக்ரெட்!'' என்று சிரிக்கும் சுஜாதா,  

''ஆர்டருக்கு ஏற்ப மாதம் 5 -  9 டன் வரை வத்தல் பொடியை தயாரிச்சு, காற்று நுழையாதபடி டபுள் பேக்கிங், ஸ்டிச்சிங்னு கவனம் செலுத்தி, ஃபிரெஷ்ஷா டெலிவரி அனுப்பிடுவேன். குறித்தநேரத்தில்

வாழ்க்கையை மெருகேற்றிய மிளகாய்ப்பொடி!

டெலிவரி செய்றது, ஒவ்வொரு முறையும் 'எங்க பொடி திருப்தி அளிக்குதா?’னு கேட்டு, குறைகளை நிவர்த்தி செய்றது இதெல்லாம்தான் என் தொழில் வளர்ச்சிக்கு காரணம். எனக்கு ரோல் மாடல், என் தாத்தா பி.ஏ.சுப்பையா. உழைப்பின் அருமையையும் அதன் பலனையும் எங்களுக்கு வாழ்ந்து காட்டி நிரூபிச்சவர். அந்த உந்துதல்தான், 'சும்மா இருக்கக் கூடாது, ஏதாவது தொழில் தொடங் கணும்’னு ஆர்வத்தைத் தூண்டி, இந்தளவுக்கு முன்னேற வெச்சிருக்கு!'' எனும் சுஜாதா, மிளகாய் வத்தலின் விலைக்கு ஏற்ப, வத்தல் பொடியின் விலையை நிர்ணயிக்கிறார். இவரின் சூப்பர் குவாலிட்டி பொடி கிலோ 120 ரூபாய்க்கும், ஏ குவாலிட்டி பொடி கிலோ 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

''என் அடுத்த இலக்கு, இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வத்தல்களைக் கொண்டு, ஆர்கானிக் வத்தல் பொடி தயாரிக்கிறது!''

- மூக்கில் ஏறும் கார நெடியை சுகமாக சுவாசிக்கிறார் அந்த உழைப்பாளி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism