Published:Updated:

BIZ பிட்ஸ் !

ச.ஸ்ரீராம்

BIZ பிட்ஸ் !

ச.ஸ்ரீராம்

Published:Updated:
BIZ பிட்ஸ் !

வசூலில் சாதித்த பிகே!

சமீபத்தில் அமீர்கான், வேற்றுகிரக மனிதனாக நடித்து வெளியான பாலிவுட் திரைப்படம் பிகே. இது வெளியான முதல்நாளில் 21 கோடி ரூபாயையும், 5 நாட்களில் 100 கோடி ரூபாயையும் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் சாதனை அமீர்கானின் முந்தைய வசூல் சாதனைப் படமான ‘தூம் 3’ வசூலை முறியடித்துள்ளது. போஸ்டரிலேயே சர்ச்சைக்கு உள்ளான இந்தப் படம், இந்தச் சாதனையைப் புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் வசூல் ராஜா!

BIZ பிட்ஸ் !

ஆர்பிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்க சமீபத்தில் உச்சவரம்பை  கொண்டு வந்தது ஆர்பிஐ. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்குத் தொடர,  இதுகுறித்து ஆர்பிஐயிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

இப்பதான் கேக்க ஆரம்பிச்சுருக்காங்க!

விலையேறிய ஃபேஸ்புக்!

ஏக உற்சாகத்தில் இருக்கிறார் மார்க் ஜூகர்பெர்க். சமூக வலைதளமான ஃபேஸ்புக் 2012-ம் ஆண்டு அமெரிக்கப் பங்குச் சந்தையில் 34 டாலர் விலையில் பட்டியலிடப்பட்டது. பின்னர் 18 டாலர் வரை குறைந்து வர்த்தகமானது. ஃபேஸ்புக்கில் போட்ட பணம் அவ்வளவுதான் என்று சிலர் மிரண்டு போனார்கள். ஆனால், மார்க் ஜூகர்பெர்க் கலங்கவே இல்லை. தனது நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு அமைதியாக பாடுபட்டார். விளைவு, 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்கு வேகமான வளர்ச்சிகண்டு 60 டாலர்களைத் தாண்டி வர்த்தகமானது. தற்போது வருட இறுதியில் பங்கு விலை நல்ல வளர்ச்சியடைந்து, 80 டாலர் களைத் தொட்டு வர்த்தகமாகிறது. முழுசாக மூன்று ஆண்டுகள்கூட முடியவில்லை. இதற்குள் மார்க்கின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டதில் பலருக்கும் ஆச்சர்யம்.

நீங்க ‘ஷேர்’ பண்றதை நாங்க ‘லைக்’ பண்றோம்!

பரிசை நன்கொடை அளித்த எலானோ!

BIZ பிட்ஸ் !

சமீபத்தில் நடந்துமுடிந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டி தொடரின் முடிவில், அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் ஷூ விருது சென்னையின் எஃப்சி கேப்டனான எலானோ ப்ளூமருக்கு வழங்கப்பட்டது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர், தனது விருதின் மூலம் கிடைத்த பரிசுத் தொகையை சென்னை மற்றும் இந்தியா வில் கால்பந்து விளையாட்டை வளர்த்தெடுக்க நன்கொடையாகத் தந்து இருக்கிறார்.

ஸ்கோர் பண்ணிட்டீங்களே கேப்டன்!

10 லட்சம் கார் விற்ற மாருதி!

இந்தியாவில் 2014 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் நடந்த கார் விற்பனையில் மாருதி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் காலத்தில் மாருதி நிறுவனம் 10 லட்சம் கார்களை விற்றுள்ளது. இதற்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் ஹூண்டாய் 4 லட்சம் கார்களை விற்றுள்ளது. மாருதி மட்டுமே 10 லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.

சபாஷ் மாருதி!

BIZ பிட்ஸ் !