Published:Updated:

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்!

லெதர் காலணிகள் மற்றும் அதுசார்ந்த பாகங்கள்!செ.கார்த்திகேயன்

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்!

லெதர் காலணிகள் மற்றும் அதுசார்ந்த பாகங்கள்!செ.கார்த்திகேயன்

Published:Updated:

இந்தியாவுக்கு இரண்டாவது இடம்!

இந்தியாவில் தயாரிக்கப்படும் லெதர் காலணிகள் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தத் தொழில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டு வருவது, ஒட்டுமொத்த லெதர் துறைக்கும் சாதகமாகக் காணப்படுகிறது. உலக அளவில் காலணிகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் உற்பத்தியாகும் 17.7 பில்லியன் ஜோடி காலணிகளில் 11.63% காலணிகள் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் 2,065 மில்லியன் ஜோடி காலணிகளில் 909 மில்லியன் ஜோடிகள் காலணிகளாகவும், 100 மில்லியன் ஜோடிகள் லெதர் காலணிகளின் மேல்பகுதிகளாகவும், லெதர் அல்லாத காலணிகள் 1,056 மில்லியன் ஜோடிகளாகவும் உற்பத்தியாகின்றன.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்!

வால்மார்ட் வாங்கும் லெதர் காலணிகள்!

இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சென்னை, ராணிப்பேட்டை, ஆம்பூரிலும், மஹாராஷ்டிராவில் மும்பையிலும், உத்தரப் பிரதேசத்தில் கான்பூரிலும், பஞ்சாப்பில் ஜலந்தரிலும், ஆக்ரா, டெல்லி, கர்னால், லூதியானா, சோனாபட், ஃபரிதாபாத், பூனே, கொல்கத்தா, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய இடங்களில் லெதர் மற்றும் லெதர் அல்லாத காலணிகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவின் ரீடெயில் ஜாம்பவானான வால்மார்ட் இந்தியாவிடமிருந்துதான் லெதர் காலணிகளைப் பெற்று வர்த்தகம் செய்து வருகிறது என்பது நமது லெதர் காலணிகளுக்குக் கிடைத்த கவுரவமாகும்.

அதிகரிக்கும் ஏற்றுமதி வாய்ப்புகள்!

லெதர் காலணிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன, எந்தெந்த நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யலாம், லெதர் காலணிகள் உற்பத்தியில் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு என்ன என்பது குறித்து இந்திய லெதர் காலணிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கே.ஆர்.விஜயனிடம் பேசினோம்.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்!

“இந்தியாவில் தற்போது லெதர் காலணிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் சிறந்து காணப்படுகிறது. கம்போடியா, வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் விலைவாசி அதிகரித்திருப்பதால், லெதர் காலணி ஏற்றுமதி வாய்ப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல், இங்கு காலணிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை எளிதாகப் பெற முடிகிறது. லெதர் காலணிகள் தயாரிப்புக்கான கட்டுமான வசதிகளும், உற்பத்தித்திறன் மற்றும் அறிவும் நம்மவர்களிடம் அதிகமாக இருப்பதால், லெதர் காலணிகள் உற்பத்தி தொடர் வளர்ச்சியில் இருந்து வருகிறது.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்!

தமிழகத்தின் பங்கு 45%!

தற்போதைய நிலையில் இந்தியாவில் உற்பத்தியாகும் லெதர் மற்றும் லெதர் பொருட்களின் ஏற்றுமதி அளவில் லெதர் காலணிகள் மற்றும் அது சார்ந்த பாகங்களின் பங்கு 45 சதவிகிதமாக உள்ளது. இது இன்னும் ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும்.

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைப் பொறுத்தவரை, நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் லெதர் காலணிகள் மற்றும் அது சார்ந்த பாகங்களின் ஏற்றுமதி சுமார் 3,300 கோடி ரூபாயாக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 20% அதிகமாகும். இந்த வளர்ச்சியானது தொடர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் ஆதரவு!

கிராமப்புறங்களில் லெதர் காலணிகள் தயாரிப்பதில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதால் இந்திய அரசு இந்தத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, லெதர் காலணிகள் ஏற்றுமதிக்கு நல்ல எதிர்காலம் இருப்பது புலப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி யாகும் லெதர் காலணிகளுக்கு அமெரிக்கச் சந்தை களில் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. இது தவிர, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் மவுசு அதிகமாக இருக்கிறது. அதனால் லெதர் காலணிகள் மற்றும் அதுசார்ந்த பாகங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இறங்குப வர்கள் தொழில் சார்ந்த அறிவுகளை வளர்த்துக் கொள்வது மிக முக்கியம். அப்போதுதான் சாவல்களைச் சமாளித்து ஏற்றுமதியில் சிறந்து விளங்க முடியும்” என்றார்.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்!

அயல்நாடுகளில் நல்ல வரவேற்பு!

கடந்த 27 ஆண்டுகளாக லெதர் காலணிகள் மற்றும் அது சார்ந்த பாகங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துவருவதால், அவரிடமே நிறுவனத் தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினோம்.

“கடந்த 27 ஆண்டுகளாகவே தோல் பதனிடுதல் மற்றும் லெதர் காலணிகள் மற்றும் அதுசார்ந்த பாகங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம். சென்னையைச் சுற்றியுள்ள பெரும்புதூர், பல்லாவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் நான்கு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளின் மூலம் மாதம் 1.25 லட்சம் ஜோடி லெதர் மற்றும் லெதர் அல்லாத காலணிகள் மற்றும் அதுசார்ந்த பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. லெதர் காலணிகள் மற்றும் அதுசார்ந்த பாகங்கள் மூலம் மட்டும் நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு ரூ.120 கோடியாக இருந்து வருகிறது. இந்தத் துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாலும், நாங்கள் தயாரிக்கும் லெதர் காலணிகளுக்கு அயல்நாடுகளில் அதிக வரவேற்பு இருப்பதாலும் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்கும்'' என்றார்.
 

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்!