முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும்போது பெரும்பாலும் துறைகளைப் பற்றி கவனிக் கிறார்கள். முதலில் தங்களுக்குப் பிடித்த துறைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். அதற்குப்பின் அந்தத் துறைகளில் உள்ள சிறந்த பங்குகளைத் தேர்வு செய்ய முயற்சிக்கின்றனர்.

எப்போதெல்லாம் பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் புதிய துறைகள் பங்குச் சந்தையில் உருவாகின்றன. 15 வருடங்களுக்கு முன்னால், இந்திய பங்குச் சந்தையில் சாஃப்ட்வேர் மற்றும் வங்கித் துறைகள் அங்கீகரிக்கப்படாத துறை களாகவே இருந்தன. வங்கித் துறைக்கான இண்டெக்ஸ் உருவானது 2003-ல்தான். பிஎஸ்இ-ல் ஐ.டி இண்டெக்ஸ் அறிமுகப்படுத்தப் பட்டது 1999-ல்தான்.

ரியல் எஸ்டேட் பங்குகள் ஏற்றத்தில் இருந்த 2007-ல் ரியாலிட்டி இண்டெக்ஸ் அறிமுகப்படுத்தப் பட்டது. இரண்டாவது முக்கியமான விஷயம், சொத்துக்களை உருவாக்குவதில், பெரும்பான்மை இண்டெக்ஸில் இல்லாத பங்குகளின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது.
உதாரணமாக, சென்ற வருடம் நாணயம் விகடனில் வெய்ஸ்மேன் ஃபாரக்ஸ், நெஸ்கோ மற்றும் பாம்பே பர்மா ஆகிய பங்குகளைப் பற்றி கூறியிருந்தோம். பணமாற்றம் செய்யும் தொழிலில் ஈடுபடும் வெய்ஸ்மேன் ஃபாரக்ஸ் 100 சதவிகித லாபத்தைத் தந்துள்ளது. அதேசமயம், பிரிட்டானியா நிறுவனத்தின் ஹோல்டிங் கம்பெனியான பாம்பே பர்மா 400 சதவிகித லாபத்தைத் தந்துள்ளது.

கண்காட்சி மையங்கள் மற்றும் ஐ.டி பார்க் வர்த்தகத்தில் ஈடுபடும் நெஸ்கோ நிறுவனம், 150 சதவிகித லாபத்தைத் தந்துள்ளது. அதனால் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிப்பது என்பது ஜெயிக்கும் ஐ.டி.யாக்களை கண்டறிவதில்தான் உள்ளது. இந்தப் பங்குகள் பெரிய இண்டெக்ஸைச் சேர்ந்ததாகவோ அல்லது பெரிய துறைகள் சார்புடைய தனித்துவமிக்க பொருட்கள், சேவைகளாகவோ இருக்கலாம்.

இந்திய அரசின் வர்த்தக நிறுவனமான எம்எம்டிசி-ன் பங்கின் விலை வரலாறு காணாத வகையில் 10 ரூபாயிலிருந்து (1990, பிப். பகுதியில்)
7 வருடங்களுக்குமுன் 50,000 ரூபாய் வரை சென்றது (முக மதிப்பு ரூ.10).

இதுபோன்ற பங்குகளின் அசாதாரணமான விலை மாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணம், இந்தப் பங்குகள் பெஞ்ச்மார்க் மதிப்பீட்டுக்கு உட்பட்ட துறைகளின் கீழ் இடம்பெறாததே. முக்கிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மதிப்பீட்டுக்கு பெஞ்ச்மார்க் முறைகள் உள்ளன. பெரிய துறை களின் கீழ் வராத நிறுவனங்களுக்குத் தனியாக நெறிமுறைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள் இருப்பதில்லை.

உதாரணமாக, வங்கிகளுக்கான மதிப்பீட்டு பெஞ்ச்மார்க் என்பது விலைக்கும், சரிசெய்யப்பட்ட புத்தக மதிப்புக்குமான மடங்குகளைப் பொறுத்து இருக்கும். அரசு வங்கிகளுக்கு இந்த மதிப்பீடு ஒரு மடங்காகவும், செயல்திறன்மிக்க தனியார் வங்கிகளுக்கு 2-3 மடங்காகவும், ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு 4 மடங்காகவும் உள்ளன. அதனால் இந்தப் பங்குகளின் விலை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைக்குள்தான் இருக்கும். எப்போது இந்த நிலையை உடைத்து அதிக மதிப்பீட்டில் செல்கிறதோ, அப்போதெல்லாம் விலை குறைய ஆரம்பிக்கும். இதேபோல், கமாடிட்டி துறைக்கு பிஇ மடங்கு 8-12 என்ற அளவில் இருக்கும்.

ஆனால், இந்த மதிப்பீட்டுக் கொள்கைகள் தனித்துவமான தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங் களுக்கு பொதுவாகப் பொருந்தாது. இதுபோன்ற பங்குகளில் ரிஸ்க் அதிகம்தான். முதலீட்டாளர்கள் இதுபோன்ற தனித்துமிக்க தொழில்முறைகளைப் புரிந்துகொள்வது சற்று கடினம்.
இருபது வருடங்களுக்குமுன் நடுத்தர அளவுள்ள ஒரு நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 10 ரூபாய் என ஐபிஓ வந்தது. இதன்பின் அந்தப் பங்கு 32 ரூபாயில் பங்குச் சந்தையில் பட்டியலானது. இந்த நிறுவனம் தனித்துவமான பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தாக கூறப்பட்டது.

இது பொருட்களை கூடைகளில் ஏற்றுமதி செய்யும் நிறுவனம். ஒவ்வொரு கூடையும் பல கோடி லாபத்தைத் தரலாம் என்பதால், முதலீட்டாளர்கள் இந்த நிறுவனப் பங்குகளின் மீது அதிக ஆர்வம் காட்டினர். வெறும் 10 கூடை கள் மட்டுமே 30 - 60 கோடி ரூபாய் வரை லாபத்தைத் தரும் என்பதால் இபிஎஸ் (ஒரு பங்கு வருமானம்) 100 ரூபாய்க்குமேல் சென்றது. இதனால் 30 ரூபாயிலிருந்து சில மாதங்களில் 600 ரூபாய் வரை ஏற்றம் கண்டது. முடிவில் தனித்துவமான பொருளின் உண்மை தெரியவந்ததால், இந்த நிறுவனப் பங்கின் விலை 3 ரூபாய் வரைக்கும் வீழ்ந்து, பங்குச் சந்தையிலிருந்தே வெளியேறியது.

இரண்டாவதாக, ஒருவேளை சந்தை வீழ்ந்தால் இதுபோன்ற பங்குகளுக்கான குறைந்தபட்ச மதிப்பீட்டுக்கு பெஞ்ச்மார்க் இல்லாததால், மிகப் பெரிய சரிவு இருக்கும். மேலும், இதுபோன்ற பங்குகள், பங்குச் சந்தையில் அதிகப் புழக்கத்தில் இருக்காது. அதனால் இவற்றை விற்று பணமாக்குவது கடினம்.

இருந்தாலும் இந்த நிறுவனங்களின் ஐடியாக்கள் உண்மையாக இருந்தால், அவை வெற்றியடைந்தபின், பங்குகளின் புழக்கம் அதிகரிக்கும். இதுபோன்ற காரணங்களினால் முதலீட்டாளர்கள் இண்டெக்ஸில் இடம்பெறாத பங்குகளில் முதலீடு செய்யும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இதுபோன்ற எந்தத் துறையின் கீழும் வராத இரண்டு பங்குகளைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

(ஆய்வு தொடரும்)