Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை

யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் – ஷார்ட் டேர்ம் பிளான்: முதலீடு செய்கசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

ஃபண்ட் பரிந்துரை

யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் – ஷார்ட் டேர்ம் பிளான்: முதலீடு செய்கசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

Published:Updated:

உங்கள் பணம் ஏன் 4 சதவிகித வட்டியில் வங்கி சேமிப்புக் கணக்கில் தூங்க வேண்டும்? கடந்த வாரம் வரிச் சலுகை தரக் கூடிய ஒரு ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் ஒன்றான யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.
ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பலர் சம்பாதிக்கின்றனர். அவ்வாறு கஷ்டப்பட்டுச் சம்பாதித்தப் பணத்தைக் கண்டு கொள்ளாமல் தங்களது வங்கி சேமிப்புக் கணக்கிலேயே விட்டுவிடுகிறார்கள். பெரும்பாலான வங்கிகள் அந்தக் கணக்குக்கு ஆண்டுக்கு 4% வட்டியைத்தான் வழங்குகின்றன. ஆக, ஒரு வருடம் முழுதும் நீங்கள் 1 லட்சம் ரூபாயை வைத்திருந்தாலும், உங்களுக்குக் கிடைக்கப்போவது ரூ.4,000 மட்டும்தான்.

அதேசமயத்தில் யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் போன்ற ஃபண்டுகளில் கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் 1 லட்சம் ரூபாயை வைத்திருந்தால், உங்களுக்கு ரூ.8,830 கிடைத்திருக்கும். இது சேமிப்புக் கணக்குடன் ஒப்பிடுகையில், இரண்டு மடங்குக்கும்மேல் வருமானம் கிடைக்கும். சேமிப்புக் கணக்கைப்போல வேண்டும் என்கிற போது, ஒருநாள் இடைவெளியில் எப்போது வேண்டுமென்றாலும் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. ஆக, நீங்கள் தொகையை வைத்திருக்கும் சில நாட்களுக்குக்கூட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உங்களுக்குக் கிடைக்கிறது. இது ஓர் அரிய முதலீட்டு வாகனம் என்பதால், பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களைத் தங்களது டிரஷரி மேலாண் மைக்கு வெகு லாவகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஃபண்ட் பரிந்துரை

யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் ரூ.3,100 கோடிக்கும் மேலான சொத்தை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் சுதிர் அகர்வால் ஆவார். இந்தத் திட்டம் 2003-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த இருபது காலாண்டுகளில் எந்த ஒரு காலாண்டிலும் இந்த ஃபண்ட் நெகட்டிவ் வருமானத்தைக் கொடுத்தது கிடையாது. இந்த ஃபண்டின் ஆவரேஜ் கிரெடிட் ரேட்டிங் “AAA” ஆகும். இது இந்த ஃபண்ட் மிகவும் குவாலிட்டியான முதலீடுகளைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கும்.

இதன் போர்ட்ஃபோலியோவில் டாப் ஹோல்டிங்ஸாக நமது மத்திய ரிசர்வ் வங்கியின் டிரஷரி பில்ஸ், ஹெச்டிஎஃப்சி-யின் கமர்ஷியல் பேப்பர், பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கியின் டெபாசிட்டுகள், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் பாண்டுகள் உள்ளன. இந்த ஃபண்ட் பெரும்பாலும் தனது முதலீட்டை சர்ட்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட்டுகள், டிரஷரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்துள்ளது.

இந்த ஃபண்ட் எஸ்ஐபி முதலீட்டை ஏற்றுக்கொள்கிறது. குறைந்தபட்ச எஸ்ஐபி மற்றும் மொத்த முதலீடு, முறையே ரூ.2,500 மற்றும் ரூ.5,000 ஆகும்.

ஃபண்ட் பரிந்துரை

இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டை நமக்கு ஏற்றாற்போல் பல தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு அல்லது இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கு அல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று இருக்கின்ற மகன்/ மகள் திருமணத்துக்கு என எந்தத் தேவைக்காக வேண்டுமானாலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஃபண்டில் முதலீடு செய்யும் போது சிறு முதலீட்டாளர்கள் குரோத் ஆப்ஷனில் செல்லலாம். குரோத் ஆப்ஷன் தவிர, தினசரி டிவி டெண்ட், வாராந்திர டிவிடெண்ட், மாதாந்திர டிவிடெண்ட், டிவிடெண்ட்   ரீஇன்வெஸ்ட்மென்ட் என பலவித ஆப்ஷன்கள் உள்ளன.

ஃபண்ட் பரிந்துரை

ஆனால், டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்லும்போது 28.33% (தனி நபர்கள்) அல்லது 33.99% (கம்பெனிகள்) டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரியைப் பிடித்துக் கொண்டுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் டிவிடெண்டை கொடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க. அந்த டிவிடெண்ட் முதலீட்டாளர்கள் கையில் கிடைக்கும்போது வரி இலவசம்தான். 

ஃபண்ட் பரிந்துரை

இந்தத் திட்டத்தில் நுழைவுக் கட்டணமோ அல்லது வெளியேற்றுக் கட்டணமோ எதுவுமே இல்லை. போட்ட சில நாட்களிலேயே பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது எவ்வளவு காலம் வேண்டு மானாலும் விட்டவைக்கலாம். சில தினங்கள் அல்லது மிகக் குறுகிய காலத் தேவைகளுக்கு வருபவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம். குறைந்தது ஒரு மாதத்துக் காவது தேவைப்படாத பணத்தை இந்தத் திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். தேவைப்படும்போது மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

ஃபண்ட் பரிந்துரை

எஸ்ஐபி மற்றும் மொத்த முதலீட்டை இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் துவக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டை துவக்குவதற்கு எந்த நேரமும் நல்ல நேரமே. அவ்வப்போது வங்கி சேமிப்புக் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கும் பணத்தை இந்தத் திட்டத்துக்கு முதலீட்டாளர்கள் மாற்றிவிடலாம். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஒரு பிசினஸ் டே ஆகும்.

உங்களது வங்கிச் சேமிப்புக் கணக்கில் அதிகமான தொகையை வைத்திருப்பதும் ஒரு வகையில் ஆபத்தானதுதான். ஏனென்றால், ஏதேனும் ஆன்லைன் பிராடுகள் நடந்து உங்களது பணம் களவு போய்விட்டது எனில், வங்கி தாங்கள் பொறுப்பில்லை என்று கூறிவிடுகிறது. ஆகவே, இதுபோன்ற ஃபண்டுகளில் தாங்கள் பணத்தை வைத்திருக்கும்போது உங்களுக்கு பாதுகாப்புடன் அதிக வருமானமும் கிடைக்கிறது.

யாருக்கு உகந்தது?

சேமிப்புக் கணக்கில் நிறைய பணத்தை வைத்திருப்பவர் களுக்கு, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, சில நாட்க ளிலிருந்து சில மாதங்களுக்கு பணம் தேவைப்படாத வர்களுக்கு, எமர்ஜென்ஸியில் பணம் தேவைப்படுகிறவர் களுக்கு, சேமிப்புக் கணக்கைவிட அதிக வருமானத்தை விரும்புபவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படுகிறவர்களுக்கு.

யாருக்கு உகந்ததல்ல?

அதிக வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடியாதவர்கள், கேரன்ட்டீட் வருமானத்தை விரும்புபவர்கள்.