Published:Updated:

அரசு ஊழியர்கள் பங்குச் சந்தையில் டிரேடிங் செய்ய முடியுமா?

அரசு ஊழியர்கள் பங்குச் சந்தையில் டிரேடிங் செய்ய முடியுமா?

அரசு ஊழியர்கள் பங்குச் சந்தையில் டிரேடிங் செய்ய முடியுமா?

அரசு ஊழியர்கள் பங்குச் சந்தையில் டிரேடிங் செய்ய முடியுமா?

Published:Updated:

கேள்வி பதில்

எனக்குச் சொந்தமான வீட்டை லீஸுக்கு விட்டு அதன்  மூலமாகக் கிடைக்கும் பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இந்தத் தொகைக்கு, வரிச் செலுத்த வேண்டுமா?

-@- ராஜு, சுண்ணாம்புகொளத்தூர்.

வி.பி.மணவாளன், ஆடிட்டர்.

“நீங்கள் லீஸுக்காக வாங்கியிருக்கும் பணம் திரும்பத் தரவேண்டிய டெபாசிட் எனில், அதற்கு வரிச் செலுத்த வேண்டாம். அதுவே, திரும்பத் தரத் தேவையில்லை எனில், அந்தத் தொகைக்கு வரிச் செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில், அந்தப் பணம்  வீட்டின் மூலமாகக் கிடைத்த வருமானமாகக் கருதப்படும்.

மேலும், லீஸுக்கான பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து அதன்மூலமாக வருமானம் கிடைத்தால், அந்த வருமானத்துக்கும் வரிச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரியானது அவரவர் வரி வரம்புக்கு உட்பட்டு செலுத்த வேண்டியிருக்கும்.’’

அரசு ஊழியர்கள் பங்குச் சந்தையில் டிரேடிங் செய்ய முடியுமா?

? அரசு ஊழியர்கள் பங்குச் சந்தையில் டிரேடிங் செய்ய முடியுமா?

- குமரேசன், மதுரை.

ஷியாம் சேகர், தலைவர், தமிழ்நாடு முதலீட்டாளர் சங்கம்.

“அரசு ஊழியர்கள் நீண்ட கால நோக்கில் பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு  செய்ய முடியும். ஒவ்வொரு நிதியாண்டிலும் முதலீடு மற்றும் சொத்துக் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், டிரேடிங் என்பது தினசரி பங்குகளை வாங்கி விற்கும் தொழில்முறை ஆகும். அரசு ஊழியர்கள் தனியாக தொழில் செய்வதற்கு அரசு பணி விதிமுறைகள் அனுமதிப்பதில்லை.’’

? ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட், ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றில் நீண்ட காலத் தேவைகளுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இது சரியான தேர்வா? மேலும், ஃபண்ட் நிறுவனங்கள் அனுப்பும் ஸ்டேட்மென்ட்டை எவ்வளவு நாளைக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்? இதுமட்டும்தான் என்னுடைய முதலீட்டுக்கான ஆவணமா?

- சீனிவாசன், அரக்கோணம்.

முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

“நீங்கள் முதலீடு செய்திருக்கும் இரண்டு ஃபண்டுகளும் சிறந்த டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி திட்டங்களாகும். இந்த ஃபண்டுகளுக்கு நீண்ட கால வரலாறு உள்ளது. எனவே, எஸ்ஐபியைத் தொடர்வது நல்லது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அனுப்பும் முதலீடு குறித்த கணக்கு அறிக்கை தொலைந்துவிட்டால், புதிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதை கேம்ஸ் இணையதளத்தில் (camsonline.com) இருந்து எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும். முதலீட்டு விவரம் குறித்த அறிக்கையைத் தகவல்களுக்காக பாதுகாத்து வைக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டுக் கணக்கு விவரத்தை அனுப்பும். நிதியாண்டின் இறுதியில் அனுப்பப்படும் அறிக்கைகளை மட்டும் பாதுகாத்து வைப்பது நல்லது. இடையில் உள்ளவற்றைக் கழித்துவிடலாம்.”

?  நான் ரிஸ்க் எடுத்து இன்ஃப்ரா ஃபண்டுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். எனவே, முதலீட்டுக்கு ஏற்ற ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.  

-@- சதீஷ், திருப்பூர்.

த.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்மென்ட் பிளானர்.

“இன்ஃப்ரா துறை ஃபண்டுகள் என்பது அடிப்படை கட்டமைப்பு சார்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய ஃபண்டாகும். பொதுவாகவே, துறை சார்ந்த பங்குகள் அதிக ரிஸ்க் உடையதாக இருக்கும். இந்தத் துறையின் எதிர்காலம் என்பது அரசின் அடிப்படை கட்டமைப்புகளின் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளைப் பொறுத்து அமையும். பிர்லா சன்லைஃப் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் பில்ட் இந்தியா ஃபண்ட், டிஎஸ்பி பிளாக்ராக் டைகர் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.”

அரசு ஊழியர்கள் பங்குச் சந்தையில் டிரேடிங் செய்ய முடியுமா?

? ஐசிஐசிஐ கேரன்ட்டீட் வெல்த் புரடெக்டர் எல்பி (ICICI Guaranteed Wealth Protector lp) இன்ஷூரன்ஸ் திட்டத்தில் வருடம் பிரீமியம் 1 லட்சம் ரூபாய் செலுத்தி வருகிறேன். இது 5 வருட யூலிப் பாலிசி. இதில் நல்ல வருமானம் கிடைக்கும். அதேநேரத்தில், முதலீட்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது என்கிறார்கள். இது உண்மையா? இந்த பாலிசியைத் தொடரலாமா?

-@- ஜி.நிவாஸ், திருச்சி.

ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

“நீங்கள் முதலீடு செய்திருக்கும் திட்டம் யூலிப் பாலிசி ஆகும். பிரீமியமாகச் செலுத்தும் தொகை ஈக்விட்டி மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இந்த பாலிசி முதிர்வடையும் நேரத்தில் பிரீமியமாகச் செலுத்தும் தொகையில் பெரும்பகுதி கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இது தானாகவே நடக்கும். யூலிப் திட்டங்கள் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. ஆனால், இது 10 வருட பாலிசி என்பதால் பாதிப்பு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த பாலிசியில் 5 வருடத்துக்கு பிரீமியம் செலுத்தினால் போதும். எனவே, இந்த பாலிசியைத் தொடரலாம். முதல் 5 வருடத்துக்கு பிரீமியம் செலுத்தினால், 10 வருடம் கழித்து அதிகமான பயன்பெற முடியும்.  இப்படி செய்தால் பாலிசி முதிர்வடையும்போது கூடுதல் வருமானம் பெற முடியும். ஆனால் யூலிப் திட்டங்கள் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது.”

அரசு ஊழியர்கள் பங்குச் சந்தையில் டிரேடிங் செய்ய முடியுமா?

?   என் வயது 40, என் மகள்கள் திருமணத்துக்கு பணம் சேர்க்க ஹெச்டிஎஃப்சி லைஃப் திட்டத்தில் வருடத்துக்கு 1 லட்சம் என்கிற கணக்கில், கடந்த நான்கு வருடமாக முதலீடு செய்து வருகிறேன். இது தற்போது ரூ.4,42,000-ஆக உள்ளது. இந்த முதலீட்டைத் தொடரலாமா? அல்லது வேறு திட்டத்தில் முதலீடு செய்யலாமா? இந்தப் பணம் 12 வருடம் கழித்துதான் எனக்குத் தேவை.

- கே.கணேசன், சிவகாசி,

ஜெயக்குமார், நிதி ஆலோசகர்.

“முதலீடு செய்யும்போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம். அதாவது, பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரக்கூடிய முதலீடாக இருக்க வேண்டும். பணவீக்க விகிதம் என்பது சராசரியாக 7 - 8 சதவிகிதத்துக்குள் இருக்கும். இதைவிட அதிகமான வருமானம் தரக்கூடிய முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்போதுமே புத்திசாலித்தனமாக இருக்கும்.

உங்களுடைய தற்போதைய முதலீடு 6.7% வருமானம் தரக்கூடியதாக உள்ளது. இது இப்படியே தொடர்ந்தால், உங்களின் முதலீடு அடுத்த 12 வருடத்தில் ரூ.27 லட்சமாக இருக்கும். பணவீக்கம் 8 % என எடுத்துக்கொண்டால், இதன் இன்றைய மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது போதும் எனில், அப்படியே பாலிசியைத் தொடரலாம். இல்லையெனில், அந்த பாலிசியை சரண்டர் செய்து கிடைக்கும் தொகையை பேலன்ஸ்டு ஃபண்டுகளான ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், ஐடிஎஃப்சி டைனாமிக் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

மேலும், பிரீமியமாகச் செலுத்தி வந்த ஒரு லட்சம் ரூபாயை மாதம் ரூ.8 ஆயிரம் என, மேற்கூறிய மூன்று ஃபண்டுகளில் பிரித்து எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம்.  இதில் ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால்கூட ரூ.37 லட்சம் கிடைக்கும். நீங்கள் சற்று அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால், 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அடுத்த 12 வருடங்களுக்கு முதலீடு செய்தால் சுமார் ரூ.58 லட்சம் கிடைக்கும். உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முடிவெடுங்கள். ”
 

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.