Published:Updated:

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

Published:Updated:

மஞ்சள் (Turmeric)

கடந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை அன்று, ஒரு குவிண்டால் மஞ்சள் 100-200 ரூபாய் வரை விலை அதிகரித்து, 7,500-8,000 ரூபாய் வரை வர்த்தகமானது. அன்றைய தினத்தின் வரத்தாக 1,500 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) காணப்பட்டன. நேரடிச் சந்தையில் விலை அதிகரித்து காணப்பட்டாலும், ஏப்ரல் மாத ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் விலை 2% குறைந்து, ஒரு குவிண்டால் 9,160 ரூபாயாக வர்த்தகமானது.

கடந்த வாரத்தில் பொங்கல் விடுமுறை காரணமாக வியாழனன்று நிஜாமாபாத் மஞ்சள் சந்தையானது விடுமுறை விடப்பட்டிருந்தது.

நடப்பு 2014-15ம் நிதியாண்டில் ஆந்திராவில் மஞ்சள் விதைப்பு 13,000  ஹெக்டேராக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் 10,000 ஹெக்டேராக இருந்தது. அதேபோல, 2013-14ல் தெலங்கானாவில் 43,100 ஹெக்டேராக இருந்த மஞ்சள் விதைப்பு, நடப்பு நிதியாண்டில் 44,600 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. வரும் வாரங்களில் மஞ்சள் தேவை அதிகரிக்கும் என்பதால், விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

ஜீரகம் (Jeera)

உற்பத்திக் குறைவு மற்றும் சர்வதேச சந்தைகளிலிருந்து வரும் ஏற்றுமதி ஆர்டர்கள் ஆகிய காரணத்தினால் சென்ற வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது. கடந்த ஐந்தாம் தேதியில் குஜராத் அரசாங்கம் ஜீரகத்தின் உற்பத்தி ஏரியாக்களின் விவரத்தை வெளியிட்டது. இதில் கடந்த ஆண்டில் 4.4 லட்சம் ஹெக்டேராக இருந்த ஜீரகத்தின் விதைப்பு, இந்த ஆண்டில் 42% குறைந்திருப்பதாகத் தெரிவித்திருந்தது. அதேபோல, ராஜஸ்தானிலும் ஜீரகத்தின் விளைச்சல் குறைந்தே காணப்படுவதாகத் தகவல் வெளியானது. அதனால் புதிய வரத்து வரை ஸ்பாட் சந்தைகளில் வரத்து குறைந்தும், விலை அதிகரித்தும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜீரக ஏற்றுமதி நாடுகளான சிரியா மற்றும் துருக்கி யில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக, தொடர்ந்து நம் நாட்டு ஜீரகத்துக்கு அதிக ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 87,500 டன் ஜீரகமானது ஏற்றுமதியாகி இருப்பது கவனிக்கத்தக்கது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 25% அதிகமாகும்.

 கடுகு விதை (Mustard Seed)

கடுகுமீல் ஏற்றுமதி அதிகரித்து காணப்படுகிறது என்கிற விவரம் வெளிவந்திருந்தும், சந்தைக்கு வரத்து குறைந்து காணப்பட்ட போதிலும், கடந்த வார வியாழனன்று கடுகு விதைக்கான விலை அதிகரித்து காணப்படவில்லை. அதற்கு மாறாக டெக்னிக்கல் குறைபாடு காரணமாகக் குறைந்து வர்த்தகமானது.

இந்தியாவின் மொத்த கடுகு விதை உற்பத்தியானது 3.2% குறைந்து, 63.8 லட்சம் ஹெக்டேராக உள்ளது. அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தின் கடுகு விதை உற்பத்தி 12.6% குறைந்து, 26.4 லட்சம் ஹெக்டேராக உள்ளது. நடப்பு நிதியாண்டில் கடுகு விதை உற்பத்தி ஏழு மில்லியன் டன்னாக இருக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது, இதற்கு முந்தைய ஆண்டில் 7.4 மில்லியன் டன்னாக இருந்தது. இன்றைய நிலையில் உற்பத்தி குறைந்திருப்பதால், வரும் காலங்களில் கடுகு விதை விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

 சோயாபீன் (Soybean)

கடந்த வாரத்தில் விலை குறைந்து காணப்பட்டதால், சோயாபீன் அதிகமாக வாங்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் சோயாமீல் ஏற்றுமதி 59% குறைந்து, 1.94 லட்சம் டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 4.70 லட்சம் டன்னாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் உலக அளவிலான சோயாபீன் உற்பத்தி 1.6 மில்லியன் டன் உயர்ந்து, 314.4 மில்லியன் டன்னாக காணப்படுகிறது. இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், பிரேசில் மற்றும் அமெரிக்காவில் சோயாபீன் உற்பத்தி பெருகி இருப்பதுதான். முக்கியமாக, பிரேசிலில் மட்டும் 1.5 மில்லியன் டன் அதிகரித்து, 95.5 மில்லியன் டன்னாகக் காணப்படுகிறது. உலக அளவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அளவு 534.2 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

 சென்னா (Chana)

சென்ற வாரத்தில் சென்னா விலை குறைந்து காணப்பட்டது. இதற்கு மிக முக்கியக் காரணம், ஸ்பாட் சந்தைகளில் வர்த்தகர்கள் வாங்க ஆர்வம்காட்டாமல் இருந்ததே. இன்னும் ஒரு மாதத்துக்குள் சென்னாவின் புதிய வரத்துகள் இருக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்ப்பதால், சென்னாவை வாங்க ஆர்வம்காட்டவில்லை.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

இருப்பினும் வருகிற மார்ச், 2015-ல் வரியில்லா சென்னா ஏற்றுமதி மற்றும் உற்பத்திக் குறைவு போன்ற எதிர்பார்ப்பினால் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 9-ம் தேதி நிலவரப்படி, சென்னாவின் விதைப்பானது 15.4% குறைந்து, 81.01 லட்சம் ஹெக்டேராக இருக்கிறது என இந்திய அரசின் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.