Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்- மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்- மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்- மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்- மெட்டல் & ஆயில்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்- மெட்டல் & ஆயில்

இந்த வாரம் தங்கத்தின் விலைப்போக்கு குறித்து கூறுகிறார் இந்தியா நிவேஷ் கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குமார் ஜெயின்!

 தங்கம்!

‘‘தங்கத்தின் விலை, சுவிஸ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து அதிகரித்து வர்த்தகமாகிறது. ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காமல் வைத்திருப்பதால், தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. மேலும், சமீபத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், தங்கம் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,277 டாலராக வர்த்தகமாகிறது. தங்கத்தின் விலை வரும் வாரங்களில் சர்வதேச சந்தைகளில் 1,214 டாலரிலிருந்து 1,290 டாலர் வரை வர்த்தகமாகலாம். இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமாகிறது. இந்தியச் சந்தைகளில் தங்கத்தின் விலை ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே அமையும். இந்திய சந்தை களில் 10 கிராம் தங்கத்தின் விலை 27,512 ரூபாயாக உள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை ரூ.26,700-28,050 வரை வர்த்தகமாகலாம்” என்றார்.

வெள்ளி!

வெள்ளியின் விலை சர்வதேச சந்தைகளில் அதிகரித்து வர்த்தகமா கிறது. தங்கத்தின் விலையில் காணப்பட்ட ஏற்றமே வெள்ளியின் விலையேற்றத்துக்குக் காரணம். மேலும், அடிப்படை உலோகங்கள் வலுப்பெற்றதும் வெள்ளியின் விலையில் ஏற்றத்தை ஏற்படுத்தியது.  சர்வதேச சந்தையில் வெள்ளி 0.3% அதிகரித்து, 16.9 டாலராக வர்த்தகமாகிறது. இந்தியச் சந்தையில் வெள்ளியின் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. அடுத்த வாரத்தில் முக்கிய உலோகங்கள் ஏற்றத்தில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளியின் விலை அதிகரித்தே வர்த்தகமாகும் என்று கூறப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்- மெட்டல் & ஆயில்

 காப்பர்!

கமாடிட்டி டிரேடிங்- மெட்டல் & ஆயில்

சர்வதேச சந்தைகளில் காப்பரின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. 2015-16ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதக் கணிப்பை உலக வங்கி குறைத்துள்ளது. இது கமாடிட்டி துறைக்குப் பாதகமான விஷயம் என்றாலும், காப்பரை வாங்குபவர்கள் ஷார்ட்-கவரிங் மற்றும் ஹெட்ஜிங் செய்வதால், காப்பரின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. ஆரம்பத்தில் 8% அளவுக்கு விலை உயர்ந்த காப்பர், பின்னர் கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவு காரணமாகச் சற்று இறங்கி வர்த்தகமானது. இந்தியச் சந்தைகளில் காப்பரின் விலை சர்வதேச சந்தைகளைப் பொறுத்தே வர்த்தகமானது. ஐரோப்பிய மத்திய வங்கி பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சிகளை மேற்கொன்டு வருவதால், அடிப்படை உலோகங்கள் வரும் வாரத்தில் ஏற்றத்தில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கச்சா எண்ணெய்!

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிவிலேயே வர்த்தக மாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய் 50 டாலருக்கும் கீழ் குறைந்து, 47 டாலர்களில் வர்த்தகமாகிறது. கடந்த ஆறு மாதங்களாக கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வர்த்தகமாகிறது. அமெரிக்கா மற்றும் ஓபிஇசி உறுப்பு நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்காமல் இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியச் சந்தைகளில் கச்சா எண்ணெய் ஏற்ற இறக்கத்திலேயே வர்த்தகமாகிறது. சர்வதேச சந்தைகளைப் பொறுத்து, கச்சா எண்ணெய்யின் விலை வரும் வாரங்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்- மெட்டல் & ஆயில்