Published:Updated:

வாங்க... ‘வாட்ஸ்ஆப்’பில் புடவை விற்கலாம்!

வாங்க... ‘வாட்ஸ்ஆப்’பில் புடவை விற்கலாம்!

வாங்க... ‘வாட்ஸ்ஆப்’பில் புடவை விற்கலாம்!

வாங்க... ‘வாட்ஸ்ஆப்’பில் புடவை விற்கலாம்!

Published:Updated:

ப்போதைய 'கேட்ஜெட்’ யுகத்தில் என்ன வேண்டுமானாலும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து வாங்க, ஆயிரக்கணக்கான வலைதளங்கள் வந்துவிட்டன. கடையைத் தேடிப் போகாமலேயே எதையும் வாங்கலாம், எதையும் விற்கலாம். கல்வி, நட்பு, காதல், கல்யாணம், வர்த்தகம்... எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே முடித்துவிடுகிறது இந்தத் தலைமுறை!

இதையே தன்னுடைய அஸ்திரமாகப் பயன்படுத்தி, அசத்தலான பிசினஸ் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி ஸ்ரீலேகா கோகுல்தாஸ்.’வாட்ஸ்ஆப்'பில் சேலை பிசினஸ்!

வாங்க... ‘வாட்ஸ்ஆப்’பில் புடவை விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் வீடுதேடிச் சென்றபோது, தன் ஐபோனில் வாடிக்கையாளருக்குப் புடவை போட்டோக்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஸ்ரீலேகா. அத்தனையும் அழகழகான, அல்ட்ரா மாடர்ன் டிசைனர், கிரேப், ரா சில்க் புடவைகள். நிறங்களும் வேலைப்பாடுகளும் கண்களைப் பறித்தன.

தன் 'கடை'யைக் கொஞ்ச நேரம் மூடி வைத்துவிட்டு, பேச வந்தமர்ந்தார் ஸ்ரீலேகா.

''நான் பி.எஸ்ஸி பட்டதாரி. இரண்டாவது குழந்தை பிறந்ததுக்கு அப்புறம், வேலைக்குப் போக முடியல. பையன் கொஞ்சம் வளர்ந்ததும், போரடிக்க ஆரம்பிச்சது. ஆறேழு மாசத்துக்கு முன்ன, ஃபேஸ்புக்கில் எங்க குடும்ப நண்பர் முகம்மது அண்ணாவைப் பார்த்தேன். அவர், ஊட்டியில் ஜவுளி ஹோல்சேல் வியாபாரம் பண்ணிட்டிருக்கார். அவர்கிட்டே சாட் பண்ணினபோது, 'வீட்ல இருந்தபடியே ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்’னு சொன்னேன். அவர், 'புடவை பிசினஸ் பண்றியா லேகா? நான் ஹெல்ப் பண்றேன்’னு சொன்னார். சூப்பர் ஐடியானு தோணுச்சு.

என்னால கடையெல்லாம் வெச்சு நிர்வகிக்க முடியாது. வீட்டிலும் புடவைகளை ஸ்டாக் பண்ற அளவுக்கு இடவசதி இல்லை. அப்போதான் 'வாட்ஸ்ஆப்’ ஐடியா க்ளிக் ஆச்சு. முகம்மது அண்ணாகிட்டே புடவைகளின் போட்டோஸ் அனுப்பச் சொன்னேன். அதையெல்லாம் தினமும் மாத்தி மாத்தி என் வாட்ஸ் ஆப் புரொஃபைல் போட்டோவா வெச்சேன். என்னுடைய தோழிகள் வட்டம் பெரிசு. ஸ்கூல் மேட்ஸ், காலேஜ் மேட்ஸ்ச்ர் ’வாட்ஸ்ஆப்'பில் நான் ரெண்டு, மூணு குரூப்பில் இருக்கேன். அவங்க எல்லாம் கவனிக்க ஆரம்பிச்சாங்க.  

தினமும் ஒரு புடவை போட்டோவுடன் தோழிகளுக்கு 'குட் மார்னிங்’ மெசேஜ் அனுப்பினேன். 'நல்லாயிருக்கே லேகா... என்ன புடவை இது?’னு என் நெருங்கிய தோழி தீபா விசாரிச்சா. 'ஊட்டியிலருந்து வந்தது’னு சொன்னதும், விலை கேட்டா. 'ரொம்ப க்யூட்டா இருக்கு... எனக்கும் வாங்கித் தாயேன்!’னு சொல்லி, அதுக்கான தொகையை என் அக்கவுன்ட்டில் போட் டுட்டா. தீபாதான் என் முதல் கஸ்டமர். தொடர்ந்து, பலரும் புடவைக்கு விலை கேட்க, அக்கவுன்ட்டில் பணம் போடனு ஆரம்பிச்சு, என்னோட புடவை போட்டோக்களைத் தங்களோட ஃப்ரெண்ட்ஸுக்கும் ஃபார்வேர்டு பண்ணினாங்க. பிசினஸ் பிக்அப் ஆயிடுச்சு!'' என்று ஸ்ரீலேகா சொல்லிக் கொண்டிருந்தபோதே, மொபைலில் மெசேஜ் ரிங்டோன்.

''யாராவது கஸ்டமராதான் இருக்கும்!'' என்றபடியே நம்மிடமும் காண்பித்தார். குறிப்பிட்ட ஒரு டிசைனை அனுப்பி, 'இது போல காட்டனில் கிடைக்குமா?’ என்று கேட்டிருந்தார், அவரின் டெல்லி தோழி. பதிலை நொடியில் அனுப்பி, விலையைச் சொல்லி, வியாபாரத்தில் பிஸியாகி திரும்பிய ஸ்ரீலேகா,

''புடவை மட்டும்தானா... சுடி இல்லையா?'னு கேட்டவங்களுக்காக சுடிதார் மெட்டீரியல், ஹாஃப் ஸ்டிட்ச்டு சுடி, லெகிங்ஸ், ஜெகிங்ஸ், ஜீன்ஸ், டாப்ஸ்னு எல்லாமே சேல் பண்ண ஆரம்பிச்சிட்டேன். போட்டோஸ் பார்த்துட்டு, ரேட் கேட்பாங்க. ’ஓகே'ன்னா, அக்கவுன்ட் டீடெய்ல்ஸ் அனுப்புவேன். பணத்தைப் போட்டுட்டு தகவல் சொன்னதும், ஊட்டி அண்ணாகிட்ட கஸ்டமரோட அட்ரஸ் சொல்வேன். அடுத்த நாளே கொரியர் போயிடும்.

எனக்கு செலவுனு பார்த்தா, மொபைல் டேட்டா அல்லது வைஃபை சார்ஜஸ் மட்டும்தான். ஆனா, 10  15 பர்சன்ட் லாபம் கிடைக்கும். சில சமயம், கொரியர் ரிட்டர்ன் ஆயிடும். அவங்ககிட்ட பேசிட்டு, மறுபடி அனுப்பணும். புடவையில் எதுவும் டேமேஜ், கலர்/டிசைன் பிரச்னைனு புகார்கள் வந்தால், ரீப்பிளேஸ் செய்றதுண்டு. கொரியர் சார்ஜை கம்பெனி ஏத்துக்கும். தண்ணியில் போட்டதும் மெட்டீரியல் சுருங்கிடுச்சுனு சொன்னாலும் மாத்திக்கலாம். கஸ்டமர் திருப்திதான் எனக்கு முக்கியம்!'' என்று சொன்னார்.

''என் கணவரும் இதுக்கு நல்ல சப்போர்ட்! என்னோட வெற்றியைப் பார்த்து, தோழிகள் ரெண்டு பேர் ’வாட்ஸ்ஆப்' பிசினஸில் இறங்கியிருக்காங்க. ஒரு மொபைல் போன்... ஒரு இன்டர்நெட் கனெக்‌ஷன்... துளி புத்திசாலித்தனம்... போதுங்க இந்தக் காலத்தில் பிழைச்சுக்கிறதுக்கு!''

சாதித்துக் காட்டிய ஸ்ரீலேகாவுக்கு நம் வாழ்த்துக்களைக் கூறிவிட்டு, விடை பெற்றோம்! 

பிரேமா நாராயணன், படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism