கமாடிட்டி, கரன்சி, பங்குச் சந்தையில் எஃப் அண்ட் ஓ என யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்கிற டெரிவேட்டிவ்களின் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த டெரிவேட்டிவ் டிரேடிங்கினால் நன்மையா, தீமையா என்கிற கேள்வியை பலரும் பல கோணத்தில் ஆராய்ந்துகொண்டிருக்க, டெரிவேட்டிவ்கள் பற்றி முழுமையாக அலசி ஆராயும் புத்தகம் ஒன்று கடந்த வாரம் சென்னை யில் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகத்தை தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும் உலக வங்கியின் ஸ்பெஷல் புராஜெக்ட்டின் இயக்குநருமான டாக்டர் டி.வி.சோமநாதனும் (இவர் தற்போது பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்!), நிதித் துறை நிபுணரும், சர்வதேச பொருளாதார வல்லுநருமான டாக்டர் அனந்த நாகேஸ்வரனும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் இந்தப் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார் தமிழக நிதித் துறை செயலாளர் கே.சண்முகம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘தி எக்கனாமிக்ஸ் ஆஃப் டெரிவேட்டிவ்’ என்கிற இந்தப் புத்தகத்தில் டெரிவேட்டிவ்கள் என்றால் என்ன, உலக அளவில் டெரிவேட்டிவ் கள் எப்படி இருக்கின்றன, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் டெரிவேட்டிவ்கள் எப்படி வளர்ந்து வருகின்றன என பல கோணங்களில் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.
‘‘டெரிவேட்டிவ் புராடக்ட்டுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. இந்த புராடக்ட்டுகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நமது கையில் இருக்கிறது. இதை சரியாக புரிந்துகொள்ளாமல் பயன்படுத்திவிட்டு, பிற்பாடு அதை குற்றம் சொல்லக் கூடாது. பொருளாதாரம் வளர்வதற்கு டெரிவேட்டிவ் மிக அவசியம். அதே நேரத்தில் டெரிவேட்டிவ் சந்தையை சரியாக முறைப்படுத்த வும் வேண்டும்’’ என்றார் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன்.
இன்றைக்கு தமிழகத்தில் பல டிரேடர்கள் எஃப் அண்ட் ஓ, கமாடிட்டி, கரன்சி என பல்வேறு டெரிவேட்டிவ் புராடக்ட்டுகளின் அடிப்படையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அதில் டிரேட் செய்து பணத்தை இழக்கிறார்கள். டெரிவேட்டிவ் பிரிவில் டிரேடிங் செய்கிறவர்கள் முதலில் அதைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு, பிற்பாடு அதை செய்வது உத்தமம். அப்படி நினைக்கிற அனைவருக்கும் இந்தப் புத்தகம் மிக உதவியாக இருக்கும். அந்த வகையில், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய புத்தகம் இது.
படம்: கு.பாலசந்தர்.
ஆகாஷ்