Published:Updated:

Biz பிட்ஸ்!

Biz பிட்ஸ்!

Biz பிட்ஸ்!

Biz பிட்ஸ்!

Published:Updated:

ஒட்டகப் பால் விற்பனைக்கு!

இத்தனை நாட்களாக மாட்டுப் பாலை விற்ற அமுல் நிறுவனம், இனி அதிக வைட்டமின் சத்துள்ள ஒட்டகப் பாலை இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்போகிறது. குஜராத்தில் கட்ச் பகுதியில் உள்ள அமுல் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் சம்மேளனம் ஒட்டகப் பாலை உற்பத்தி செய்வது, பதப்படுத்துவது போன்ற பணிகளைச் செய்யவுள்ளது. ஒட்டகப் பாலை விற்பனை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சங்கத்தின் அனுமதிக்காக அமுல் நிறுவனம் காத்திருக்கிறது. ஒட்டகப் பாலை உணவோடு சேர்த்துக்கொண்டால் உடலில் அதிக இன்சுலின் சுரக்கும் என்பதால், நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறது அமுல். 

Biz பிட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு க்ளாஸ் ஒட்டகப் பால் கொடுங்க!

விளையாட்டும் விளம்பரமும்!

ஐபிஎல் போட்டிகள் உலகக் கோப்பை முடிந்ததும் துவங்க உள்ளன. உலகக் கோப்பை போட்டிகள் அதிக அளவில் பார்க்கப்படுகின்றன. அதனால் அதற்கான விளம்பரக் கட்டணம் 10 நொடிகளுக்கு 4.5 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டன. தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கான விளம்பரக் கட்டணம் இதைவிட குறைந்தபட்சம் 15 சதவிகிதம் அதிகமாகவே இருக்கும் என்று மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனம் கூறியுள்ளது. காரணம், ஐபிஎல் போட்டிகளுக்கு உலகக் கோப்பை போட்டிகளைவிட அதிக அளவில் பார்வையாளர்கள் இருக்கக்கூடும் என்பதால் இந்த கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Biz பிட்ஸ்!

ஐபிஎல்னா சும்மாவா!

வளரும் தொழில் முனைவோருக்கு அங்கீகாரம்!

தென்  இந்தியாவில் வளர்ந்து வரும் ஆறு தொழில் முனைவோர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்திருக்கிறது சிஐஐ (Confederation Indian Industry). 2014ம் ஆண்டுக்கான இந்த வளரும் தொழில்முனைவோர் விருது பெற கடும்போட்டி இருந்ததாம். ஏறக்குறைய 273 பேர் விருது பெற விண்ணப்பித்ததில், பல்வேறு கோணத்தில் ஆராயப்பட்டு ஆறு பேர் மட்டுமே சிறந்த வளரும் தொழில்முனைவோராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு பேரில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

Biz பிட்ஸ்!

கோவையைச் சேர்ந்த ஹேமலதா அண்ணாமலைக்கும் (இவரது ஆம்பியர் நிறுவனம் மின்சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கிறது), சுந்தர் முருகானந்தம் மற்றும் துர்கா சரணுக்கும் (இவர்களது வெர்ஷா டிரைவ்ஸ் நிறுவனம் குறைந்த மின்சக்தியில் இயங்கும் மின்விசிறிகளைத் தயாரிக்கிறது)  இந்த விருது கிடைத்திருக்கிறது.

இன்னும் பல தொழில்முனைவோர்கள் தமிழகத்திலிருந்து வரட்டும்!

மைக்ரோசாஃப்ட் தந்திரம்!

சீனாவில் உள்ள பலரும்  பைரஸி மைக்ரோசாஃப்ட் இயங்கு தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 அப்டேட்டை அனுமதி பெற்று உள்ள வாடிக்கையாளர்களும், அனுமதி இல்லாமல் பைரஸியாக வைத்திருப்பவர்களும் விண்டோஸ் 10 அப்டேட்டை இலவசமாகப் பெறலாம். இதன்மூலம் மீண்டும் அவர்கள் எங்கள் நிறுவனத்துடன்  இணைய முடியும் என்று மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் கூறியுள்ளது.

Biz பிட்ஸ்!

போலிகளுக்கும் சலுகை உண்டு!

டிஜிட்டல் வர்த்தகம் ஒரு லட்சம் கோடி!

இந்தியாவில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் டிஜிட்டல் வர்த்தக மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என  சர்வதேச நிறுவனங்கள் சொல்லியிருக்கின்றன. 2014-ல்  இந்தியாவின் டிஜிட்டல் சந்தை மதிப்பு ரூ.81,525 கோடியாக இருந்தது. தற்போது இணையதளத் தில் பயண டிக்கெட்டுகள் வாங்கு வதன் மூலம் ரூ.50,050 கோடி ரூபா யாகவும், மொபைல் போன்கள் மற்றும் மொபைல் சார்ந்த பொருட் களின் வர்த்தக மதிப்பு 9,936 கோடி ரூபாயாகவும் உள்ளது.

வெல்கம் டிஜிட்டல் இந்தியா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism