சென்ற வாரம் ஒரு மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் வகைகளில் ஒன்றான ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு பெரிய வகைகள் உள்ளன. அவையாவன, கடன் சார்ந்தவை மற்றும் பங்கு சார்ந்தவை. பங்கு சார்ந்த ஃபண்டுகள், பங்குச் சந்தையை ஒட்டிய ரிஸ்க் உடையவை. கடன் சார்ந்த ஃபண்டுகள், உட்பிரிவைப் பொறுத்து, மிக மிகக் குறைவான ரிஸ்க் உடையவை. ஒருவகையில் பார்த்தால், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைவிட ரிஸ்க் குறைவானவை. ஏனென்றால், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் நாம் முதலீடு செய்யும்போது ஒரே நிறுவனத்தில் அல்லது ஒரே வங்கியில் முதலீடு செய்கிறோம். ஆகவே, அந்த நிறுவனத்துக்கோ அல்லது வங்கிக்கோ பிரச்னை ஏற்பட்டால், நமது முதலீடும் பிரச்னையில் சிக்கிக்கொள்ளும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால், ரிலையன்ஸ் மணி மேனேஜர் போன்ற கடன் சார்ந்த ஃபண்டுகள், நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவன கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. ஆகவே, ஒரு சில நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ பிரச்னையில் சிக்கினால்கூட, ஃபண்டுக்குப் பெரிய பாதகம் வந்துவிடாது. இந்தக் காரணத்தினால் முதலீட்டாளர்களின் அசலுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடாது.

ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்ட் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் வகையைச் சார்ந்த ஃபண்டாகும். இந்த ஃபண்ட் ரூ.9,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

இதன் ஃபண்ட் மேனேஜர்கள் அமித் திரிபாதி மற்றும் அஞ்சு சஜ்ஜர் ஆவார் கள். இவர்களில் அமித் திரிபாதி 11-க்கு மேற்பட்ட ஆண்டுகளும், அஞ்சு சஜ்ஜர் 7 ஆண்டுகளுக்கு மேலும் பணியாற்றி வருகிறார்கள். அமித் திரிபாதி ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் கடன் சார்ந்த ஃபண்டுகளின் தலைவர் ஆவார். இவர் இந்த ஃபண்டுக்கு மேக்ரோ லெவல் வேலைகளான எக்ஸ்போஸர் லெவல் (ஒவ்வொரு நிறுவன உபகரணங்களுக்கும் உள்ள லிமிட், ஒவ்வொரு வகை உபகரணங்களுக்கும் உள்ள லிமிட்) போன்றவற்றைக் கவனித்துக்கொள்கிறார். தினசரி ஃபண்ட் மேலாண்மையை அஞ்சு சஜ்ஜர், ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் மூன்று அனலிஸ்ட்டுகளின் உதவியுடன் கவனித்துக் கொள்கிறார். மேலும், பங்கு சார்ந்த முதலீட்டுப் பிரிவிடம் தாங்கள் முதலீடு செய்யப்போகும்/ செய்திருக்கும் நிறுவனங் களின் நிலைமை குறித்தும் அறிந்துகொள்கிறது இந்த டீம்.
இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் பெரும்பாலும் (80%) AAA கிரெடிட் ரேட்டிங் உடைய உபகரணங்களே உள்ளன. அதேபோல, AA- ரேட்டிங்குக்குக் கீழ் செல்வதில்லை. இந்த ஃபண்ட் முதலீடு செய்யும் பெரும்பாலான உபகரணங்களின் முதிர்வுக் காலம் ஒன்பது மாதத்துக்குள் இருக்கும்.


இதன் போர்ட்ஃபோலியோவில் 15 முதல் 25 சதவிகித முதலீடுகள் 9 முதல் 18 மாத மெச்சூரிட்டியில் இருக்கும். இந்த ஃபண்டின் தற்போதைய யீல்டு டு மெச்சூரிட்டி (YTM – Yield to Maturity) 8.91 சதவிகிதமாக உள்ளது. இந்த ஃபண்டின் செலவு விகிதம் 0.59% ஆகும்.
கடந்த ஏழு ஆண்டுகளில் (2008 – 2014) ஒரு ஆண்டைத் தவிர (2009), எல்லா ஆண்டுகளிலும் என்எஸ்இ டிரஷரி பில் வருவாயைவிட அதிகமாக வருமானம் கொடுத்துள்ளது.
கடந்த ஏழு காலண்டர் ஆண்டுகளில், இந்த ஃபண்ட் மிகவும் குறைவான வருவாயை (5.64%) 2010-ம் ஆண்டிலும், மிகவும் அதிகமான வருவாயை (9.71%) 2012-ம் ஆண்டிலும் கொடுத்துள்ளது.
கடந்த 20 காலாண்டுகளில் ஒரு முறைகூட நெகட்டிவ் வருமானத்தைத் தந்ததில்லை. அனைத்துக் காலாண்டு களிலும் பாசிட்டிவ் வருமானத்தையே கொடுத்துள்ளது.


இந்த ஃபண்டின் மற்றொரு சிறப்பம்சம், மிகவும் குறைவான முதலீட்டுத் தொகையாகும். நீங்கள் 500 ரூபாயில் உங்கள் முதலீட்டைத் துவக்க லாம். எஸ்ஐபி முறையில் கணக்கைத் துவக்குவதற்கு ரூ.100 இருந்தாலே போதுமானது. இந்த அளவு குறைவான அளவில் முதலீட்டை வாங்கிக் கொள்வது மிகச் சில ஃபண்டுகளே!
இந்த ஃபண்டில் நுழைவு மற்றும் வெளியேற்றுக் கட்டணம் ஏதும் இல்லை. போட்ட பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறும் வசதி உள்ளது. ஆகவே, அரும்பாடுபட்டு சம்பாதித்த உங்கள் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் 4% வட்டிக்கு தூங்கவிடாதீர்கள்!
நல்ல அனுபவமுள்ள முதலீட்டு டீம், சிறந்த வரலாறு, ஹை குவாலிட்டி போர்ட்ஃபோலியோ போன்ற பல சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த ஃபண்டில், முதலீட்டாளர்கள் தங்களது குறுகிய காலத் தேவைகளான பிரீமியம் பேமன்ட், பள்ளி/ கல்லூரி கட்டணங்கள், எமர்ஜென்சி ஃபண்ட் போன்ற அனைத்துக்கும் மொத்தமாகவும், எஸ்ஐபி முறையிலும் தாராளமாக முதலீடு செய்துகொள்ளலாம்.

யாருக்கு உகந்தது?
சேவிங்ஸ் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கும் பணத்துக்கு, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, சில நாட்களிலிருந்து சில மாதங்களுக்குள் பணம் தேவைப்படுபவர்களுக்கு, எமர்ஜென்சியில் பணம் தேவைப் படுபவர்களுக்கு, சேவிங்ஸ் கணக்கை விட அதிக வருமானத்தை விரும்புபவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படுபவர்களுக்கு.
யார் முதலீடு செய்யக்கூடாது?
அதிக வருமானத்தை விரும்பு பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர் கள், கேரன்டீட் வருமானத்தை விரும்புபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்துவிட லாம்!
சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்