வாராக் கடன் என்பது வங்கிகளுக்கு மட்டுமல்ல, எஸ்எம்இக்களாக இருக்கும் சிறு தொழில்முனைவோருக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. வங்கியிலிருந்து வாங்கும் கடனுக்கான வட்டியையும் அசலையும் காலம் தவறாமல் கட்டவேண்டியது சிறு தொழில்முனைவோரின் கடமை. என்றாலும், சில சமயங்களில் கடன் பணத்தைச் சரியாகக் கட்டாமல்விட்டால், வங்கியானது அந்தக் கடனை வாராக் கடனாக அறிவித்துவிடும். இதன்பிறகு அந்த நிறுவனத்தினால் மேற்கொண்டு கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், வாராக் கடன் என்கிற வார்த்தையைக் கேட்டாலே சிறு தொழில்முனைவோர்கள் நடுங்குகிற நிலையே தற்போது இருக்கிறது.

இந்த வாராக் கடன் எப்படி ஏற்படு கிறது, இதனை எப்படித் தவிர்க்கலாம், அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் நடராஜனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘முதலில் வாராக் கடன் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கு வங்கி மூலம் அளிக்கப்பட்ட கடனுக்கான வட்டி மற்றும் தவணைகள் உரிய காலத்தில் கட்டப்படாமல் நிலுவையில் இருப்பதையே வாராக் கடன்கள் என்கிறார்கள்.

பெரிய நிறுவனங்கள் துவங்கி எஸ்எம்இக்கள் வரை அனைவரது தொழில்களுமே வங்கி தரும் கடனை நம்பிதான் உள்ளன. வங்கிகள் அளிக்கும் கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்பச் செலுத்த முடியாமல் போகப் பெரிய நிறுவனங்களைவிடச் சிறிய நிறுவனங்கள் அதிகமாகச் சிரமப்படு கின்றன. எஸ்எம்இக்களுக்குத் தற்போது உள்ள நிலவரப்படி, 90 நாட்களுக்கு மேல் அவர்கள் வாங்கிய கடனுக்கான தவணைகளையோ வட்டியையோ கட்டாமல் இருந்தால், அந்த நிறுவனங் களை வாராக் கடன் இருக்கும் நிறுவனங் களாக வங்கிகள் அறிவிக்கின்றன.

ஏன் உருவாகிறது என்பிஏ?

எஸ்எம்இகளுக்கு என்பிஏ எனும் வாராக் கடன் ஏன் உருவாகிறது என்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். கடன் வாங்குபவரது தொழில் திறன், அனுபவம் குறித்த போதிய விவரங்கள் இல்லாமல் அதிகபட்ச தொகை கடனாக வழங்கப் படுவது ஒரு காரணமாக இருக்கலாம்.

தொழில்முனைவோர்கள் அவர்கள் தொழில் செய்யப்போகும் சந்தையைப் பற்றிய போதிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பதும், தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்றவாறு மாறாமலும் இருக்கலாம். தகுதிக்கு மீறிய அளவில் அளிக்கப்படும் இந்தக் கடனை சரியாக திரும்பக்கட்ட முடியாமல் போகும் போது அது வாராக் கடனாக மாறிவிடுகிறது.

எஸ்எம்இகள் வாங்கிய கடனை 90 நாட்களுக்குள் ஒருமுறை கூட திரும்பக் கட்ட வில்லை எனில், வங்கிகள் அந்தக் கடனை உடனடியாக திரும்பக் கட்டச் சொல்லும். அப்படி செய்யத் தவறும்போது மேற்கொண்டு பரிவர்த்தனை செய்ய முடியாதபடிக்கு வங்கிக் கணக்கை, வங்கியானது தடை செய்யும். உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டு, உங்கள் கணக்கில் உள்ள பணமும், உங்கள் கணக்கில் செலுத்தப்படும் பணமும் நீங்கள் கட்டவேண்டிய கடனுக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளப்படும். மேலும், வாராக் கடனை நீண்ட நாட்களுக்குச் செலுத்தவில்லை எனில், வேண்டுமென்றே பணம் செலுத்த தவறியவராக (வில்ஃபுல் டீஃபால்டர்) அறிவிக்கப்படும். அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எப்படித் தவிர்ப்பது?

எஸ்எம்இக்களுக்கு வாராக் கடன் ஏற்படாமல் இருக்கப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் தவிர்க்கலாம்.

1.திட்ட அறிக்கையைத் தயாரிக்கும்போது ‘ஸ்வாட் அனாலிசிஸ்’ எனப்படும் அந்தத் தொழிலில் உள்ள சாதக, பாதகங்கள், வாய்ப்புகள் ஆகியவற்றை அறிந்து அதற்கேற்ப மதிப்பீடு செய்து தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைக்கு ஏற்றவாறு கடன் வாங்குவது சிறந்தது. 5 லட்சம் ரூபாய் கடனை திரும்பக் கட்டும் திறன் கொண்ட ஒரு தொழிலுக்கு 10 லட்சம் கடன் வாங்குவது தேவையற்ற என்பிஏவை ஏற்படுத்துவதாக அமையும்.

2. சந்தை பற்றிய தெளிவான கணிப்பு அவசியம் வேண்டும். நிதிச் சந்தை பற்றி மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சந்தை குறித்த தெளிவான கணிப்பு அவசியம் வேண்டும். அப்போதுதான் அவர்கள் தயாரிப்பை சரியான இடத்துக்குக் கொண்டு சேர்க்க முடியும். அப்படிக் கணித்து ஆரம்பிக்கும் தொழில்கள் சரிவையோ அல்லது நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு கடனை திரும்பக் கட்ட முடியாத சூழல் ஏற்படாது.

3. இதில் எஸ்எம்இக்களின் பங்கு எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவுக்கு வங்கிகளுக்கும் பங்கு உள்ளது. எஸ்எம்இக்களுக்குச் சரியான நேரத்தில் கடனை வழங்குவது அவசியம். அவர்களுக்கு நல்ல விற்பனை சூழல் உள்ள காலத்தில் கடன் வழங்க தாமதப்படுத்தி சீஸன் இல்லாத நேரத்தில் வழங்கப்படும் கடன் வாராக் கடனையே ஏற்படுத்தும்.

4. குறிப்பிட்ட கால அளவுகளில் நிறுவனத்தின் வரவு செலவுகளையும், கடன் பயன்பாட்டையும் மதிப்பீடு செய்யுங் கள். அது உங்களது கடன் தொகை மற்றும் கடனை செலுத்த வேண்டிய செயல்களை நோக்கிய திட்ட மிடுதலுக்கு உதவும். இதனால் வாராக் கடனை தவிர்க்க முடியும் என்ற நிலை உருவாகும்.

5. வங்கிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருக்க வேண்டும். வங்கி கடன் கொடுத்த நிறுவனத்தைக் கண்காணிப்பில் வைத்திருப்ப தும், அதன் நிதி நிலை குறித்த தகவல்களை அப்டேட்டாக வைத்திருப்பதும் அவசியம். இப்படிச் செய்யும்போது, ஒருவேளை நிறுவனத்தின் நிலை சரியில்லாமல் இருந்தால் அதனை மறுசீரமைப்புச் செய்ய வங்கிகள் உதவ முடியும் என்பதால் தொடர் மேற்பார்வை அவசியமாகும்.

6. தொழில்முனைவோர்களும் தங்களது தொழில் உத்திகள் சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டபிறகு அதனைச் சரிசெய்ய நினைத்தால் அது சிரமமாக இருக்கும். அதனைத் தவிர்த்து ஆரம்ப நிலையிலேயே பிரச்னைகளைக் களைந்து சரி செய்யும்போது நிறுவனத்தின் நிதிநிலை சரி செய்யப்படும்.

வங்கிகளும் திரும்பக் கட்டப்படாத அனைத்துக் கடன்களையும் வாராக் கடன் என அறிவிக்காமல், தகுதிக்கேற்ப கடன் தருவதோடு, சரியான வழிகாட்டுதல்களையும் அளித்தால் மட்டுமே எஸ்எம்இகளும் சிறப்பாகச் செயல்பட முடியும். அவர்களின் கடன் சுமையும் குறையும். வாராக் கடன் மதிப்பும் அதிகரிக்காது’’ என்று முடித்தார்.

இவர் கூறியதுபோல எஸ்எம்இகள் செயல்பட் டால் வாராக் கடன் பிரச்னையைத் தவிர்க்க லாமே!

என்பிஏவால் என்ன பாதிப்பு?

1. வங்கிகளுக்கு வரும் வருமானம் மற்றும் அதன் சொத்துக்கள் பாதிக்கப்படும்.

2. புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடமுடியாமல் போகும்.

3. அரசுக்கு வரவேண்டிய சேவை வரி/கலால் வரி/விற்பனை வரிப் போன்றவைகளில் வருமானம் குறையும்.

4. வங்கிகள் வழங்கும் கடன்களின் எண்ணிக்கை குறையும்.

ச.ஸ்ரீராம்

படம்: ஹரிஹரன்.