Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!

Published:Updated:

அக்ரி கமாடிட்டி

சென்னா (Chana)

சென்னா உற்பத்தி ஏரியாக்களில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக சென்னா உற்பத்தியும், அறுவடையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் கடந்த வாரத்தில் சென்னாவின் விலை குறைந்து வர்த்தகமானது. பிராஃபிட் புக்கிங் மற்றும் புது வரத்துகள் அதிகரித்துக் காணப்பட்டதால், ஃப்யூச்சர் சந்தையிலும் சென்னாவின் விலை 0.52% குறைந்து காணப்பட்டது. இரண்டாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2014-15-ம் ஆண்டுக்கான சென்னா உற்பத்தி 8.28 மில்லியன் டன்னாக இருக்கும் என்று தெரிகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 9.53 மில்லியன் டன்னாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்!

அரசின் 2015 பிப்ரவரி 13-ம் தேதி அறிக்கையின் படி, சென்னா பயிர் விதைப்பானது 16% குறைந்து 85.91 லட்சம் ஹெக்டேர்களாக உள்ளன என்பதும், இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 102.25 லட்சம் ஹெக்டேர்களாக இருந்தது என்பதும் தெரியவந்துள்ளது. நீண்டகால நோக்கில் பார்க்கும் போது, சென்னா உற்பத்தியானது குறைந்திருக்கும் என்கிற எதிர்பார்ப்பால், விலையானது உயர வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

மஞ்சள் (Turmeric)

தென் இந்தியாவிலுள்ள நேரடி சந்தைக்குத் தரமான மஞ்சள் வரத்து அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தைகளில் மஞ்சள் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த வாரத்தின் மஞ்சள் விலையானது அதிகரித்துக் காணப்பட்டது. தவிர,  கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் விளையும் மஞ்சளானது பாதிப்படைந்துள்ளது என்கிற செய்தியும் மஞ்சள் விலையை உயர்த்தியுள்ளது.

கடந்த அக்டோபர், 2014-ல் ஆந்திராவில் ஏற்பட்ட புயல் காரணமாக மஞ்சள் பயிர் சேதம் அதிக அளவில் காணப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த நிலையானது தொடர்வதும் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாகும். காஸ்மெட்டிக் மற்றும் மருத்துவத் துறையில் மஞ்சளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மஞ்சள் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகளும் வர்த்தகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆந்திராவில் 10,000 ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், 2014-15-ம் ஆண்டில் 13,000 ஹெக்டேராகவும், தெலங்கானாவில் 43,100 ஹெக்டேராக இருந்த மஞ்சள் விளைச்சல் தற்போது 44,600 ஹெக்டேர்களாகவும் அதிகரித்துக் காணப் படுகிறது. 
தரமான மஞ்சள் வரத்து சந்தைக்கு அதிகரித்துக் காணப்படுவதால், வரும் வாரங்களில் விலையிலும் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்!

பருத்தி (Cotton)

உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் சந்தைக்கு வரத்துக் குறைவு போன்ற விலை உயர்வுக்கான காரணிகள் காணப்பட்டாலும், பிராஃபிட் புக்கிங் காரணமாகக் கடந்த வாரம் பருத்தி விலையானது குறைந்து வர்த்தகமானது.

பருத்தி ஏற்றுமதிக்கு புதிய சந்தைகளான வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகமாகக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதால் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, பருத்தி உற்பத்தி பிப்ரவரி 18, 2015-ம் தேதியில் 351.5 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை என்பது 170 கிலோ) இருக்கிறது எனவும், இது இதற்கு முந்தைய ஆண்டை விடச் சற்று அதிகம் எனவும் வேளாண் அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. 2014-15-ம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த பருத்தி உற்பத்தி 39.70 மில்லியன் மூட்டைகள் எனவும், இது முந்தைய ஆண்டின் கணக்கீட்டை விடச் சற்றுக் குறைவு எனவும்  இந்திய காட்டன் அசோசியேஷன் கூறியுள்ளது.

நடப்பு ஆண்டின் ஜனவரி 11-ம் தேதி வரையிலான பருத்தி வரத்து 168.31 லட்சம் மூட்டைகளாகக் காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 3%  அதிகமாகும். 2014-15-ம் ஆண்டின் அக்டோபர்-செப்டம்பர் பருவத்துக்கான பருத்தி உற்பத்தி மொத்தம் 406 லட்சம் பைகளாக இருக்கும் என்று இந்திய பருத்தி கூட்டமைப்பு கணக்கிட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலம் 120 லட்சம் மூட்டை உற்பத்தியுடன் முதலிடத்திலும், இதனைத் தொடர்ந்து மஹாரஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் சீமாந்திரா ஆகிய பகுதிகளில் பருத்தி உற்பத்தி முறையே 90 லட்சம், 45 லட்சம், 33 லட்சம் மற்றும் 30 லட்சம் மூட்டைகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தை நிலவரங்கள் பருத்தி உற்பத்தி குறைந்துள்ள தாகக் கணக்கிட்டிருப்பதால், இனிவரும் வாரங்களில் விலை அதிகரிக்கும் என வர்த்தகர்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.

கமாடிட்டி டிரேடிங்!

சோயாபீன் (Soybean)

ஆயில்மீல் ஏற்றுமதி தேவை குறைந்து காணப்படுவதால், சோயாபீன் விலையானது குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 2014-15-ம் ஆண்டில் சோயாமீல் ஏற்றுமதி 40% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குறைவுக்குக் காரணம், இந்தியாவிலிருந்து சோயாமீல்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளான ஈரான் மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் தற்போது தென் அமெரிக்காவுக்கு அதிக இறக்குமதி ஆர்டர்களை வழங்கி வருவதுதான்.

நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் இந்தியாவின் சோயாமீல் ஏற்றுமதி 71% குறைந்து, 1,04,426 டன்னாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,64,443 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் மொத்த சோயாபீன் உற்பத்தியானது 315.1 மில்லியன் டன்னாக இருப்பதாக WASDE அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே ஆகிய நாடுகளின் உற்பத்தி முறையே 94.5 மில்லியன் டன், 56 மில்லியன் டன் மற்றும் 8.5 மில்லியன் டன் ஆகும். சோயாமீல் ஏற்றுமதி குறைவு காரணமாக சோயாபீன் விலை குறைந்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கார்த்திகேயன்

மெட்டல் & ஆயில்

 கச்சா எண்ணெய்!

“கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தைகளில்  குறைந்தே வர்த்தகமாகிறது. டபிள்யூடிஐ கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 42.03 டாலராக வர்த்தகமாகிறது. இது 2009லிருந்து வர்த்தகமான விலையிலேயே குறைவான விலையாகும். அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதும், எண்ணெய் கையிருப்பை அமெரிக்க தொடர்ந்து அதிகரிப்பதும் விலை குறைய காரணமாகியுள்ளன.

கமாடிட்டி டிரேடிங்!

அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 458 மில்லியன் பேரலாக உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் இறக்கத்தினால் உள்நாட்டு சந்தையிலும் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வர்த்தகமாகிறது.
தற்போது ஒரு பேரல் 2,861 ரூபாயாக உள்ள கச்சா எண்ணெயின் விலை 2,640 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது. அடுத்த வாரத்தில் சர்வதேச நிலவரங்களை பொறுத்து இந்திய சந்தைகளிலும், சர்வதேச சந்தைகளிலும் கச்சா எண்ணெய்யின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகும்.”

தங்கம்!

கமாடிட்டி டிரேடிங்!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தைகளில் அதிகரித்தே காணப்பட்டது. சென்ற வாரத்துக்குமுன் நான்-ஃபார்ம் பேரோல் தகவல்களால் இறக்கத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரம் சற்று அதிகரித்துக் காணப்பட்டது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித அறிவிப்பினால், விலை ஏற்றம் கண்டது. சீனாவில் தங்க ஏற்றுமதி மற்றும் இறக்கு மதிக்கு புதிய அனுமதிகள் வழங்க முடிவெடுத் திருப்பதால் மிகப் பெரிய சந்தை வாய்ப்பு காரணமாக தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,170 டாலராக உள்ளது. வரும் வாரங்களிலும் இதே நிலை நீடித்துத் தங்கத்தின் விலை ஏற்றத்திலேயே தொடரும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தைகளில் தங்கத்தின் விலை 1.27%  அதிகரித்துக் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்களைப் பொறுத்து இந்திய சந்தை களில் தங்கத்தின் விலை ஏற்றத்தில் காணப்படும்.

வெள்ளி!

கடந்த சில வாரங்களாகச் சரிவில் இருந்த வெள்ளியின் விலை, இந்த வார வர்த்தகத்தில் ஏற்றத்தில் காணப்பட்டது. சர்வதேச சந்தைகளில் டாலரின் மதிப்பு அதிகரித்ததும், தங்கத்தின் விலையில் காணப்பட்ட ஏற்றமும் வெள்ளியின் விலை அதிகரிக்க காரணமாகின. மேலும், அடிப்படை உலோகங்களின் விலையில் காணப்பட்ட ஏற்றமும் வெள்ளியின் விலை அதிகரிக்கக் காரணமாகின. வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 16.1 டாலராக வர்த்தகமானது. இந்திய சந்தைகளில் வெள்ளியின் விலை 3% அதிகரித்துக் காணப்பட்டது. வரும் வாரங்களில் வெள்ளியின் விலை சர்வதேச நிலவரங்களைப் பொறுத்து வர்த்தகமாகும் என்று கூறப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்!

காப்பர்!

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை நிதானமாக உயர்த்தும் என்று கூறியுள்ளதால், அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. சர்வதேச அளவில் அனைத்து நாடு களும் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்துவதால் தொழிற்சாலை உலோகங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதாலும் காப்பரின் விலை உயர்ந்தது.  மேலும், இந்தோனேஷியாவில் உள்ள ஃப்ரீபோர்ட்-மெக்மோரன் கிராஸ்பெர்க் சுரங்கங்கள் பணியாளர் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டதும் காப்பரின் விலை ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளன. வரும் வாரங்களில் இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் காப்பரின் விலை சர்வதேச நிலவரங்களைப் பொறுத்து அதிகரித்தே காணப்படும் என்று கூறப்படுகிறது.

ச.ஸ்ரீராம்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism