Published:Updated:

ஜீரோ பைசா முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம்!

ஜீரோ பைசா முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம்!

ஜீரோ பைசா முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம்!

ஜீரோ பைசா முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம்!

Published:Updated:

‘‘மேக்கப்பில் இருந்து புகைப்படங்கள் வரை, மணப்பெண்ணுக்குத் தேவையான அனைத்து சர்வீஸ்களையும் வழங்குகிறது, ‘தமிழ் பிரைட்ஸ் கைடு’!’’ தன்னுடைய ஆன்லைன் பிசினஸ் குறித்து, இப்படி ஒன்லைன் அறிமுகம் தந்தார், பொழுதுபோக்கை, தொழிலாக மாற்றிய புத்திசாலி சென்னைப் பெண் காவ்யா.

ஜீரோ பைசா முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம்!

‘‘சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்தப்போ, என் காதல் திருமணம் முடிந்தது. இயல்பிலேயே எனக்கு மேக்கப், நகைகள், ஆடைகளில் எல்லாம் ஆர்வம் அதிகம். பொழுதுபோக்குக்காக ஒரு பிளாக் தொடங்கி, மேக்கப், ஆடை அலங்காரம், ஜடை அலங்காரம்னு மணப்பெண்ணுக்கான ஆலோசனைகளை எழுதினேன். என் தோழிகளுக்கு எல்லாம் திருமணம் நிச்சயிக்கப்பட்டப்போ, என் `பிளாக்’கை தேடி வந்து, சந்தேகம் கேட்டுக் கேட்டே என்னை எக்ஸ்பர்ட் ஆக்கிட்டாங்க. அப்போதான், இதையே பிசினஸாக்கும் ஐடியா வந்தது. இந்த டிஜிட்டல் யுகத்தில் எல்லா தகவல்களும் விரல்நுனியில் கிடைக்க அனைவரும் விரும்பும்போது, நாம ஏன் அவங்க கைக்குள்ளே கிடைக்கும் தகவலா இருக்கக் கூடாதுனு யோசிச்சதோட பலன்தான், ‘தமிழ் பிரைட்ஸ் கைடு’ ஆன்லைன் பிசினஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேக்கப், ஹேர்ஸ்டைல், நகை, மெஹந்தி, ஜடை அலங்காரம், ஃபேஷன் டிசைனர், புகைப்படக் கலைஞர், காஸ்மெட்டாலஜிஸ்ட், நியூட்ரிஷியன்னு மணப்பெண் சர்வீஸுக்குத் தேவையான எல்லா துறையினரையும் நான் ஒருங்கிணைத்திருக்கேன். இதில் எந்த சர்வீஸ்கள் எல்லாம் தேவையோ, அதையெல்லாம் வாடிக்கையாளர் ஆன்லைன் ஆர்டர் மூலமா கேட்டுப் பெறலாம். சம்பந்தப்பட்ட சர்வீஸ் நபர்களை, வாடிக்கையாளர்கள்கிட்ட அனுப்பி வைப்பேன். இப்போ கால்ஸ் நிறைய வர ஆரம்பிச்சிருக்கிறதால, கஸ்டமர்கள் - சர்வீஸ் ஆட்களை ஒருங்கிணைக்க மேனேஜரை நியமிச்சிருக்கேன். இதில் எனக்கான வருமானம், 15% கமிஷன். என் தொழிலுக்கு ஆன்லைன் விளம்பரங்கள் மட்டுமே இதுவரை கொடுத்திருக்கேன். ஆரம்பிச்ச ஒரு வருஷத்துக்குள்ள, இப்போ மாசம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன்!’’ என்று சர்ப்ரைஸ் கொடுத்த காவ்யா,

‘‘சென்னை, கோவைனு ரெண்டு ஊரிலும்தான் என் தொழிலுக்கான ஒப்பந்த வல்லுநர்கள் இருக்காங்க. இந்த ரெண்டு ஊரைத் தாண்டி, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் வரும்போது, இவங்கதான் அங்க எல்லாம் போறாங்க. இப்போ ஒவ்வொரு ஊரிலும் என் தொழிலுக்கான சர்வீஸ் ஆட்களைத் தேடிட்டு இருக்கேன். பிசினஸ் பார்ட்னர்களையும் வரவேற்கிறேன்’’ எனும் காவ்யா, மணப்பெண்களுக்கு கவுன்சிலிங்கும் கொடுத்து வருகிறார்... வாட்ஸ்அப் மூலமாக!

‘‘இதுவரை இந்தத் தொழிலுக்கு முதலீடுனு எதுவும் போடல. வரும் வருமானத்தில் இப்போதான் வெப்சைட் டிசைனிங், முகநூல் விளம்பரம்னு தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோறதுக்கான வேலைகளைப் பார்க்கிறேன். ஜீரோ பைசா முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம்... உங்களுக்கு தலைப்பு ஓ.கே-வா?!’’

 - கலகலவெனச் சிரிக்கிறார் காவ்யா!

சூப்பர்!

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism