கமாடிட்டி டிரேடிங்

மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் இந்தியா நிவேஷ் கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குமார் ஜெயின்.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தைகளில் அதிகரித்தே வர்த்தகமாகிறது. கடந்த டிசம்பர் 2014-க்குப் பிறகான அதிகபட்ச அளவை கச்சா எண்ணெய்யின் விலை அடைந்துள்ளது. அமெரிக்கா வில் எண்ணெய் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டு உள்ளதும், சவுதி அரேபியா, ஏமன் பிரச்னைகளாலும் வரத்துக் குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலையில் இறக்கம் காணப்படுகிறது.ஆனாலும் இந்த இறக்கம் கடந்த ஆண்டு ஜூன் மாத அளவை காட்டிலும் 40% குறைவுதான்.

ஒரு பீப்பாய் பிரன்ட் கச்சா எண்ணெய் 65 டாலர் என்ற அளவில் வர்த்தக மாகிறது. அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோவின் தலைமைப் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் கச்சா எண்ணெய்யின்  விலை ஏற்றத்துக்கு காரணமாகின்றன.

கமாடிட்டி டிரேடிங்

கச்சா எண்ணெய்யின் விலை இந்திய சந்தைகளிலும் அதிகரித்தே வர்த்தகமாகியது. வரும் வாரங்களிலும் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச மற்றும் இந்திய சந்தைகளில் ஏற்றத்துடனேயே காணப்படும். கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 3,900 ரூபாயிலிருந்து 4,050 ரூபாய் வரை செல்லலாம்.’’

தங்கம்!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தைகளில் குறைந்தே வர்த்தக மானது. அமெரிக்க ஃபெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கியும் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்பதற்கான சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது. வரும் செப்டம்பருக்குள் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற கருத்து நிலவுவதால், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1,180 டாலராக விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

கமாடிட்டி டிரேடிங்

இந்திய சந்தைகளிலும் தங்கத்தின் விலை 10 கிராம் 26,719 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளில் திருமண சீஸன் ஆரம்பிக்கும் என்பதால், தங்கத்தை நகைகளாக வாங்குபவர்களால் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும். வரும் வாரங்களில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி!

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சென்ற வாரத்திலிருந்து சற்று அதிகரித்து வர்த்தகமானது. டாலரின் மதிப்புக் குறைந்து வர்த்தகமானது, வெள்ளியின் விலை அதிகரிக்க காரணமானாலும் தங்கத்தின் விலை யில் காணப்பட்ட சரிவு, பெரிய ஏற்றம் ஏற்படாமல் தடுத்தது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 16.6 டாலருக்கு வர்த்தகமானது.

கமாடிட்டி டிரேடிங்

வரும் வாரங்களில் வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகலாம்.  இந்திய சந்தைகளில் வெள்ளியின் விலை 0.5%  அதிகரித்து காணப்பட்டது. இந்திய சந்தைகளில் வரும் வாரத்தில் வெள்ளியின் விலை சர்வதேச நிலவரங்களைப் பொறுத்து அமையும் என்று கூறப்படுகிறது.

காப்பர்!

காப்பரின் விலை சர்வதேச சந்தைகளில் 0.1% அதிகரித்து வர்த்தகமானது. அமெரிக்காவில் வீடுகள் விற்பனை தகவல்கள் தொடர்ந்து நல்ல வளர்ச்சியைக் காட்டுவதால், காப்பரின் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கிக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவராததும் அடிப்படை உலோகங்களின் விலை அதிகரிக்க காரணமாகியுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்

ஐரோப்பாவில் இருந்து சாதகமான பொருளாதார தகவல்கள் மற்றும் பணவீக்க தகவல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், சர்வதேச சந்தைகளில் காப்பரின் விலை வரும் வாரங்களில் அதிகரித்துக் காணப்படும் என்று கூறப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்

இந்திய சந்தைகளிலும் காப்பரின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட சரிவு, காப்பரின் விலை ஏறக் காரணமானது. சர்வதேச விலை நிலவரங்களைப் பொறுத்து இந்திய சந்தைகளில் காப்பரின் விலை இருக்கும் என்று கூறப்படுகிறது.

ச.ஸ்ரீராம்

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் (Turmeric)

தேவைக் குறைவு மற்றும் தரக் குறைவான மஞ்சள் வரத்து அதிகரித்ததால், கடந்த வாரத்தில் விலை குறைந்தே வர்த்தகமானது.

மஞ்சள் அதிகமாக விளையும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பாட் மார்க்கெட்டில் மட்டுமல்லாமல் ஃப்யூச்சர் மார்க்கெட்டிலும் மே மாத கான்ட்ராக்ட் விலை 3.53% குறைந்து வர்த்தகமானது.

கமாடிட்டி டிரேடிங்

2014-15-ம் ஆண்டு நிலவரப்படி, ஆந்திராவில் மஞ்சள் பயிரிடப் பட்டுள்ள பரப்பளவு 3,000 ஹெக்டேர் அதிகரித்து 13,000 ஹெக்டேராக உள்ளது.

அதேபோல, தெலங்கானாவில் 43,100 ஹெக்டேர்களாக இருந்த மஞ்சள் பயிர், 2014-15-ல் 44,600 ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது. மஞ்சள் ஏற்றுமதியும் ஏப்ரல்-டிசம்பர், 2015-ல் 8% அதிகரித்து, 65,000 டன்னாக காணப்படுகின்றது.

தரம் குறைந்த மஞ்சள் மற்றும் தேவைக் குறைவின் காரணமாக இனிவரும் வாரங்களிலும் விலை குறைந்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரகம் (Jeera)

உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதித் தேவைக் குறைவின் காரணமாக ஜீரகத்தின் விலை கடந்த வாரம் குறைந்து வர்த்தகமானது.

அரசின் சமீபத்திய அறிக்கையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 2.41 லட்சம் ஹெக்டேர்கள் ஜீரக பயிர் சேதமடைந் திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்

மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2014-15-ம் ஆண்டில் 1.58 லட்சம் டன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.

இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 54.3% குறைவாகும். குஜராத் அரசின் அறிக்கையில் ஜனவரி 19, 2015 நிலவரப்படி 2.64 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஜீரகம் விளைவிக்கப்படுவதாகவும், இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 42% குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஏற்றுமதியும் 2014-15-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 28% அதிகரித்துக் காணப்படுவதாக ஸ்பைஸஸ் போர்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

காட்டன் (Cotton)

வரத்துக் குறைந்து காணப் படுவதாலும், காட்டனுக்கான ஏற்றுமதி தேவை மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரித்து காணப்படு வதாலும் விலை அதிகரித்து காணப்படுகிறது.

அதேபோல ஃப்யூச்சர் கான்ட்ராக் விலையும் 0.43% அதிகரித்து வர்த்தகமானது. மிக முக்கியமாக, கபாஸ் காட்டனுக்கு வர்த்தகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ஏப்ரல்,16 கான்ட்ராக்ட் விலை 0.91% அதிகரித்துக் காணப்பட்டது. 

கமாடிட்டி டிரேடிங்

கடந்த மார்ச் மாத நிலவரப்படி, சந்தைக்கு 30.2 மில்லியன் பொதிகள் வந்திருப்பதாகவும், இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 30.6 மில்லியன் பொதிகளாக (ஒரு பொதி என்பது 170 கிலோ) இருந்ததெனவும் இந்தியாவின் காட்டன் கார்ப்பரேஷன் (Cotton Corporation of India) தெரிவித்துள்ளது. 

இந்திய காட்டன் நுகர்வு 278.5 லட்சம் பொதிகளாகவும், ஏற்றுமதி 70 லட்சம் மற்றும் இறக்குமதி 8 லட்சம் பொதிகளாகவும் கணக்கிடப் பட்டுள்ளது. காட்டன் ஏற்றுமதி இதற்கு முந்தைய ஆண்டில் 90 லட்சம் பொதிகளாகக் கணக்கிடப்பட்டு இருந்தது.    
 
2014-15-ம் ஆண்டுக்கான இந்தியாவில் மொத்த காட்டன் உற்பத்தி 39.7 மில்லியன் டன்னாக குறைந்து கணக்கிடப்பட்டிருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங்

உற்பத்திக் குறைவால் வரத்துக் குறைந்து காணப்படுவதும், ஏற்றுமதி தேவை அதிகரித்திருப்பதும் விலைக்குச் சாதகமான சூழலை உருவாக்கி இருக்கிறது.

செ.கார்த்திகேயன்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு