Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்

கமாடிட்டி டிரேடிங்

கமாடிட்டி டிரேடிங்

கமாடிட்டி டிரேடிங்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்

மெட்டல் & ஆயில்

தங்கத்தின் விலைபோக்கு குறித்து கூறுகிறார் அலைஸ் ப்ளூ கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ்

 தங்கம்!

“சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்ற வாரம் அமெரிக்காவில் வெளியான வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் அமெரிக்க பங்குச் சந்தை களுக்கு சாதகமாக இருந்ததால், தங்கத்தின் விலையில் இறக்கம் காணப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1,184 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை 1,095 டாலரில்  இருந்து 1,232 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகலாம். இந்திய சந்தைகளில் ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்ததால் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. ஜூன் மாத கான்ட்ராக்ட் 26,900 என்ற நிலையில் வர்த்தகமாகிறது. 27,000 என்ற தடுப்பு நிலையை உடைத்தால், ஏற்றத்தில் வர்த்தகமாகலாம்.'' 

கமாடிட்டி டிரேடிங்

 வெள்ளி!

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையில் குறைந்தே வர்த்தகமானது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவும், டாலரின் மதிப்பில் காணப்பட்ட ஏற்றமும் வெள்ளியின் விலை குறைய காரணமாகின. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 1.2% குறைந்து ஒரு அவுன்ஸ் 16.3 டாலருக்கு வர்த்தகமானது.

கமாடிட்டி டிரேடிங்

அதுமட்டுமன்றி, சர்வதேச சந்தையில் காப்பரின் விலையில் காணப்பட்ட ஏற்றமும் வெள்ளியின் விலை குறைய காரணமானது. வரும் வாரத்திலும் தங்கத்தின் விலையில் இறக்கம் காணப்படும் என்பதால் வெள்ளியின் விலை குறைந்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்திய சந்தைகளிலும் வெள்ளியின் விலை 0.48% குறைந்து வர்த்தகமானது. இந்திய சந்தைகளில் வெள்ளியின் விலை சர்வதேச சந்தைகளின் விலை நிலவரத்தைப் பொறுத்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி டிரேடிங்

 காப்பர்!

காப்பரின் விலை சர்வதேச சந்தைகளில் அதிகரித்தே காணப்பட்டது. சீனாவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் காப்பரின் விலை ஏற்றத்துக்கு காரணமாகின. கிரீஸ்  பிரச்னை காரணமாகவும் டாலரின் மதிப்பில் ஏற்பட்ட ஏற்றமும் காப்பரின் விலையேற்றத்தை தடுத்தது. இந்த காரணங்களால் காப்பரின் விலை 0.2% மட்டுமே அதிகரித்து வர்த்தகமானது.

கமாடிட்டி டிரேடிங்

இந்திய சந்தைகளில் ரூபாயின் மதிப்புக் குறைந்து காணப்படுவதால், காப்பரின் விலை அதிகரித்து காணப்பட்டது. சீன பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளால் காப்பர் வரும் வாரங்களில் அதிகரித்து காணப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்திய சந்தைகளில் ரூபாயின் மதிப்பைப் பொறுத்து காப்பரின் விலை அமையும் என்று கூறப்படுகிறது.

 கச்சா எண்ணெய்!

கமாடிட்டி டிரேடிங்

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தைகளில் குறைந்து வர்த்தகமானது. கச்சா எண்ணெய்யின் இருப்பு சர்வதேச அளவில் குறைந்து காணப்பட்டாலும் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வர்த்தகமானது. அமெரிக்க கச்சா எண்ணெய் கையிருப்பு 4 மில்லியன் பேரல்கள் குறைந்து காணப்பட்டது இது கடந்த ஜனவரி மாதத்திலிருந்து குறைந்த அளவாகக் கூறப்படுகிறது. ஏமன் பிரச்னைகள் நீடித்து வந்தாலும் டாலரின் மதிப்பில் காணப்படும் ஏற்றம் கச்சா எண்ணெய்யின் விலை குறைய காரணமாக இருக்கும். இந்திய சந்தைகளிலும் கச்சா எண்ணெய்யின் விலை 2.4%  குறைந்து காணப்படுகிறது. இந்திய சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச நிலவரங்களைப் பொறுத்து அமையும் என்று கூறப்படுகிறது.

ச.ஸ்ரீராம்

அக்ரி கமாடிட்டி!

சென்னா  (Chana)

கமாடிட்டி டிரேடிங்

தேவை அதிகரிப்பின் காரணமாக கடந்த வாரத்தில் சென்னாவின் விலை அதிகரித்து காணப்பட்டது. சென்னா விளையும் ஏரியாக்களில் கடந்த மார்ச் மாதத்தில் பருவம் தவறி  பெய்த மழையினால் அதிக பயிர் சேதம் ஏற்பட்டிருப்பதும் விலை உயர்வுக்கு காரணமாகும்.
வேளாண்மை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நாடு  முழுவதும் 11.2 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு ராபி பருவ பயிர்கள் சேதம் அடைந்திருக்கின்றன. இரண்டாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2014-15-ம் ஆண்டுக்கான சென்னா உற்பத்தி 8.28 மில்லியன் டன் எனவும், இது இதற்கு முந்தைய ஆண்டில் 9.53 டன்னாக இருந்ததும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரத்துக் குறைவு, தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்னாவின் விலை வரும் வாரங்களில் அதிகரித்து வர்த்தகமாகும்.

சோயாபீன்  (Soybean)

வரத்துக் குறைவு காரணமாக சோயாபீன் விலை கடந்த வாரத்தில் அதிகரித்து வர்த்தகமானது. இரண்டாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, இந்தியாவின் சோயாபீன் உற்பத்தி குறைந்து 116.41 லட்சம் டன்னாக காணப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், பருவநிலை மோசமாக காணப்படுவதுதான். இந்தியாவின் ஆயில்மீல் ஏற்றுமதி 44% குறைந்து காணப்படுகிறது. 

கமாடிட்டி டிரேடிங்

ஆயில்மீல் இறக்குமதி யாளர்களான ஈரான், ஜப்பான் நாட்டில் ஆயில்மீல் தேவைக் குறைந்து காணப்படுவதும், தென் அமெரிக்காவில் ஆயில்மீல் விலை குறைந்து காணப்படுவதால், அந்த நாட்டிலிருந்து அவர்கள் அதிகமாக வாங்க ஆரம்பித்திருப்பதும்தான் இதற்கு மிக முக்கிய காரணமாகும்.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி, சோயாமீல் ஏற்றுமதி 80% குறைந்து 45,917 டன்னாக காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 2,23,204 டன்னாக காணப்பட்டது. பிரேசில் சோயாபீன் உற்பத்தி 94.5 மில்லியன் டன்னாகவும், அர்ஜென்டீனா மற்றும் பராகுவே நாட்டின் சோயாபீன் உற்பத்தி முறையே 57 மில்லியன் டன் மற்றும் எட்டு மில்லியன் டன்னாகவும் காணப்படுகின்றன.

அதேபோல 2014-15-ம் ஆண்டுக்கான எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 532.8 மில்லியன் டன்னாக அதிகரித்து காணப்படுகிறது. வரத்துக் குறைந்து காணப்பட்டாலும், ஆயில்மீல் ஏற்றுமதி தேவைக் குறைந்து காணப்படுவதால் வரும் வாரத்தில் சோயாபீன் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

கடுகு விதை  (Mustard Seed)

சாதகமற்ற பருவ சூழ்நிலையால் பயிர் சேதம், வரத்துக் குறைவு போன்ற பல காரணங்களால் கடந்த வாரத்தில் கடுகுவிதை விலை அதிகரித்து காணப்பட்டது.

கமாடிட்டி டிரேடிங்

வேளாண்மை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் 17.77 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு பயிர் சேதம் உண்டாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. 2014-15-ம் ஆண்டின் கடுகு விதைக்கான உள்நாட்டு உற்பத்தி 5.74 மில்லியன் டன்னாக கணக்கிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட 12% குறைவாகும்.

அதேபோல பயிர் விளையும் பரப்பளவு 3.2% குறைந்து 63.8 லட்சம் ஹெக்டேராக காணப்படு கிறது. ஐரோப்பாவின் கடுகுவிதை உற்பத்தி 2013-14-ம் ஆண்டைவிட 14% அதிகரித்து 24.1 மில்லியன் டன்னாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா மற்றும் கனடாவின் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 2015-16-ம் ஆண்டுக்கான கடுகு விதை உற்பத்தி 21.1 மில்லியன் டன் இருக்கும் என்று ஐரோப்பிய கமிஷனின் எதிர்பார்ப்பாகும். இது இதற்கு முந்தைய ஆண்டைவிட மூன்று மில்லியன் டன் குறைவாகும். வரும் வாரங்களிலும் பயிர் சேதத்தினால் வரத்துக் குறைந்து காணப்படும் என்பதால் விலை அதிகரித்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஜீரகம் (Jeera)

ஸ்பார்ட் சந்தையில் வரத்துக் குறைவின் காரணமாக ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது. அதேபோல, ஃப்யூச்சர் சந்தையில் மே மாத ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் 1.26% அதிகரித்து வர்த்தகமானது. கடந்த மார்ச் மாதத்தில் பெய்த மழையின் காரணமாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் அரசின் அறிக்கையின்படி, 2.41 லட்சம் ஹெக்டேர் பயிர்சேதம் உண்டாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங்

மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2014-15-ம் ஆண்டுக்கான குஜராத் மாநிலத்தின் ஜீரக உற்பத்தி 1.58 லட்சம் டன் அளவுக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 54.3% குறைவாகும். கடந்த ஜனவரி 19-ம் தேதி நிலவரப்படி, குஜராத் மாநிலத்தின் ஜீரக விளைச்சல் 2.64 லட்சம் ஹெக்டேராகும். இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 4.54 லட்சம் ஹெக்டேராக இருந்தது. 2014-15-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1,28,500 டன் ஜீரகம் ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தைவிட 28% அதிகமாகும். 

இந்தியாவின் ஜீரக உற்பத்தி குறைவாக இருப்பினும், ஏற்றுமதி தேவை அதிகரித்து வரக் காரணம், ஜீரகத்தை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளான சிரியா மற்றும் துருக்கியில் அரசியல் பதற்றம் நிலவி வருவதே. தற்போதைய நிலையில் ஒரு குவிண்டால் ஜீரகத்தின் விலை 17,500 முதல் 18,000 ரூபாய் என்கிற நிலையில் வர்த்தகமாகலாம். இனிவரும் வாரங்களில் மோசமான பருவநிலை, பயிர் சேதம், குறைவான உற்பத்தி போன்ற காரணங்களினால் விலை அதிகரிக்கும்.

கமாடிட்டி டிரேடிங்

மஞ்சள்  (Turmeric)

நடுத்தர தரத்திலுள்ள மஞ்சள் வரத்து அதிகரிப்பு மற்றும் தேவைக் குறைவு போன்ற காரணங்களினால் சென்ற வாரம் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. மஞ்சளுக்கான ஏற்றுமதித் தேவை குறைந்து காணப்பட்டதும் விலை குறைவுக்கு காரணமாகும். ஈரோடு மஞ்சள் மண்டியைப் பொறுத்தவரை, தரமற்ற மஞ்சள் வரத்து காரணமாக ஒரு குவிண்டாலுக்கு 200 ரூபாய் வீதம் குறைந்து வர்த்தகமானது.தற்போதைய நிலையில் வட இந்தியாவில் மஞ்சளுக்கான தேவை குறைந்து காணப்படுவதும் தற்போதைய விலை குறைவுக்கு காரணமாகும்.

கமாடிட்டி டிரேடிங்

வருகிற ஜூன் மாதத்தின் முதல் வாரத்துக்குப் பிறகு வட இந்தியாவின் மஞ்சள் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தேவை குறைவு மற்றும் தரமற்ற மஞ்சள் காரணமாக வரும் வாரத்திலும் விலை குறைந்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கார்த்திகேயன்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!