மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்

இந்த வாரம் கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு பற்றி விளக்குகிறார் இந்தியா நிவேஷ் கமாடிட்டி நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் குமார் ஜெயின்

கச்சா எண்ணெய்!

‘‘கடந்த சில மாதங்களில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூபாய் 2,643-லிருந்து 3,989 ரூபாய் வரை ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெய் தற்போது, 3,600 முதல் 4,000 ரூபாய் என்கிற அளவில் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருவதைக் கடந்த சில வாரங்களாகப் பார்க்க முடிகிறது. தற்போது சுமாராக 3,870 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று ஆசியாவில் கச்சா எண்ணெய்யின் விலை இறக்கத்தில் வர்த்தகமா னது. நியூயார்க் மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்சில் ஒரு பேரல் டபிள்யூடிஐ கச்சா எண்ணெய்யின் டெலிவரி விலை 0.30% குறைந்து 60.59 டாலருக்கு வர்த்தகமானது.

2015-ல் உலக அளவில் கச்சா எண்ணெய்யின் தேவை நாள் ஒன்றுக்கு 1.4 மில்லியன் பேரல்கள் அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி ஏஜென்சி அறிவித்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்

உலக அளவில் கடந்த 2014-ல் நாள் ஒன்றுக்கு 92.6 மில்லியன் பேரல்களாக இருந்த கச்சா எண்ணெய்யின் தேவை 2015-ல் நாள் ஒன்றுக்கு 94 மில்லியன் பேரல்களாக அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. அமெரிக்க இயற்கை எரிவாயுவின் தேவை அதிகரிப்பு, சீனாவில் அதிக கார் விற்பனை போன்றவைதான் கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரிப்புக்கு காரணமாகும்.

கடந்த மே மாதம் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேரல்கள் அதிகரித்து 31.3 மில்லியன் பேரல்களை ஒபெக் (OPEC) நாடுகள் ஏற்றுமதி செய்தி ருக்கின்றன.

இந்த ஒபெக் அல்லாத நாடுகள் சப்ளையைக் குறைத்தும் ஒபெக் நாடுகளின் அதிக சப்ளையால் கச்சா எண்ணெய் சப்ளை கடந்த வருடத்தைவிட தினசரி 3 மில்லியன்  பேரல் அதிகமாக உள்ளது. ஒபெக் நாடுகள் தங்களுடைய சப்ளை டார்கெட்டைவிட தினசரி ஒரு மில்லியன் பேரல் அதிகமாக சப்ளை செய்கின்றன.

 அதேசமயம் அமெரிக்காவில் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து கையிருப்பு குறைந்துள்ளது. இந்தச் சமயத்தில் சவுதி அரேபியா தன் எண்ணெய் உற்பத்தியை, உலக கச்சா எண்ணெய் தேவையைக் கருத்தில்கொண்டு வரும் மாதங் களில் அதிகரிக்க இருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங்

கச்சா எண்ணெய்க்கான சப்போர்ட் தற்போது ரூ.3,850-3,650 என்ற அளவில் இருக்கிறது. ரெசிஸ்டன்ஸ் அளவு ரூ.4,000 ஆகும். ரூ.3,850க்கு கீழ் இறங்கினால் ரூ.3,780-3,730 வரை செல்லும்.

அதற்கும் கீழ் இறங்கும்போது ரூ.3,650 வரை செல்லலாம். மூன்று நாட்கள் தொடர்ந்தும், வாராந்திர அளவிலும் வால்யூமுடன் ரூ.4,000க்கு மேல் முடிவடைந்தால் ரூ.4,300-4,450 வரை செல்லலாம்.

தங்கம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 0.83 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமானது. டாலரின் மதிப்புக் குறைந்தது, கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னை, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த எதிர்பார்ப்பு போன்றவை தங்கத்தின் விலை ஏற்றத்தை சற்று தடுத்து நிறுத்தியுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்

எஸ்டிபிஆர் கோல்டு ஃபண்டிலிருந்து தங்கம் அதிகமாக விற்கப்ப டுவது விலையில் இறக்கத்தை ஏற்படுத்தலாம். சர்வதேச சந்தையில் கடந்த வெள்ளியன்று அவுன்ஸ் ஒன்று 1,179 டாலருக்கு வர்த்தக மாகியது. இந்தியச் சந்தைகளில் 10 கிராம் தங்கம் 26,900 ரூபாய் அளவில் வர்த்தகமாகியது.

அமெரிக்காவின் சில்லறை வர்த்தக விவரங்கள் அந்த நாட்டின் ஃபெடரல் வங்கியின் நிதிக் கொள்கையை நேரடியாகப் பாதிப்ப தால், தங்கத்தின் மீதான நீண்ட கால முதலீட்டை முதலீட்டாளர்கள் தவிர்த்து வருகிறார்கள்.

வெள்ளி!

இந்த வாரம் தங்கத்தின் விலை உயர்வைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் 0.2 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.

கமாடிட்டி டிரேடிங்

ஆனால், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தது மற்றும் ஐரோப்பிய பொருளாதாரச் சிக்கல்களால் விலை குறைந்து ஒரு அவுன்ஸ் வெள்ளி 15.91 டாலருக்கு வர்த்தகமானது.

இந்திய ஸ்பாட் சந்தைகளில் வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.36,723ஆக இருந்தது.

மு.சா.கெளதமன்

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் (TURMERIC)

வரத்துக் குறைவு மற்றும் வட இந்திய மாநிலங்களில் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த வாரத்தில் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமானது. மஞ்சள் விளையும் ஏரியாக்களில் பருவநிலை மோசமாகக் காணப்பட்டதும் விலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது.

கமாடிட்டி டிரேடிங்

கடந்த வியாழக்கிழமை அன்று நிஜாமாபாத் சந்தைக்கு வரத்து 800 பைகளாக (ஒரு பை என்பது 75 கிலோ) காணப்பட்டது. இது இதற்கு முந்தைய தினத்தைவிட 200 பைகள் குறைவாகும். நேரடி சந்தையைப் போலவே ஃப்யூச்சர் சந்தையிலும் மஞ்சள் விலை அதிகரித்து ஒரு குவிண்டால் 7,564 ரூபாய்க்கு வர்த்தகமானது.

 ஜூன் 10-ம் தேதி நிலவரப்படி, என்சிடிஇஎக்ஸ் கிடங்கில் 12,660 டன் மஞ்சள் கையிருப்புக் காணப்படுகிறது. உற்பத்திக் குறைவு காரணமாக இனிவரும் நாட்களில் தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதால் வர்த்தகர்களில் பலர் மஞ்சளை இருப்புவைத்துக் காத்திருக்கிறார்கள் என்று சந்தை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

இன்னும் சில வாரங்களுக்கு மஞ்சள் விலை ஏற்றத்தில் வர்த்தக மாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலக்காய்  (CARDAMOM)

அதிக உற்பத்தி குறித்த தகவல் காரணமாகவும், முக்கியச் சந்தை களுக்கு வரத்து அதிகரித்துக் காணப்பட்டதாலும் சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. மார்ச், ஏப்ரலில் பெய்யும் கோடைமழை காரணமாக ஏலக்காய் உற்பத்தி எப்போதும்போல இருக்கும் என ஏலக்காய் விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேசமயம், ஏலக்காய் அதிகம் விளையும் கெளதமாலா ஏரியாவில் தற்போது ஏலக்காய் உற்பத்தி குறைந் திருக்கிறது என்பதால், மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட் டுள்ளது. ஆனால், கெளதமாலாவில் நடப்பில் உற்பத்தியாகி வரும் ஏலக்காயின் தரம் சற்று குறைந்து காணப்படும் என்கிற தகவலாலும் விலை சரிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்

 கடந்த 2014-15ம் நிதியாண்டில் கெளதமாலாவின் ஏலக்காய் உற்பத்தி 29,000 முதல் 30,000 டன் என்கிற அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இது இதற்கு முந்தைய நிதியாண்டைவிட மிகவும் குறைவாகும். உற்பத்தி அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட் டுள்ளதால், இனிவரும் வாரத்திலும் விலை குறைந்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரகம் (JEERA)

உள்நாட்டுத் தேவை மற்றும் வெளிநாட்டுத் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களாலும், நடப்பு ஆண்டில் ஜீரக உற்பத்தி குறைந்து காணப்படுவதாலும் சென்ற வாரம் ஜீரகம் விலை அதிகரித்து வர்த்தகமானது.

ஜூன் 9-ம் தேதி நிலவரப்படி, என்சிடிஇஎக்ஸுக்குச் சொந்தமான கிடங்குகளில் 20,218 டன் ஜீரகம் இருப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இதற்கு முந்தைய தினத்தில் 20,187 டன்னாகக் குறைந்திருந்தது. நடப்புப் பருவத்தில் ஜீரகம் உற்பத்தி 2.84 லட்சம் டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2013-14ம் ஆண்டில் 4.02 லட்சம் டன்னாக இருந்தது.

கமாடிட்டி டிரேடிங்

நடப்புப் பருவத்தில் ஜீரகம் உற்பத்தி குறையும் என்று கணக்கிடப் பட்டிருப்பதும் விலை உயர்வுக்குக் காரணமாகும். நடப்பு 2014-15ம் பயிர் பருவத்தில் 5.70 லட்சம் ஹெக்டேரில் ஜீரகம் பயிரிடப்பட்டுள்ளது.

இது இதற்கு முந்தைய பயிர் பருவ காலத்தில் 8.04 லட்சம் ஹெக்டேராகக் காணப்பட்டது.தேவை அதிகரிப்புக் காரணமாக இனிவரும் வாரத்திலும் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னா (CHANA)

இந்திய அரசாங்கம் உள்நாட்டு தேவைக்காகவும், பருப்பு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற் காகவும் சென்னா உள்பட பல பருப்புகளை வழக்கத்தைவிட அதிகமாக இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருப்பதால் சென்ற வாரம் சென்னா விலை குறைந்து வர்த்தகமா னது.

கமாடிட்டி டிரேடிங்

இருப்பினும், பருவநிலை மோசமாக இருப்பதாலும், சென்னாவை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம்காட்டி வருவதாலும் மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. உள்நாட்டில் சென்னா சப்ளை தொடர்ந்து இருக்க, இறக்குமதி யாளர்கள் தங்களிடம் இருக்கும் சென்னா அளவை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

2014-15-ம் ஆண்டின் மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, சென்னா உற்பத்தி 7.59 மில்லியன் டன்னாகவும், முந்தைய இரண்டாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டில் 8.28 மில்லியன் டன்னாகவும் காணப்பட்டது.

கடந்த வருட சென்னா பயிர் விதைப்பைக்காட்டிலும் நடப்புப் பருவத்தில் குறைந்து 85.91 லட்சம் ஹெக்டேராகக் காணப்படுகிறது. இருப்பு அதிகரிப்பு, அரசு இறக்குமதியை அதிகரிக்கும் முடிவு போன்ற காரணங்களால் இனிவரும் வாரத்தில் சென்னா விலை குறைந்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்

சோயாபீன் (SOYBEAN)

ஆயில் கேக் மற்றும் சோயா ஆயிலுக்கான உள்நாட்டுத் தேவை குறைந்ததால் கடந்த வாரத்தில் சோயாபீன் விலை குறைந்து வர்த்த கமானது. இருப்பினும் வர்த்தகர்கள் சோயாபீன் வாங்க ஆர்வம் காட்டிய தாலும், வரத்து காலதாமதமானதாலும் சோயாபீன் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது.

கமாடிட்டி டிரேடிங்

சோயாமீல் அதிகம் வாங்கும் ஜப்பான் மற்றும் ஈரான் நாட்டிட மிருந்து அதன் தேவை குறைந்து காணப்படுவதால், இந்தியாவின் ஆயில்மீல் ஏற்றுமதி தேவை 44% குறைந்து காணப்படுகிறது.

2014-15-ம் ஆண்டின் மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, சோயாபீன் உற்பத்தி 107 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. தேவைக் குறைவு காரணமாக வரும் வாரத்தில் சோயாபீன் விலை குறைந்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கார்த்திகேயன்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு