60% தீர்வு!

‘என் வருமானம் இவ்வளவுதான். அப்பப்போ, வேறு ஏதாவது வேலை கிடைக்கலாம். அதுல கொஞ்சம் பணம் கூடுதலா வரும். நிச்சயமா சொல்றதுக்கு இல்லை. எனக்கு, மாசம் இவ்வளவு செலவு ஆவுது. என்ன பண்ண முடியும்..? நீங்களே சொல்லுங்கள்...’

இப்படிக் கேட்டுத் தெரிஞ்சிக்கறவங்க நம்ம நாட்டுல எத்தனை பேர் இருக்காங்க..? அப்படியே கேட்கவேண்டுமென்று நினைத்தாலும், யார் கிட்டபோய் கேட்கிறது..?

‘நிதி ஆலோசனை’ என்பது, ‘கேட்பவர் - தருபவர்’ ஆகிய இருவருக்கும் நல்ல பயன் தரக்கூடிய சேவை. ஆனாலும், கவனிப்பாரின்றிக் கிடக்கிறது. காரணம், ஆலோசனையின் அருமை, தெரியவில்லை!

‘நாம் விரும்புகிறோமா? நமக்கு இதில் உடன்பாடு உண்டா..?' என்பதான விவாதத்தில் இருந்து மிக நீண்ட தூரம் வந்துவிட்டோம்; ‘பணம்தானா எல்லாம்..? வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் இருக்கு. அதையெல்லாம் விட்டுவிட்டு, ஏன் இப்படி, பணம் பணமென்று அலையறாங்க..?’ என்று கேட்பது, இயலாமை; அல்லது அறியாமை.

இந்தப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையில், ‘சம்பாதிப்பது எப்படி..?’ என்பது மாறி, இப்போது, ‘சம்பாதித்த பணத்தைச் செலவு செய்வது எப்படி..?’ என்கிற அடுத்தகட்டத்துக்கு நாம் நகர்ந்துவிட்டோம். ஆம், தனிநபர் முதல் மிகப் பெரிய நிறுவனம் வரை, இருக்கிற நிதியைத் திறம்படக் கையாள்வதுதான் மிகப் பெரிய சவாலாக, இன்று முன்னிற்கிறது.

நாம், தனிநபரில் இருந்தே தொடங்குவோம்.

‘அவருக்கு என்ன... நல்லா வசதியாத்தான் இருக்காரு..’ என்று எதை வைத்துச் சொல்கிறோம்..? நம் கண்களுக்கு அவரது வாழ்க்கை முறை, எப்படிப் புலப்படுகிறதோ அதை வைத்துச் சொல்கிறோம், இல்லையா...? இது சரியா..?

‘செலவுமேல் செலவா வந்துக்கிட்டே இருக்கு.. எப்படிச் சமாளிக்கறதுன்னே புரியலை...’

இப்படிப் புலம்பாத மனிதனே இருக்க முடியாது. ஒருவர், இதை எவ்வளவு இடைவெளியில், எந்த அளவுக்கு இந்த வார்த்தையைச் சொல்கிறார்..? அதுதான், அவரது உண்மையான நிதி நிலவரம்.

ஆக, ஒருவரின் செலவுகளும், அதை அவர் நிர்வகிக்கும் முறையும்தான், அவர் எந்த அளவுக்கு ‘வசதியாக’ இருக்கிறார் என்பதைத் தீர்மானிக்கின்றன.

நம்முடைய செலவுகளைத் திறம்பட நிர்வகிக்கிறோமா... என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது..? செலவு செய்வதில் இதுதான் சரியான விதிமுறை என்று எதுவும் இருக்கிறதா..?

உண்மையைச் சொல்வதா னால், அப்படி எதுவும் இல்லை. அவரவர்க்கான செலவு அட்டவணையை அவரவரே தான் தீர்மானிக்க முடியும். ஆனாலும், சில கோட்பாடுகள், நமக்கு உதவியாக இருக்கும். ‘60% தீர்வு’, அவற்றில் ஒன்று.

ரிச்சர்ட் ஜென்கின்ஸ். ‘எம்எஸ்என் மணி’ என்கிற பொருளாதார இதழின் ஆசிரியர். இவர்தான் 60% தீர்வு முறையை முன்வைத்தவர்.

செலவு மேலாண்மையில் சற்றேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவில் கருதப்படும் கோட்பாடுகளில் இதுதான், ‘இப்போதைக்கு’ பிரதான இடம் வகிக்கிறது. என்னதான் சொல்கிறார் ஜென்கின்ஸ்..?

நமது செலவுகளில் ஐந்து வகைகள். ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்யலாம்..? பட்டியலிடுகிறார்.

1. கட்டாயச் செலவுகள்: 60%

2. கேளிக்கைச் செலவுகள்: 10%

3. எதிர்பாராச் செலவுகள்: 10%

4. பணி ஓய்வுக்காலத்துக்காக: 10%

5. நீண்ட கால சேமிப்பு: 10%

இந்தக் கோட்பாடு, நம் நாட்டுக்கு 'ஒத்துவருமா..?' என்று தோன்றலாம். இந்தப் பட்டியலை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இதில் வலியுறுத்தப்படும், 60% என்கிற செய்தியை மட்டும் உள்வாங்கிக் கொண்டால் போதுமானது.

எவையெல்லாம் ‘கட்டாய' செலவுகள்? உணவு, உடை, இருப்பிட செலவுகள் மட்டுமே அல்ல. இவையில்லாமல் நம்மால், ‘நாலு பேரு மத்தியில நாகரிகமா' வாழ முடியாது என்று எவை யெல்லாம் இருக்கின்றனவோ, அவற்றுக்கான செலவுகளும்தான்.

ஆக, பிள்ளைகளின் படிப்புக் கான கட்டணம், ‘டூ வீலர்'க்கான பெட்ரோல், தரமான காலணிகள் போன்றவை ‘கட்டாயம்' வகை யில் வந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

கட்டாயச் செலவுகள், வருமானத்தில் 60 சதவிகிதத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இது நம் கையில் இல்லை.

இதுதான் மொத்த பிரச்னையே. வீட்டு வாடகையில் இருந்து பள்ளிக் கட்டணம் வரை எதுவுமே நாம் நிர்ணயிப்பது அல்ல. இதிலே நாம் எதைக் குறைக்க முடியும்..? நமது ‘சக்திக்கு' அப்பாற்பட்ட சங்கதிகளை எப்படி ‘நிர்வகிப்பது'?

மேலும், இந்த 60% தீர்வு, மேலைநாட்டுக்கு உகந்ததாக இருக்கலாம். நம் நாட்டுக்கு...?

இங்குதான், 60% தீர்வில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. கேளிக்கைகள், ஓய்வுக் கால சேமிப்புக்காக 20% வரை ஒதுக்கவேண்டிய அவசியம் இல்லை.

‘கேளிக்கைகள்' விஷயத்தில், நம் நாடு ஒரு புதிர்! உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கேளிக்கைகளில் மிக மிக அதிக நேரத்தை வீணாக்குவதும், அதே சமயம், கேளிக்கைகளுக்காக, மிகக் குறைந்த அளவே பணம் செலவு செய்வதும் இந்தியாதான்!

ஒரு காலத்தில், ஐம்பது காசு கொடுத்து, ஆறு மணி நேரம் திரைப்படம் பார்த்தவர்கள் நாம். அதே நிலைதான் இன்றும்.

மாதம் சுமார் முந்நூறு ரூபாய் கொடுத்து, குடும்பம் மொத்தமும், டிவி முன்னால், பொழுதுபோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, ஜென்கின்ஸ் சொல்லும் 10% கேளிக்கை, நமக்கு இல்லை. பல குடும்பங்களில் இது, வருமானத்தில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

பணி ஓய்வுக்குப் பிறகான தேவைகளுக்காகச் சேமித்து வைக்கும் வழக்கம் மிக நல்லது தான். ஐயமில்லை.

ஆனால், கட்டாயச் செலவு களுக்கே நமது வருமானம் போதுமானதாக இல்லை என்னும்போது, இந்த செலவினத்தைச் சற்றே தள்ளிப் போடத்தான் வேண்டும். இன்னொரு மாற்றத்தையும் செய்தாக வேண்டிவரும்.

‘திடீர்' செலவுகளுக்கு என்று 10% ஒதுக்கீடு, நடைமுறையில், ‘போதவே போதாது'. ‘உறவுக்காரங்க எத்தனை பேர் இருக்காங்க.. அவங்க வீட்டுல ஒரு நல்லதுகெட்டதுன்னா போகாம இருக்க முடியுமா..? போயிட்டு, ஒண்ணும் ‘பண்ணாம'த்தான் வந்துட முடியுமா..?

அது மட்டும் இல்ல, நம்ம ஊருல யாருக்கு எப்போ உடம்புக்கு வரும்னு சொல்லவே முடியாது. ஒவ்வொரு மாசமும், யாராவது ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம போகும்; டாக்ட ருக்கு ஃபீஸ் ‘அழணும்'. பத்து பெர்சன்ட்தான்னு கணக்குப் பண்ணியா உடம்புக்கு வரும்..?'

ரொம்ப சரி. அதனால, நீண்ட கால சேமிப்புக்கான 10 சத விகிதத்தில் திடீர் செலவுகளுக்குப் பாதியை எடுத்து வைப்போம்.

இப்போது பாருங்கள், 60% கோட்பாடு, நமக்கு வேண்டிய வாறு அமைந்துவிட்டது. எப்படி..?

கட்டாயச் செலவுகள்: 80%

திடீர்ச் செலவுகள்: 5%

சேமிப்பு : 5%

வரையறைக்கு உட்பட்ட, நிலையான வருமானம் கொண்ட (வேறு யார்? மாத வருமானம் உடைய பணியாளர்கள்தாம்!), ‘நடுத்தெரு' வர்க்கத்தினருக்கு (ஓ.. ‘நடுத்தர வர்க்கம்' என்று சொல்ல வேண்டுமோ?) இந்தக் கோட்பாடு தவிர்த்து, வேறு எதுவும் ‘வேலைக்கு ஆகாது'.

அவர்களிலும், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு, 5% சேமிப்புதான், நடைமுறைக்கு ‘ஒத்துவரும்'. வருமானம் அதிகமாக அதிகமாக, 10%, 15%, 20% என்று உயர்த்திக் கொண்டு செல்லலாம்.

‘எல்லாம் சரி.. ஆனா, கட்டாயச் செலவுகளை, கட்டுக் குள்ள வச்சிக்கிறது எப்படி..?' இதற்குத்தான், ‘புத்திசாலித்தனம்' தேவைப்படுகிறது. இந்தப் புத்திசாலித் தனத்துக்கு இன்னொரு பெயர் தான் ‘செலவு மேலாண்மை'.

என்ன செய்ய வேண்டும்... என்பது ‘திட்டமிடல்'. என்ன வெல்லாம் செய்யக்கூடாது... என்பது - ‘புத்திசாலித்தனம்'. என்னவெல்லாம் கூடாது?

(சேர்ப்போம்)

படம்: ஆ.முத்துக்குமார்