Published:Updated:

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3

பிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், induswealth

பிரீமியம் ஸ்டோரி

பணத்தின் கால ரீதியான மதிப்பு!

ணத்தின் கால ரீதியான மதிப்பு  (Time value of money) குறித்துப் பாடம் நடத்துவது என்பது மிக எளிது. அதிலும் கல்லூரி மாணவர் களுக்கு இதைச் சுலபமாக புரியவைத்துவிடலாம். நான் உங்களுக்கு இன்றைக்கு ஆயிரம் ரூபாய் தருவதற்கும் நாளைக்கு ஆயிரம் ரூபாய் தருவதற்கும் வித்தியாசம் உள்ளதா என்ற கேள்வியை கேட்டால் என்ன பதில் வரும்?

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3

பேராசிரியர் கேட்கின்றாரே என நாளைக்கே கொடுங்கள் சார் என்று சொல்லக்கூடும். நாளைக்குப் பதிலாக அடுத்த வாரம், அடுத்த மாசம், அடுத்த வருடம் என்று காலத்தை நீட்டிக்கொண்டே போகையில் அட இது என்ன கலாட்டா! ஒருவேளை இந்த ஆள்  தரமாட்டாரோ என்ற சந்தேகம் வரும். காத்திருப்பதைவிட சுலபத்தில் இன்றைக்கு கையில் கிடைக்கும் பணமே உயர்ந்தது என்று புரிந்துகொள்வார்கள்.

அடுத்த வாரம் கிடைக்கும் ஆயிரம் ரூபாயைவிட அடுத்த வருடம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய்

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3

மதிப்பு குறைந்தது என்பது சட்டென்று அனைவருக்கும் புரிந்துவிடும். மதிப்பு குறைவு என்பது மனக்கணக்காக அனைவருக்கும் புரிகிறது.

ஏனென்றால், இன்றைக்கு கையில் இருக்கும் ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு நண்பனுடன் (ஏன் நண்பியுடன் போனால் ஆகாதா என்று கோபிக்காதீர்கள்?!) சினிமாவுக்குப் போகலாம், பீட்சா சாப்பிடலாம். ட்ரீட் கொடுக்கலாம்.

ஆனால் அடுத்த வருடம் தந்தால் சினிமா டிக்கெட் என்னவிலை இருக்குமோ? பிட்சா விலை என்னவாக இருக்குமோ?  அவசரமான தேவையோ, அவசரமில்லாத தேவையோ கையில் காசு இருப்பதைப் போன்ற வசதி ஒன்று இல்லை எனலாம்.

தொடர் முதலீடு ஒருவரை செல்வந்தராக்கும்..!

ஆகாஷ், அவனின் 25-வது வயது முதல் 60-வது வயது வரை ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறான். இதற்கு 10% வருமானம் கிடைத்தால், 60-வது வயதில் அது ரூ.29,912,681-ஆக அதிகரித்திருக்கும்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3

செல்வம் சேர்க்க இளம்வயதில் முதலீடு செய்வது அவசியம்! 

நான்கு நண்பர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறார்கள். ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால்,

• ஆகாஷ் அவனின் 25-வது வயதில் ஆரம்பித்தால் > அவனது 60-வது வயதில் ரூ.3 கோடி கிடைக்கும்.

• பாஸ்கர் அவனின் 30-வது வயதில் ஆரம்பித்தால் > அவனது 60-வது வயதில் ரூ.1.6 கோடி கிடைக்கும்.

• சந்திரன் அவனின் 35-வது வயதில் ஆரம்பித்தால் > அவனது 60-வது வயதில் ரூ.1 கோடி கிடைக்கும்.

• துர்வ் அவனின் 40-வது வயதில் ஆரம்பித்தால் > அவனது 60-வது வயதில் ரூ.58 லட்சம் கிடைக்கும்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3

இளம்வயதில் முதலீடு - அதிக முதலீட்டு வாய்ப்புகள்!

நான்கு நண்பர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறார்கள். ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால்,

• ஆகாஷ் அவனின் 25-வது வயதில் முதலீட்டை ஆரம்பித்து, 40-வது வயதில் நிறுத்திவிட்டால் >அவனது 60-வது வயதில் ரூ.2.1 கோடி கிடைக்கும்.

• பாஸ்கர் அவனின் 30-வது வயதில் முதலீட்டை ஆரம்பித்து, 60-வது வயது வரை முதலீட்டைத் தொடர்ந்தால் >அவனது 60-வது வயதில் ரூ.1.6 கோடி கிடைக்கும்.

• சந்திரன் அவனின் 35-வது வயதில் முதலீட்டை ஆரம்பித்து, 60-வது வயது வரை முதலீட்டைத் தொடர்ந்தால் > அவனின் 60-வது வயதில் ரூ.1 கோடி கிடைக்கும்.

• துர்வ் அவனின் 40-வது வயதில் முதலீட்டை ஆரம்பித்து, 60-வது வயது வரை முதலீட்டைத் தொடர்ந்தால் > அவனது 60-வது வயதில் ரூ.58 லட்சம் கிடைக்கும்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3

முதலீட்டைத் தாமதமாகத் தொடங்கினால், அதிகத் தொகை முதலீடு செய்ய வேண்டும்.

நான்குபேரும் அவர்களின் 60-வது வயதில் ரூ.3 கோடி வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால், அவர்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

• ஆகாஷ் அவனின் 25-வது வயதில் முதலீட்டை ஆரம்பித்தால் >அவன் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

• பாஸ்கர் அவனின் 30-வது வயதில் முதலீட்டை ஆரம்பித்தால் >அவன் ஆண்டுக்கு ரூ.1.6 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

• சந்திரன் அவனின் 35-வது வயதில் முதலீட்டை ஆரம்பித்தால் >அவன் ஆண்டுக்கு ரூ.2.7 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

• துர்வ் அவனின் 40-வது வயதில் முதலீட்டை ஆரம்பித்தால் >அவன் ஆண்டுக்கு ரூ.4.6 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3

வருமான விகிதத்துக்கு முக்கியத்துவம்!

உங்கள் முதலீட்டின் மீதான வருமானம் தொகுப்பு நிதியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ரூ.1 லட்சத்தை 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7% வருமானம் கிடைத்தால், அது 35 ஆண்டுகளில் ரூ.10 லட்சமாக இருக்கும்.

• ரூ.1 லட்சத்தை 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 10% வருமானம் கிடைத்தால், அது 35 ஆண்டுகளில் ரூ.28 லட்சமாக அதிகரித்திருக்கும்.

• ரூ.1 லட்சத்தை 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 12% வருமானம் கிடைத்தால், அது 35 ஆண்டுகளில் ரூ.52 லட்சமாக அதிகரித்திருக்கும்.

• ரூ.1 லட்சத்தை 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 14% வருமானம் கிடைத்தால், அது 35 ஆண்டுகளில் ரூ.98 லட்சமாக அதிகரித்திருக்கும்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3

என்னதான் அடுத்த வருடம் உறுதியாய்க் கிடைக்கும் என்றாலுமே, இன்றைக்கு கையில் இருக்கும் காசுக்கு அது நிகரா குமா? நாளை கிடைக்கப்போகும் பணத்துக்கு கொஞ்சம் மதிப்பு குறைவுதான் என்பார்கள் மாணவர்கள்.

சரி, அடுத்தவருடம் தருகிறேன் என்று சொன்ன ஆயிரம் ரூபாயை இப்போதே தரவேண்டும் என்றால் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டால் கேஷுவலாக ஒரு ஐம்பது ரூபாய் குறைத்துக் கொண்டு 950 ரூபாய் கொடுங்க சார் என ஆனி மாதத்திலேயே ஆடித் தள்ளுபடியை அறிவிப்பார்கள். இதைத்தான் டிஸ்கவுன்ட் ரேட் என்கிறோம்.

சினிமாவும், பீட்சாவும்தான் செலவு என்றால் 950 ரூபாய். அதுவே பரீட்சைக்கு பணம் கட்ட இன்றைக்கு கடைசி நாள் என்றால், தொலையுது 900 ரூபாய் கொடுங்கள் என்பார்கள்தானே?

சரி நான் ஒரு பேராசிரியராய் ஆயிரம் ரூபாய் தரவேண்டும். அதே ஒரு ஏமாற்றுப்பேர்வழி யான நான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும்.

இப்போது கையில் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அடுத்த வருடம் ஒரேயடியாய் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்கிறேன். கையில் எவ்வளவு இருக்கிறது என்று கேட்கிறீர்கள்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3

எண்ணூறு ரூபாய் என்கிறேன். வந்தவரை லாபம் என என்னிடம் இருந்த அந்த எண்ணூறு ரூபாயை வாங்கிக்கொண்டு மறுவேலை பார்ப்பீர்கள்.

அதாவது, ஒரே கால கட்ட மானாலும் (ஒரே வருடம்) இரண்டுவகை நபர்கள் பணம் தரவேண்டியிருக்கும்போது டிஸ்கவுன்ட் ரேட் மாறுபடவே செய்கிறது.

எதிர்கால வரவுக்கு எதிராக இன்றே வாங்கிக்கொள்ள இருவேறு நபர்களுக்கு இருவேறு டிஸ்கவுன்ட் கொடுப்பதைப் போல்தான்  வணிகத்தில் எதிர்காலத்தில் வரும் லாபத்தையும் மதிப்பிட வேண்டும் என்று மாணவர் களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டு, மகிழ்ச்சியாக வகுப்பறையை விட்டு வெளியே வந்தேன்.

எனது மாணவர்களில் பெரும்பாலானோர், தள்ளுபடி விகிதம் மற்றும் வட்டி விகிதத் துக்கிடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்தவர்களாக இருந்தார்கள்.

நான் ஓராண்டு கழித்துத் தருவதாக 1000 ரூபாய் கடன் வாங்கியதால், மாணவர்கள் அதிகத் தொகையை ஆண்டு இறுதியில் எதிர்பார்த்தார்கள். பெரும்பாலானோர், இன்றைக்கு வாங்கும் பிட்சாவின் விலை, ஆண்டு இறுதியில் அதிகமாக இருக்கும். எனவே, அதிகப் பணம் தேவைப்படும் என்றனர்.  சிலர், வட்டியை வாடகை (rent) என்று அழைத்தனர். சிலர், அதை இன்றைய பணத்துக்கும் நாளைய பணத்துக்கும் இடைப்பட்ட பரிமாற்ற விகிதம் (exchange rate) என்றனர்.

பள்ளிக்கூட நாட்களிலே கூட்டுவட்டி பற்றி மாணவர்கள் அறிந்திருந்தார்கள். கூட்டு வளர்ச்சி என்கிற பவர் ஆஃப் காம்பவுண்டிங் பற்றிக் கேள்விப் பட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். அதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

அசோக்குக்கு அவனது 25-வது பிறந்தநாளில் ரூ.1 லட்சம் அன்பளிப்பாகக் கிடைத்தது. அதனை 10% வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்தான்.

அவனது 60-வது வயதில் அது ரூ.28,10,244-ஆக வளர்ந் திருந்தது. கூட்டுவளர்ச்சியின் வலிமை பற்றி ஐந்து விளக்கப் படங்களைப் பாருங்கள். அவை உங்களுக்கு எளிதில் விளங்க வைக்கும்.

(அலசுவோம்)

தொகுப்பு: சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு