கொஞ்சம் யோசிங்க பாஸ்!

ஆச்சர்யம். பொதுவாக எல்லாருமே, மொபைல் போன், இன்டர்நெட் போன்ற ‘நவீன’ செலவுகளில், சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றனர். மின்சார நுகர்வு, ‘காஸ்’ பயன்பாடு ஆகியவற்றில் அந்த அளவுக்கு இல்லையோ என்று தோன்றுகிறது. என்றாலும், அடிப்படையான நான்கு வகைச் செலவுகளில், நிச்சயமாக ‘மேலாண்மை’ தேவைப்படுகிறது.

1. கல்விக் கட்டணம்,

2. வீட்டு வாடகை,

3. மாதாந்திர, (அரிசி, மளிகை முதலிய) வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான செலவு,

4. போக்குவரத்துச் செலவு.

பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி, சமூக நோக்கத்துடன் பெற்றோருக்கு நாம் சொல்லும் கல்வி ஆலோசனை - தயவு செய்து, பிரபலமான கல்வி நிறுவனங்களின் பின்னால் ஓடுகிற வழக்கத்தை விட்டுத்தள்ளுங்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உட்பட (பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்) மிகச் சாதாரணப் பள்ளிகளில் இருந்து பல சாதனையாளர்கள், இன்றும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதேபோல், மிகப் பிரபலமான பள்ளியில் படித்து, ‘வீணாய்ப் போன’ (மன்னிக்கவும்) பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நம் வீட்டுக்கு அருகில் உள்ள, நம் சக்திக்கு உட் பட்ட, பள்ளி/ கல்லூரியில், பிள்ளைகளைப் படிக்க வைப்பதால் ஏற்படும் நன்மைகளை, ஒருகணம் யோசித்துப் பாருங்கள். அவர்களை எங்கேயோ, ‘கண்ணுக்குத் தெரியாத இடத்தில்’ படிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

சில பத்தாண்டுகளுக்கு முன்பு, அதற்கான கட்டாயம் இருந்தது, மறுப்பதற்கில்லை. இப்போது, நிலைமை மாறிவிட்டது. சின்னஞ்சிறிய நகரங்களில் கூட, தரமான பள்ளிகளும், கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளும் வந்துவிட்டன.

அது மட்டுமல்ல; முன்பெல்லாம் பெற்றோர் படிக்காதவர்களாக இருந்தனர். ஊர் மொத்தத் திலுமே, ஓரிருவர்தாம் படித்தவர்களாக இருந்தனர். அவர்களும், வேலைக்கு வெளியூர் போய்விடுவார்கள். வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை என்கிற சூழ்நிலையில், பிரபலமான நிறுவனங்களைத் தேடிப்போனதில் சிறிதளவாவது நியாயம் இருந்தது.

இப்போதுதான், பத்திரிகை கள், தொலைக்காட்சி, இன்டர் நெட் மூலம் நமக்குத் தேவையான

அத்தனை வழிகாட்டிக் குறிப்புகளும் இருந்த இடத்திலேயே கிடைக்கின்றனவே... (நாம் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறோமா என்பது வேறு!) போதாக்குறைக்கு, தனித் திறமையை வளர்ப்பதற்கான சிறப்புப் பயிற்சி நிறுவனங்களும் பரவலாக இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இன்னும் என்ன வேண்டும்..?

‘பிரபலம்’ என்கிற மாயையில் இருந்துவிடுபட்டால், கல்விக் கட்டணத்தில் மாதம் எவ்வளவு மிச்சம் ஆகிறது என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். ‘அப்பப்பா..!’ என்று இருக்கும்.

சொன்னால் நம்புவதற்குக் கடினமாகக்கூட இருக்கும். ஓர் உண்மையான உதாரணம். ஒருவர், தன் மகனை, வீட்டில் இருந்து 5-6 கி.மீ தள்ளி உள்ள பள்ளியில், மாதம் சுமார் 3,000 ரூபாய் கட்டணம் செலுத்திப் படிக்க வைத்தார்.

அவர்களின் வீட்டுக்கு மிக அருகில், அதாவது நடந்து செல்கிற தூரத்தில், ‘சாதாரண’ பள்ளி ஒன்று. அவருடைய சகோதரரின் மகள் அங்குதான் படித்தாள். இந்த ஆண்டு முடிந்த பொதுத் தேர்வில், தன்னுடைய மகனைவிட, சகோதரரின் மகள், மிக அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்று இருக்கிறாள். ‘பிற திறமைகளிலும்’ அவளே சிறந்து விளங்குகிறாள். ‘இவ்வளவு செலவு செஞ்சி என்ன பிரயோஜ னம்..?’ என்று புலம்பிக்கொண்டு திரிகிறார் அண்ணன்.

பள்ளி/ கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் சற்றே புத்திசாலித் தனத்துடன் நடந்து கொண்டாலே போதும். கல்விக் கட்டணச் சுமை, கட்டாயம், கணிசமாகக் குறையும். நினைவில் கொள் வோம். இப்போது நாம் பார்த்துக் கொண்டு இருப்பது, குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான செலவு மேலாண்மை.

இனி... வீட்டு வாடகை!

‘வருமானத்துல 30 சத விகிதத்துக்குக்குப் பக்கத்துல, வீட்டு வாடகைக்கே போயிடுது. இதுவும், வருஷா வருஷம் அதிகமாகிக் கொண்டேதான் போகுது. என்ன செய்யறதுன்னே தெரியலை...’

வீட்டு வாடகை. தீரவே தீராத பிரச்னைகளில் ஒன்றாகத் துரத்திக்கொண்டு இருக்கிறது. நேரடியாக, வாடகையைக் குறிவைத்துத் திட்டமிட முடியாது. பிறகு..?

முதலில், சேர், டேபிள் தொடங்கி, எந்தவொரு பொருளுமே கட்டாயம் வேண்டும் என்று தோன்றினால் அன்றி, வைத்துக்கொள்ளவே கூடாது. பல வீடுகளில் சோஃபா போன்ற ஃபர்னிச்சர் பொருட்கள் மிகுந்து கிடப்பதைப் பார்க்கலாம். ‘வீட்டுக்கு யாராவது வந்தா, உட்கார்றதுக்கு வேணும் இல்லை..?’ என்கிற கேள்வியில், நியாயம் இருக்கிற அளவுக்கு யதார்த்தம் இல்லை. சொந்த வீடு வந்த பிறகு, இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக வாங்கிப் போட்டுக் கொள்ளலாம்.

இப்போதைக்கு, மிகுந்த கண்டிப்புடன், வீட்டில் புழங்கும் பொருட்களின் எண்ணிக்கையைக் குறைத்தேயாக வேண்டும். அதன்மூலம், நமக்குத் தேவைப் படும், புழங்குமிடத்தின் அளவு குறையும். வாடகை வீட்டில் இருப்போர், முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் இதுதான்.

நமக்குத் ‘தேவையான அளவுக் கன்றி’ ஓர் அங்குலம்கூட அதிக மாக இல்லாத வீடாகத் தேர்வு செய்ய வேண்டும். இரு அறைகள் கொண்ட வீட்டில் இருப்போர் துல்லியமாகத் திட்டமிட்டால், ஒருவேளை, ஓர் அறை வீடே தமக்குப் போதும் என்பதை உணரலாம். பாதுகாப்பு தவிர்த்து, இதர வசதிகள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை; குறைந்த வாடகை வீட்டைத் தேர்வு செய்வதே அறிவுடைமை. ஆம், இடத்துக்கு வாடகை தரலாம். வசதிகளுக்கும் சேர்த்துத் தருவதற்கு ஏன் ஆசைப்பட வேண்டும்..?

‘கொஞ்சம் கஷ்டப்படுவோம், தப்பு இல்லை. இன்னைக்குச் சேர்த்து வச்சாதான், நாளைக்கி நமக்கென்று சொந்தமா ஒரு குடிசையாவது வாங்க முடியும்...’ இல்லத்தரசிகள் சொல்கிற இந்த ஆலோசனையைக் காட்டிலும் சிறந்ததாக, உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களாலும் தர முடியாது. இது உண்மை.

வேறு எதில் நாம், குறிப்பிடத் தக்க அளவில் செலவைக் குறைக்க முடியும்..?

அரிசி, புளி உள்ளிட்ட பொருட்கள்தாம் நமக்கு உதவுவன. இரண்டு தலைமுறை களுக்கு முன்பு ஒரு பழக்கம் இருந்தது. அறுவடைக் காலத்தில், ஓர் ஆண்டுக்கு வேண்டிய நெல் மூட்டைகளை வாங்கி அடுக்கி வைத்துவிடுவார்கள். கோடை யில் புளி, மலிவாகக் கிடைக்கும்; சந்தைகளில் பருப்பு, வாசனைப் பொருட்கள் குறைந்த விலையில் வாங்கலாம். இவ்வாறு,‘பார்த்துப் பார்த்து’, மொத்த விலையில் பொருட்களை வாங்கிப் போட்டுவிடுவார்கள். (இவை யெல்லாம் அப்படியொன்றும் ‘இடத்தை’ அடைக்காது. கவலை வேண்டாம்.)

அனேகமாக எல்லாருக்குமே, ‘போனஸ்’, ஊக்கத்தொகை (இன்சென்டிவ்), நிலுவைத் தொகை (அரியர்ஸ்) என்று ஏதோ ஒருவகையில், ஆண்டுக்கு ஓரிரு முறையேனும், மொத்தமாகப் பணம் வரத்தான் செய்கிறது. அதிலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை சமயங்களில் இயல்பைவிட அதிகமாகவே பணவரவு இருக்கும். இதை வைத்து என்ன செய்கிறோம்..?

செலவு செய்தால்தான் கொண்டாட்டம் என்று ஆகிவிட் டது. கோபம் வரும்போது குரலை உயர்த்திப் பேசுவதைப்போல, பண்டிகை என்று வந்துவிட்டால், மிதமிஞ்சிச் செலவு செய்வதை இயல்பாகக் கொண்டு விட் டோம். அதிகம் செலவு செய்யா மலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

‘நிறைய நாள் ஆச்சு பார்த்து...’ என்று இருக்கிற நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அளவளாவுதல், கடற்கரை, கோயில், பூங்கா போன்ற இடங்களுக்குக் குடும்பத்துடன் போய் வருதல்... இப்படி யெல்லாம்கூட திருவிழாக் களைக் கொண்டாடலாம். உண்மையில் இதுதான், இந்த நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்.

பண்டிகைக் கால பண வரவை, வீட்டுப் பொருட்களை மொத்த விற்பனையில் வாங்கு வதற்குப் பயன்படுத்தலாம். மொத்தமாக வாங்கும்போது, சில்லறை விலையில் ஏறத்தாழ 20 சதவிகிதத்துக்குமேல், மிச்சம் ஆகிறது. அது மட்டுமல்ல; சில மாதங்களுக்கு இந்தப் பொருட் களை நாம் வாங்க வேண்டிய தில்லை. அந்த வகையிலும், பணம் மிச்சப்படுகிறது.

வெளியூர் செல்லும் போதெல் லாம், ‘சிரமம்’ பாராது, அங்கே விலை குறைவாக என்ன கிடைக் கிறது என்று பார்த்து, வாங்கி வருகிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

இனி வருவது, போக்குவரத்துச் செலவு. அதை எப்படிச் சமாளிக்கலாம்..?

(சேர்ப்போம்)

ஃப்ளிப்கார்ட்டை முந்திய அமேஸான்!

ஸ்நாப்டீல், ஃப்ளிப்கார்ட்டைவிட அமேஸான் இணையதளத்தைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காம்ஸ்கோர் டேட்டா நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இதன்படி கடந்த மே மாதத்தில் மட்டும் 2.36 கோடி பார்வையாளர்கள் அமேஸான் வலைத்தளத்தைப் பார்வையிட்டிருக்கிறார்கள். ஃப்ளிப்கார்ட் வலைத்தளத்தை 2.35 கோடி பார்வையாளர்களும், ஸ்நாப்டீல் நிறுவனத்தின் வலைத்தளத்தை 1.79 கோடி பார்வையாளர்களும் பார்வையிட்டிருக்கிறார்கள்!