Published:Updated:

மெட்டல் & ஆயில்

மெட்டல் & ஆயில்

ந்த வாரம் தங்கத்தின் விலைப்போக்கு குறித்து கூறுகிறார் மும்பை காம்டிரென்ட்ஸ்

மெட்டல் & ஆயில்

நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன்.

தங்கம்!

“கடந்த வாரம் சர்வதேச சந்தையில் இறக்கத்தில்  வர்த்தக மானது தங்கம். கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியான விவசாயம் அல்லாத வேலை வாய்ப்பு, எதிர்பார்த்ததைவிடக் குறைந்திருந்தது. புதிதாக 2.33 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், 2.23 லட்சம் வேலைவாய்ப்பு களே புதிதாக உருவானது.  இதனால் அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்துவது  தாமதமாகலாம்.

கிரீஸ் கடன் பிரச்னையால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலிமையடைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர தாமதமாகும் என்பதால்,  அடுத்த வாரத்தில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து மீண்டும் குறையும்.

மெட்டல் & ஆயில்

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,150 டாலர் என்ற சப்போர்ட் லெவலை உடைத் தால், விலை மேலும் இறங்க வாய்ப்புண்டு. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.27,000 வரை உயர்ந்து, மீண்டும் 26,000 ரூபாய்க்குக் குறைலாம்.”

வெள்ளி!

தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டே வெள்ளி வர்த்தகமாகும். சர்வ தேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 15.6 டாலர் என்ற நிலையில் வர்த்தக மாகி வருகிறது. இது 15.50 டாலர் என்ற சப்போர்ட் நிலையிலும், 16 டாலர் என்ற ரெசிஸ்டன்ஸ் என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

மெட்டல் & ஆயில்

ஜூலை 5-ம் தேதிக்குப் பிறகு தான் கிரீஸ் கடன் பிரச்னை முடிவுக்கு வரும். எனவே, வரும் வாரத்தில் வெள்ளியின் விலை யானது ஒரு கிலோவுக்கு ரூ.36,500 என்ற நிலைக்கு உயர்ந்து மீண்டும் ரூ.35,000-க்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வியாழன் அன்று 4.2%  குறைந்து ஒரு பேரல் 57 டாலருக்கு வர்த்தகமானது. பூமிக்கு அடியி லிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை  நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் கையிருப்பு அதிகரிக்கலாம். இதன் விளைவாக, எண்ணெய்யின் விலை குறைந்து வர்த்தகமானது.

மெட்டல் & ஆயில்

கிரீஸ் கடன் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காமல் இருப்பது மற்றும் ஈரான் அணுகுண்டு போன்ற பிரச்னைகளின் அடிப்ப டையிலும் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்ற இறக்கம் இருக் கும். ஜூலை 4-ம் தேதி அமெரிக்கச் சந்தைகளுக்கு விடுமுறை. இதனால் விடுமுறை நாட்கள் அதிகமாகிவிட்டது. இதன்காரணமாகக் குறிப்பிட்ட அளவில் விற்பனை இருந்தது.

ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலையானது ரூ.3,580 என்ற நிலையை உடைத்து கீழே இறங் கினால், ரூ.3,450-3,320 வரை விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவே ரூ.3,580 என்ற நிலையை உடைத்து மேலே சென்றால், ஒரு பேரல் ரூ.3,820 என்ற நிலையை அடைய வாய்ப்புள்ளது.

மெட்டல் & ஆயில்

காப்பர்!

சர்வதேச சந்தையில் காப்பர் விலை 0.3% உயர்ந்தது. சீனாவின் ஈக்விட்டி சந்தையில் ஏற்பட்ட இழப்பைச் சரிக்கட்ட சீனாவின் ஹெட்ஜ் ஃபண்டுகள் லாபம் பார்க்க ஆரம்பித்ததும் காப்பரின் விலை இறக்கத்தைத் தடுத்தது.

மெட்டல் & ஆயில்

கிரீஸில் நிலவும் கடன் பிரச்னையினால் அதன்  வளர்ச்சி விகிதம் 2.5-லிருந்து 0 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. இதுவும் காப்பரின் விலை ஏற்றத்தைத் தடுத்துள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ காப்பர் 0.4%  குறைந்து,  ரூ.372.40க்கு வர்த்தகமானது. மேலும், கிரீஸ் கடன் பிரச்னைக்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லையெனில், டாலர் மதிப்பு பாதிப்படையும்.  இதனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே வரும் வாரத்தில் இந்திய சந்தை களில் காப்பரின் விலை அமையும்.

வரும் வாரங்களில் காப்பரின் விலை ரூ.380 என்ற ரெசிஸ்டன்ஸ் நிலையை உடைத்தால், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரா.ரூபாவதி

அடுத்த கட்டுரைக்கு