என் மனைவியின் டீமேட் கணக்கில் உள்ள பங்குகளை எனது டீமேட் கணக்குக்கு மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? இதற்கு எவ்வளவு செலவாகும்?

‘‘ஒரு டீமேட் கணக்கிலிருந்து இன்னொரு டீமேட் கணக்குக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஃப் மார்க்கெட் முறையில் பங்குகளை மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு ஆகும் செலவு அவர்களுடைய கணக்கில் இருக்கும் டெபாசிட்டரி பார்டிசிபன்ட்டைப் (டிபி) பொறுத்ததாகும்.’’

பிசிக்கல் ஃபார்மில் உள்ள ஷேர்களை டீமேட் கணக்குக்கு மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும்? இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

‘‘முதலில் ஒரு டெபாசிட்டரி பார்டிசிபன்ட்டை (டிபி) அணுகி, உங்களுடைய பான் கார்டு, முகவரிச் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் முதலியவற்றைச் சமர்ப்பித்து ஒரு டீமேட் கணக்கைத் துவங்க வேண்டும். பிறகு டீமேட் ரிக்வெஸ்ட் ஃபார்ம் என்ற படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் ஷேர் சர்ட்டிஃபிகேட்களை இணைத்து டிபியிடம் சமர்ப்பித்தாலே போதும்.’’

டீமேட் கணக்கில் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியுமா? முடியுமென்றால் யூனிட்களை விற்பது எப்படி?

‘‘மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியமில்லை. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்படும் முதலீடுகள் அனைத்தையும் டீமேட் கணக்கில் வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. மேலும், டீமேட் கணக்கில் உள்ள யூனிட்களை எப்போது வேண்டுமானாலும் அந்தந்த மியூச்சுவல் ஃபண்ட் வழியாக ரிடெம்ஷன் முறையில் காசாக்கிக் கொள்ளலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பங்குத் தரகர்களை வைத்து பங்குச் சந்தையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் விற்றுக்கொள்ளலாம்.’’

என் டீமேட் அக்கவுன்டில் ஒரு கோல்டு இடிஎஃப் யூனிட் இருப்பது தெரியாமல், சில ஆண்டுகளுக்கு முன்பு அதை குளோஸ் செய்துவிட்டேன். இப்போது அந்த இடிஎஃப் யூனிட்டை விற்க என்ன செய்ய வேண்டும்?

‘‘எந்த ஒரு டீமேட் கணக்கிலும் பங்குகள் நிலுவையில் இருக்கும்போது அந்தக் கணக்கை முடிக்க முடியாது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் அந்தக் கணக்கை முடிக்க விருப்பம் தெரிவித்து அதற்குண்டான படிவங்களைக் கையெழுத்திட்டு உங்கள் டிபியிடம் கொடுத்திருந்தாலும், அந்தக் கணக்கில் பங்குகள் இருக்கும் காரணத்தால் “ டு பீ குளோஸ்டு (TO BE CLOSED)’’ என்ற நிலையில்தான் இருக்கும். நீங்கள் உங்கள் டிபியை அணுகி உங்களுடைய அந்தப் பங்குகளை வேறு ஒரு கணக்குக்கு மாற்றுமாறு கோரலாம்.’’

வங்கிகளில் டீமேட் கணக்குத் தொடங்குவதால் கிடைக்கும் சௌகரியங்களும் அசௌகரியங்களும் என்னென்ன?

‘‘வங்கிகளில் டீமேட் கணக்குத் தொடங்குவதால் உங்களுடைய டீமேட் கணக்குக்கான கட்டணங்களைச் சுலபமாக அந்த வங்கியே உங்களுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் உங்களுடைய டீமேட் கணக்கு எப்போதுமே செயல்பாட்டில் இருக்கும். அசௌகரியங்கள் என்று பார்த்தால், பெரும்பாலும் வங்கிகள் அவற்றின் துணை நிறுவனங்கள் மூலமாகத்தான் பங்கு வர்த்தகங்களைச் செய்து வருகின்றன. இது சில முதலீட்டாளர்களுக்கு இடர்பாடாக இருக்கக்கூடும்.’’

பங்கு முதலீட்டுக்காக உள்ள டீமேட் கணக்கின் மூலம் கமாடிட்டியில் டிரேட் செய்ய முடியுமா?

‘‘முடியாது. கமாடிட்டியில் டிரேட் செய்ய வேறு டீமேட் கணக்கைத் தொடங்க வேண்டும்.’’
டீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்? ஒரு டீமேட் கணக்கு எண்ணை வைத்து முதலீட்டாளருக்குக் குறிப்பிட்ட பங்குகளை வாங்கிக் கொடுத்த புரோக்கர் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியுமா?

‘‘டீமேட் கணக்குகள் டெபாசிட்டரி என்ற நிறுவனத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட டிபிகளால் பராமரிக்கப்படுகின்றன. ஒரு டீமேட் கணக்கு எண்ணை வைத்து முதலீட்டாளருக்குக் குறிப்பிட்ட பங்குகளை வாங்கிக் கொடுத்த புரோக்கர் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அந்தக் கணக்கில் வர்த்தக விவரங்கள் அடங்கிய படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்தால் அதில் அவர் எந்தப் பங்கு தரகர் மூலம், என்ன தேதியில், என்ன பங்குகளை வாங்கினார் என்ற விவரம் தெரியவரும்.’’

டீமேட் என்பது ஆன்லைன் கணக்கு. இந்த விவரத்தை குடும்பத்தினருக்கு எப்படித் தெரிவிப்பது?

‘‘தற்போது செபி டீமேட் கணக்குகளுக்கு நாமினேஷன் கண்டிப்பாகத் தர வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. மேலும், மாதம் ஒருமுறை முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய அனைத்து டீமேட் கணக்குகளிலும் நடைபெற்ற பரிவர்த்தனைகள் மற்றும் பங்குகளின் விவரங்கள் அனுப்பப்படுகிறது. இதன்மூலம் முதலீட்டாளர் உயிரோடு இல்லாதபட்சத்தில் அவரின் குடும்பத்தினர் இந்தக் கணக்கைப் பற்றி அறிய ஏதுவாக இருக்கும்.’’

டீமேட் கணக்குத் தொடங்க எவ்வளவு செலவாகும்? ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் எவ்வளவு?

‘‘டீமேட் கணக்குத் தொடங்க எந்தவிதமான கட்டணமும் இல்லை. பராமரிப்புக் கட்டணங்கள் முதலீட்டாளர் தனது கணக்கைத் துவங்க தேர்ந்தெடுக்கும் டிபியைப் பொறுத்து மாறுபடும்.’’

நான் என் டீமேட் கணக்கில் முதலீடு எதுவும் செய்யாமல் ஃபரீஸ் செய்து வைத்திருக்கிறேன். அப்போதும் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டுமா?

‘‘நீங்கள் டீமேட் கணக்கில் பங்குகளை வைத்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பராமரிப்புக் கட்டணங்களை வசூல் செய்வதும் செய்யாததும் அந்தந்த டிபியைப் பொறுத்தது.’’

படம்: தி.ஹரிகரன்

நாணயம் விகடன் - ட்விட்டர் கேள்வி - பதில் நேரத்தில் டீமேட் குறித்த சந்தேகங்களுக்கு சென்னை சிடிஎஸ்எல் மேலாளர் ஏ.ஆர். வாசுதேவன் அளித்த பதில்கள்...