நல்லது நடக்கட்டும்!

சென்னை போன்ற மாநகரங்களில் வாழ்வோர், மாதந்தோறும் சில ஆயிரங் களை, போக்குவரத்துக்கு என்று தனியே எடுத்து வைக்க வேண்டி இருக் கிறது. மாதந்தோறும் ‘கன்வேயன்ஸ்’க்கே, இந்தளவு செலவு செய்ய வேண்டுமா..?

‘நாலு பேரு, நாலு திசையில் போறோம். அதுலேயும், ட்ராஃபிக்ல ஊர்ந்து ஊர்ந்து போறதுல, ஒரு லிட்டர் பெட்ரோல், ரெண்டு நாளைக்கு மேல வர மாட்டேங்குது. மாதம் 15 லிட்டர் பெட்ரோல், ஒவ்வொருத்தருக்கும். குடும்பம் மொத்தத்துக்கும், கிட்டத்தட்ட 60 லிட்டர்! போதாததுக்கு, ரிப்பேர் சார்ஜஸ், இன்ஷூரன்ஸ்... இதெல்லாம் வேறு.

எப்படிப் பார்த்தாலும், சுளையா 5,000 ரூபாயாவது எடுத்து வச்சாத்தான், அந்த மாதத்துக்கு ‘வண்டி ஓடும்’. என்ன பண்றச் சொல்றீங்க..?’

இதிலே ‘சொல்வதற்கு’ என்ன இருக்கிறது..? ‘எங்கேயும் போகாமல் மாதம் முப்பது நாட்களும் வீட்டுக்குள் ளேயே அடைந்து கிட’ என்றா சொல்ல முடியும்..? ஆனால், ஒன்று. நம்ப வேண்டும்; மிக நிச்சயமாக, செலவைக் குறைக்க முடியும்.

தெரியாதது ஒன்றும் இல்லை. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால், பெட்ரோலுக்கு ஆகும் செலவு மிகப் பெரிய அளவில் குறையும். ‘இதெல்லாம் ஒரு ஆலோசனையா..?’ என்று சிலர் முகம் சுளிக்கலாம்.

‘நானெல்லாம் பஸ்ல போயே வருஷக் கணக்குல ஆவுது..’ என்று பெருமையாய்ச் சொல்லிக்கொள்பவர்கள் ஏராளம். ‘பஸ்’ஸில் போவதால், சமூக அந்தஸ்து குறைந்துபோகும் என்று ஏன் எண்ண வேண்டும்..?

‘ஸ்டேட்டஸ்’லாம் விடுங்கள்... ‘டைம்’தான் பிரச்னை’. ஊக்கும். ஏற்றுக்கொள்வதற்கு இல்லை.

ஒரே வீட்டில் பல ‘டூ-வீலர்’கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக் கும் தனித்தனியே ஒவ்வொரு வண்டி. அத்தனை பேருக்குமா ‘டைம்’ பிரச்னை..?
‘வெட்டியா அரட்டை அடிச்சுட்டு, போக்கற பொழுதை, கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி, காலார நடந்துபோய், பஸ் பிடிக்கப் பயன்படுத்திக்கலாமே..? ‘பஸ்’லயோ, ‘டிரெய்ன்’லயோ ‘பேப்பர்’ படித்துக்கொண்டே போகலாமே..!

‘கூட்டத்துல நிக்கறதே பெரிய விஷயம். இதுல எங்க இருந்து படிக்கிறது..?’

சரி. அப்போ, காலையில் ஒரு ‘க்ளான்ஸ்’ மட்டும் போதும். ‘ராத்திரி வீட்டுக்கு வந்து, ‘சீரியல்’ பார்த்து ‘அழற’ நேரத்துக்கு, மொத்த பேப்பரையும் கரைத்துக் குடிங்களேன். யாரு வாணாங் கறா..?’
சொன்னால் நம்ப மாட்டீர் கள். சென்னை அடையாரில் இருந்து வில்லிவாக்கம் வரை போக, பேருந்தில் கட்டணம் எவ்வளவு தெரியுமா..? வெறும் ஒன்பதே ரூபாய்! ஒரு மணி நேரம் ஆகிறது. ‘டூ-வீலரில்’ போவதா னால் பெட்ரோலுக்கு எவ்வளவு தரவேண்டி இருக்கும்..?

அதுவும் இல்லாமல், போக்கு வரத்தில் வண்டி ஓட்டுகிற பதற்றம் வேறு. எல்லாம் போக, டூ-வீலரில் போனால் மட்டும், பத்து நிமிடத்திலா போய்ச் சேர முடியும்..? அப்போதும், ஏறத்தாழ முக்கால் மணி நேரம் ஆகும். எவ்வளவு நேரம் நமக்கு மிச்சம் ஆகிவிடப் போகிறது..?

அப்படியே மிச்சப்படுத்துகிற நேரத்தில், என்ன பெரிதாகச் சாதித்துவிடப் போகிறோம்..?
பணம் சேமிப்பதும் பணம் சம்பாதிப்பதுபோலத்தானே..? (‘மணி சேவ்டு இஸ் மணி யர்ன்டு’!)
இடையூறுகள் இல்லாமல் இல்லை. ஆனாலும், பொதுப் போக்குவரத்தைப் புறக்கணிப்பது அறிவுடைமை அல்ல.

பொதுப் போக்குவரத்து மற்றும் சைக்கிள் பயன்பாடு; இயன்றவரை நடந்தே செல்லுதல் ஆகியன, நாகரிக சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்று. இதனைத் தலைகீழாகக் கருதிக் கொண்டு இருக்கிறோம்.

‘பைக்’ இல்லாம, என் பையன், வீட்டு வாசல் படியைவிட்டுக் கால் வைக்கமாட்டான்’ என்று சொல்வதில் என்ன பெருமை இருக்க முடியும்..?

குறைந்த வருவாய்ப் பிரிவினரைப் பொறுத்தவரை செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றாலே, (உடல்) உழைப்புக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் பொருள். இது ஒன்றும் தவறான, செய்யக் கூடாத விஷயம் அல்ல. மாறாக, ஆரோக்கியத்துக்கு நல்லது.

பல நடுத்தரக் குடும்பங்களில், கணிசமான பணம், ‘ஆட்டோ’ கட்டணமாகச் செலவாகிறது. முதியவர்கள், நடப்பதற்குத் தயங்கினால் நியாயம் இருக்கிறது. இளைஞர், இளைஞிகளும் ‘ஒன்று, டூ-வீலர்; இல்லையா... ஆட்டோ’ என்று செயல்படுவது, அவர்களின் உடல் நலனுக்கும் நல்லது அல்ல; பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் உகந்தது அல்ல.

நடக்க வேண்டும். பேருந்து நிறுத்தத்துக்கு, ரயில் நிலையத் துக்கு, கடைகளுக்கு, அதே பகுதியில் வசிக்கும் நண்பர்களின் வீடுகளுக்கு, நடை தூரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு... நடந்து செல்கிற பழக்கத்தை உண்டாக்க வேண்டும். பிள்ளைகளை நிறைய நடக்க விட வேண்டும். ‘வெயிலா இருக்கே..’ ‘கால் வலிக்குமே..’ என்றெல்லாம் பச்சாத்தாபப்பட வேண்டாம்.

‘நல்லது; நடக்கட்டும்’ என்று விட்டுப் பாருங்கள். அதனால் ஏற்படும் நன்மைகளைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

பத்து வயதுகூட நிறையாத சிறுவர்களிடம், டூ-வீலர் தந்து, கடைக்குப் போய் வரச் சொல் லும் பெற்றோர் இருக்கிறார்களா.. இல்லையா..? அவர்களேதாம், ‘அநியாயத்துக்குச் செலவு ஆவுது.. என்ன செய்யறது..?’ என்று புலம்புவதைக் கேட் கிறோம். ‘சிறுகச் சிறுக சேமித்தல்’ என்று சொல்வார்களே... ‘சிறிய சிறிய செலவுகளைத் தவிர்த்தல்’ என்பதுதான் அது.

‘காலையில் இருந்து, கண்ணுக்குத் தெரியாம, ஐந்நூறு ரூபா செலவாயிடுச்சி..’ என்று கூறுபவர்களெல்லாம், இதில் பெட்ரோலுக்கு மட்டுமே நூறு ரூபாய்க்குக் குறைவில்லாமல் தந்திருப்பார்கள். என்ன அவசியம் வந்தது..?

ஒரு குடும்பத்துக்கு, ஒரு டூ-வீலர் போதும். வேண்டுமானால், இரண்டு வைத்துக் கொள்ளலாம். நான்கு வண்டிகள்..?

கூடவே கூடாது. பாதித் தூரம் வரை சேர்ந்தே போய், இறங்கி வேறு வண்டி பிடித்துக் கொள்ளலாம். மாலை வரும் போதும், (அவசரமாக இருந்தால்) வீட்டில் உள்ள யாரையேனும், பக்கத்தில் ஏதாவது ஓர் இடத்துக்கு வந்து, அழைத்துக் கொண்டு போகச் சொல்லலாம்.

தேவைப்படுவதெல்லாம், அப்போதைக்கு அப்போதைய திட்டமிடலும், ஒருவருக் கொருவர் சற்றே விட்டுக் கொடுத் தலும்தான். இதனால், எந்த அளவுக்குச் செலவு குறையும்..? ஏறத்தாழ மாதம் மூவாயிரம் வரை.
கணிசமாக இல்லை..?

கார் வைத்து இருக்கிற சற்றே உயர் பிரிவினராக இருந்தால், நாள்தோறும் அதே இடத்துக்கு, அல்லது, அதே திசையில், செல்கிற அண்டை அயலாருடன் சேர்ந்து ஒரே காரில் பயணிக் கலாம்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிற நோக்கத்தில் அறிமு கமான முறைதான் இது. செலவைக் குறைப்பதற்கும் பயன் படுகிறது என்பது கூடுதல் நன்மை.

இதுமாதிரியான ‘பூலிங்’ முறை, மும்பை போன்ற இந்தியப் பெருநகரங்களில் ஏற்கெனவே பிரபலம் அடைந்து வருகிறது. இது விஷயத்தில் சென்னை, சற்றே பின்தங்கியே இருக்கிறது. நாமும் பரிட்சார்த்த முறையில், சில நாட்கள் முயற்சித்துப் பார்க்கலாம். இது ஒன்றும் நிரந்தர ஏற்பாடோ, ஒப்பந்தமோ அல்ல. சரியான புரிதல் மட்டுமே போதுமானது. தேவையற்ற பேச்சுகளையும், விவாதங்களையும் தவிர்த்தாலே போதும். மிக நன்றாகச் செயல்படுத்த முடியும்.

நிறைவாக, சைக்கிளுக்கு வருவோம்.சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இன்றும், சைக்கிளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகு அதிகம்.நம் நாட்டில் ஏனோ, சைக்கிள், ‘பாமரர்களுக்கு’ உரித்தான வாகனமாக, இனம் பிரிக்கப் பட்டு இருக்கிறது.

இந்த ‘மனத்தடை’ (‘மென்டல் ப்ளாக்’) விலகினாலே போதும். ‘டூ-வீலர்’ பயன்பாடும், பெட்ரோலுக்கு ஆகும் செலவும் செங்குத்தாகக் குறையும்.

நியாயமாகவே இப்போது ஒரு கேள்வி, எழத்தான் செய்யும். வசதிகளைத் ‘தியாகம்’ செய்வதும், செலவுகளை நிராகரிப்பதும்தான் செலவு மேலாண்மையா..? நிச்சயமாக இல்லை.
சிலவகைச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, வேறு வகைச் செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்போகிறோம்.

சிலவற்றைத் தள்ளிப்போட்டு, வேறு சிலவற்றை உடனடியாக மேற்கொள்ள இருக்கிறோம். அதாவது, செலவுகளை ‘முன்னுரிமைப்படுத்து’கிறோம். எப்படி..? எந்த அடிப்படையில்..?

(சேர்ப்போம்)