உங்களுக்கான தொழிலைக் கண்டுபிடியுங்கள்!

கடந்த மூன்று வாரங்களாக நான் எழுதிவரும் இந்தக் கட்டுரைத் தொடரை தொடர்ந்து படித்துவரும் நீங்கள், பிசினஸ் தொடங்க முடிவு செய்திருப்பீர்கள்.

பிசினஸில் இறங்குவதற்குமுன், எந்தத் தொழிலைச் செய்வது? நம்மைச் சுற்றி பல ஆயிரக்கணக் கானத் தொழில்கள் இருக்கின்றனவே, இதில் நமக்கான தொழிலை எப்படித் தேர்வு செய்வது என்கிற கேள்வி உங்களுக்குள் எழும்.

முதலில் இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் கண்டாக வேண்டும். காரணம், முதன்முதலாக நீங்கள் செய்யப்போகும் தொழில் சரியாக அமைந்தால்தான், பிசினஸில் உங்களால் வெற்றிக் கொடியை நாட்ட முடியும்.

‘சார், எனக்கு பிசினஸ் செய்ய ஆசை. ஆனால், எந்த பிசினஸ் செய்வது என்று தெரியவில்லை! எனக்கு ஒரு நல்ல பிசினஸை சொல்லுங்களேன்!’ என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். நீங்கள் என்ன பிசினஸ் செய்ய வேண்டும் என்று நான் சொல்வதைவிட, உங்களுக்கான தொழிலை தேர்வு செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைச் சொன்னால் சரியாக இருக்கும்.

பிசினஸ் செய்ய முடிவு செய்துவிட்டால், அதைப்பற்றி வெறுமனே பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் இருந் தால், உங்களுக்கான தொழிலை உங்களால் கண்டுபிடித்துவிட முடியாது. துளியும் யோசிக்காமல், களத்தில் இறங்க வேண்டும்.

நீங்கள் ஒரு கடை வைத்து நடத்தப் போகிறீர்கள் என்றால், முதலில் ஒரு கடைத் தெருவுக்குச் செல்லுங்கள். அங்கு இருக்கும் ஒவ்வொரு கடையையும் கூர்ந்து பாருங்கள். அந்த இடத்தில் உங்களுக்கு இருக்கும் பிசினஸ் வாய்ப்பு என்ன என்று கண்டறியுங்கள்.

உதாரணமாக, ஒரு கடைத் தெருவில் முதல் கடை ஒரு ஜுவல்லரிக் கடை. அதற்கடுத்து, ஒரு ஜவுளிக் கடை. அடுத்து, ஒரு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கும் கடை. அடுத்து, ஒரு ஐஸ்க்ரீம் பார்லர். அடுத்து ஒரு பாத்திரக் கடை. அடுத்து, ஒரு பலசரக்குக் கடை. இப்படிச் சின்னதும் பெரியதுமாகப் பல கடைகள் வரிசையாக இருக் கின்றன.

இத்தனை கடைகளையும் தாண்டிச் சென்ற உங்களுக்குப் பளிச்சென ஒரு விஷயம் தெரிகிறது. இத்தனை கடைகள் இருந்தும் ஒரு ஹோட்டல் இந்தக் கடைத் தெருவில் இல்லையே என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். ஆக, அந்த இடத்தில் ஒரு ஹோட்டல் தொடங்க ஒரு வாய்ப்பு இருப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இதுதான் உங்களுக்கான தொழில் அல்லது பிசினஸ் வாய்ப்பு.

‘உங்களைச் சுற்றியுள்ள மனித சமூகத்துக்கு உங்களால் எப்படி உதவ முடியும் என்பதைக் கவனி யுங்கள். உங்களுக்கான தொழிலை எளிதில் கண்டுபிடித்து விடுவீர் கள்’ என்கிறார் அலிபாபாவின் ஜாக் மா. ஒரு கடைத் தெருவில் ஐம்பது கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளுக்குப் பல ஆயிரம் பேர் தினமும் வந்து போவார்கள். இவர்கள் சாப்பிட ஒரு நல்ல ஹோட்டல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நமக்குள் எழும் சிந்தனைதான் ஒரு ஹோட்டலை ஆரம்பிக்கும் பிசினஸ் வாய்ப்பாக மாறுகிறது.

ஆக, ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு நீங்கள் தொழில் தொடங்க நினைக்கும் கடைத்தெருவுக்குச் செல்லுங்கள். அங்கு என்னென்ன வெல்லாம் விற்கிறார்கள், என் னென்னவெல்லாம் விற்கவில்லை என்பதைப் பட்டியலிடுங்கள். அதிகம் விற்கப்படாத, அதே நேரத்தில் அங்குள்ள அதிக மனிதர்களுக்கு அவசியம் தேவைப்படும் பொருட்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அந்தப் பொருளை விற்பதில் உங்களுக்கு உள்ள வாய்ப்புகளைப் பரிசீலியுங்கள். இப்படிப் பரிசீலித்தபின் மூன்று, நான்கு தொழில்களை எழுதுங்கள்.

இதன் அடுத்த கட்டமாக, இந்த மூன்று அல்லது நான்கு தொழில்களைப் பற்றி மட்டும் விசாரிக்க ஆரம்பியுங்கள். உதாரணமாக, 1. ஹோட்டல் நடத்துவது, 2. வீடு கட்டத் தேவையான பொருட்களை விற்பது, 3. இருசக்கர வாகனங் களுக்கான உபகரணங்களை விற்பது என மூன்று தொழில்களை நீங்கள் ‘ஷார்ட் லிஸ்ட்’ செய் கிறீர்கள்.

உதாரணமாக, ஹோட்டல் நடத்த முடிவு செய்கிறீர்கள் எனில், ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும் சர்வரில் ஆரம்பித்து, சமையல்காரர், பொருட்களை பர்ச்சேஸ் செய்யும் மேனேஜர், அந்த ஹோட்டலின் முதலாளி என பலருடன் பேசுங்கள். குறைந்தது 15 ஹோட்டல்களை யாவது நீங்கள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி யிருக்கும்.

எந்த ஹோட்டல் முதலாளி யாவது தனது தொழில் ரகசியத்தை பகிர்ந்து கொள் வாரா? என்று நீங்கள் நினைக்க லாம். உங்களை ஒரு போட்டி யாளர் என்று நினைக்காத வரை அவர் கற்றறிந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ளத் தயங்கமாட்டார். எல்லோரும் உள்ளபடி பகிர்ந்துகொள்ளா விட்டாலும் சிலராவது சொல்லி விடுவார்கள். அவர்கள் சொல்வ திலிருந்தே நாம் பல விஷயங் களைக் கற்றுக் கொள்ளலாம்.

இப்படி ஒவ்வொரு தொழில் பற்றியும் உங்களுக்குச் சரியான தொரு புரிதல் வந்தபிறகு, கடைசி யாக உங்களுக்கு எல்லா வகை யிலும் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒரேயொரு தொழிலைத் தேர்வு செய்து அதில் தைரியமாக இறங்கலாம்.

இப்படி நீங்கள் தேர்வு செய்யும் தொழிலில் உங்களுக்கு நேரடியாக அனுபவம் இருக்க வேண்டும் என்பதற்காக, அந்தத் தொழிலில் சில ஆண்டுகள் வேலை செய்வது அவசியம் என்பார்கள் சிலர். இந்த முன் அனுபவம் தேவைதான். ஆனால், அதைவிட முக்கியம், நம்முன் உள்ள பிசினஸ் வாய்ப்பு.

ஒரு ஹோட்டல் தொடங்கி நடத்தும் வாய்ப்புப் பிரகாசமாக இருக்கிறது என்று தெரிந்தபின், அதில் உடனடியாக இறங்கிவிடு வதே சரி. அந்தத் தொழிலை நேரடியாகக் கற்றுக்கொள்கிறேன் என்கிற பெயரில் நாட்களைக் கடத்தினால், இன்னொருவர் அந்த பிசினஸ் வாய்ப்பை தட்டிச்சென்றுவிடும் ஆபத்து உண்டு. எனவே, ஒரு தொழிலை ஆரம்பித்துவிட்டு, அதில் இருக்கும் நெளிவுசுளிவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ள முயற்சிக்க லாமேயொழிய, ஒரு தொழிலை முழுவதுமாகத் தெரிந்துகொண்ட பின் தொடங்குவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது.

நமக்கான பிசினஸ் வாய்ப்பை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு எளிய வழி உண்டு. ‘திருச்சிக்குப் போயிருந்தேன். ஒரு துணிக்கடை. துணியை வாங்கியவுடனே அதைத் தைக்க அங்கேயே ஒரு டெய்லரிங் கடை. தைக்கக் குடுத்த துணி ரெடி ஆவதற்குள் சாப்பிட அருமையான சாப்பாடு. வீட்டுக்குத் தேவையான பொருட் களை அங்கேயே வாங்கிக் கொள்கிற மாதிரி ஒரு சூப்பர் மார்க்கெட் என அமர்க்களப் படுத்தி இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு கடையை நான் ஏன் சென்னை அண்ணா நகரிலோ, அடையாரிலோ தொடங்கக் கூடாது?’ என்று நீங்கள் எங்கேயோ பார்த்த ஒரு பிசினஸை உங்களூரில் தொடங்கலாம்.

இப்படிச் செய்வதற்கு ‘borrowed innovation’ என்று பெயர். இப்படிச் செய்யும்போது, ஒருவர் செய்ததை நீங்கள் அப்படியே காப்பி அடிக்கிறீர்கள் என்றாலும், உங்கள் ஏரியாவுக்கு அது புதிது. இதை வேறு ஒருவர் நடைமுறைப் படுத்தும்முன் நீங்கள் அதைச் செய்வதே புத்திசாலித்தனம்.

சரி, உங்களுக்கான ஒரு தொழிலைக் கண்டுபிடித்துவிட் டீர்கள். அதை இன்னும் சில காரணிகளுக்கு உட்படுத்திப் பார்த்தபின்பே அதை செய்ய லாமா, கூடாதா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அந்தக் காரணிகளை அடுத்த இதழில் சொல்கிறேன்.

(ஜெயிப்போம்)

சி.கே.ஆரிடம் கேளுங்கள்!

நான் ஒரு நிறுவனத்தில் முழுநேர வேலை செய்து கொண்டே பகுதி நேரமாக குழந்தைகளுக்கு அபாகஸ், எழுத்துப் பயிற்சி, வேதிக் மேத்ஸ் போன்ற வகுப்புகளை நடத்தி வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானம் செலவுக்கே சரியாக இருக்கிறது. என் பிசினஸை வளர்க்க வழி சொல்லுங்கள்?

மெயில் மூலமாக

‘‘லாபம் குறைவாக வருவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க ஆழமாக அலசி ஆராய வேண்டும் என்றாலும், ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே உங்கள் பிசினஸை வளர்த்தெடுக்க முடியாது. ஒரு பிசினஸுக்கு முக்கிய மூலதனம் என்பது பணமல்ல; நீங்கள் செய்யும் முயற்சியும் ஒன்றிணைப் பும்தான். உங்கள் கஸ்டமருடன் தொடர்புகொள்ளும்போது அவர் சொல்லும் சிறு சிறு கமென்ட்டு களும் உங்கள் தொழிலை வளர்க்க நிச்சயம் உதவும்.

ஓர் இடத்தில் வேலை பார்த்துக் கொண்டே பிசினஸ் செய்வது இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதற்கு ஒப்பானது. பிசினஸ் சரியாக நடக்கவில்லை என்றால் வேலை நம்மைக் காப்பாற்றும் என்று நினைத்துத்தான் பலரும் இப்படிச் செய்கிறார்கள்.

உங்கள் பிசினஸ் மீது உங்களுக்கு இவ்வளவு சந்தேகம் இருந்தால், அந்த பிசினஸை செய்யாமலே விட்டுவிடுங்கள். தீர்க்கமான ஒரு முடிவெடுத்து, அதன்படி செயல்படத் தொடங் குங்கள். நீங்கள் செய்ய நினைப்பது நடக்கும்!’’

தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு!

தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை businesssecrets@vikatan.com என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.