ச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், அதனுடைய விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தினேஷ்  பாலாஜி விளக்குகிறார்.

மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்!

“கடந்த வியாழன் அன்று கச்சா எண்ணெய்யின் விலை மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து வர்த்தக மானது. டபிள்யூடிஐ எண்ணெய் யின் விலையும் 1%  குறைந்து வர்த்தகமானது. பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலையும் 0.8% குறைந்து வர்த்தகமானது. 

கச்சா எண்ணெய்யின் உற்பத்தி அதிகமாக இருப்பது விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். வளைகுடா நாடுகள் தங்கள் உற்பத்தியைக் குறைப்ப தாகத் தெரியவில்லை. அந்த நாடுகள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யின் உற்பத்திச் செலவு ஒரு பேரலுக்கு 5-6 டாலராக உள்ளதால், விலை குறைந்தாலும் நஷ்டம் வராது. எனவே, அந்த நாடுகள்  உற்பத்தியைக் குறைக்கிற மாதிரி இல்லை.

மேலும், ஈரான் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதால் அதிக சப்ளை ஏற்பட்டுள்ளதும், அமெரிக்காவின் கையிருப்பு அதிகமாக இருப்பது மற்றும் டாலர் பலமடைந்து வருவதும் கச்சா எண்ணெய் விலை குறைய காரணமாகும். கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்காதான். எனவே, இங்கு இறக்குமதி செய்யும் அளவு மிகவும் குறைவு. வரும் வாரத்தில் விலை குறைய லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.”

தங்கம்!

தங்கத்தின் விலையானது கடந்த வியாழன் அன்று மிகவும் குறைந்த விலையில் வர்த்தக

மெட்டல் & ஆயில்

மானது. கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் இறங்கி, ஒரு அவுன்ஸ் 1,144 டாலருக்கு அருகாமையில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி இந்த வருடம் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் வட்டி ஏற்றம் இந்த வருடத்தில் இருக்கும் என கூறிய தால், டாலர் வலுவடைந்து உள்ளது. கிரீஸ் பிரச்னை ஓரளவுக்கு சரியாகி வருவதும் சந்தையில் தங்கத்தின் விலை இறங்கக் காரணமாகியுள்ளது.

வரும் வாரத்தில் தங்கத்தின் விலை மேலும் இறங்க வாய்ப்பு உள்ளது.

வெள்ளி!

ஸ்பாட் வெள்ளியின் விலை 0.8% குறைந்து ஒரு அவுன்ஸ் வெள்ளி 15 டாலருக்கு வர்த்தக மானது. டாலரின் மதிப்பு வலிமையடைந்து வருவதால், உலகச் சந்தையில் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் ஆகஸ்ட் சில்வர் கான்ட்ராக்ட் ரூ.34,391 என்கிற அளவில் வர்த்த கமானது. அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அதாவது, தொழில் உற்பத்தி குறியீடு கடந்த மாதத்தைவிட அதிகமாக இருந்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அதேநேரத்தில், ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது வெள்ளியின் விலை மேலும் குறையும்.

மெட்டல் & ஆயில்

காப்பர்!

காப்பரின் விலை கடந்த வியாழன் அன்று 0.5% அதிகரித்து ஒரு டன் 5,560 டாலருக்கு வர்த்தக மானது. கிரீஸ் கடன் பிரச்னைக்கு தற்காலிக முடிவு எடுக்கப்பட் டுள்ளது. தவிர,  சீனப்   பங்குச் சந்தை ஒரு நிலைக்கு வந்திருக் கிறது. இதன் விளைவாக உலோகங்களின் விலையில் இருந்த அழுத்தம் குறைந்துள்ளது. மேலும், 2015-ல் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. 

எனினும், உலகின் காப்பர் உற்பத்தி வளர்ச்சியானது 2018  வரை ஆண்டுக்கு 6 சதவிகிதமாக உயர்ந்து, 27.4 மில்லியன் டன்னாக இருக்கும் என ஐசிஎஸ்ஜி தெரிவித்துள்ளது. என்றாலும்கூட, கடந்த வாரம் எம்சிஎக்ஸ் சந்தை யில் காப்பரின் விலை பெரிய அளவில் உயரவில்லை.

இரா.ரூபாவதி

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு