ந்த வாரம் சென்னா மற்றும் மென்தா ஆயில் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் ஓரியன் புரோக்கிங் சர்வீசஸ் என்.சிவகுமார்.

அக்ரி கமாடிட்டி!

சென்னா (Chana)

‘‘வலுவான தேவை காணப்பட் டதால், சென்ற வாரம் சென்னா விலை அதிகரித்துக் காணப்பட் டது. அது மட்டுமில்லாமல், சந்தைக்கு வரத்து குறைந்து காணப்பட்டதாலும் விலை அதிகரித்து வர்த்தகமானது. என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சென்னா ஜூலை மாத கான்ட்ராக்ட் விலை அதிகரித்து, ஒரு குவிண்டால் 4,432 ரூபாயாக வர்த்தகமானது. அதேபோல, ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் விலையும் அதிகரித்து ஒரு குவிண்டால் 4,482 ரூபாயாக வர்த்தகமானது.

சென்னா அதிகம் விளையும் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் விளைச்சல் குறைந்து காணப்படுவதும் சென்னா விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும். சென்னா உற்பத்தியில் மத்தியப்பிரதேசம் 40% பங்கு வகிக்கிறது. உத்தரப்பிரதேசம் 16% மற்றும் ராஜஸ்தான் 14 சதவிகிதமாகவும் பங்கு வகிக்கிறது.

வலுவான தேவை தற்போது காணப்படு வதால், வரும் வாரத்திலும் விலை அதிகரித்தே வர்த்தகமாகும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மென்தா ஆயில் (Mentha oil)

உற்பத்தி ஏரியாவிலிருந்து வரத்துகள் குறைந்ததாலும், தேவை அதிகரித்து காணப்பட்ட தாலும்

அக்ரி கமாடிட்டி!

சென்ற வாரம் மென்தா ஆயில் விலை அதிகரித்து காணப் பட்டது. எம்சிஎக்ஸ் சந்தையில் மென்தா ஆயில் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் விலை அதிகரித்து, ஒரு கிலோ 1,019 ரூபாயாக காணப்பட்டது.

அதேபோல, ஜூலை மாத கான்ட்ராக்ட் விலை அதிகரித்து ஒரு கிலோ 1,001.10 ரூபாயாக வர்த்தகமானது. தேவை அதிகரித்து காணப்படும் நிலையில், சந்தைக்குப் போதுமான வரத்து காணப்படாததால் விலையில் உயர்வு காணப் படுகிறது என சந்தை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

தற்போதைய நிலையில் டெக்னிக்கலாகப் பார்க்கும் போது, மென்தா ஆயில் வாங்கு வது 21 சதவிகிதமாகவும், விற்பது 66 சதவிகிதமாகவும் மற்றும் இருப்பு வைப்பது 13 சத விகிதமாகவும் காணப்படுகிறது. இனிவரும் வாரங்களிலும் மென்தா ஆயில் நுகர்வு அதிகம் காணப்படும் என்பதால், தேவையும் அதிகரிக்கும். இதனால் விலையும் உயர்ந்தே வர்த்தகமாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.’’

மஞ்சள் (Turmeric)

கடந்த வியாழன் அன்று மஞ்சள் விலை இறக்கத்தில் காணப்பட்டது. புதிய பயிர் விளைச்சல், குறையும் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் என்கிற அச்சத்தின் காரணமாக அதிக இறக்கம் தடுக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான ஐஎம்டி அறிக்கையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைப் பொழிவு குறைந்து காணப்படும் என தெரிகிறது.

 ஜூலை 8 நிலவரப்படி, தெலங்கானா மாநிலத்தின் மஞ்சள் விளைச்சல் ஏரியா 25,516 ஹெக்டேராக காணப்படுகிறது. கடந்த வருடத்தில் இதுவே 13,931 ஹெக்டேராக இருந்தது குறிப்பி டத்தக்கது. கடந்த ஜூலை 14-ம் தேதி நிலவரப்படி, என்சிடி இஎக்ஸ் சந்தைக் கிடங்குகளில் 14,678 டன் மஞ்சள் இருப்பு காணப்பட்டது.  வரும் வாரத்தில் விலை மந்தமாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம் (Jeera)

தேவை குறைவின் காரணமாக சென்ற வாரம் விலை குறைந்து வர்த்தகமானது. ஜீரகத்தின் விலை குறைந்ததால்,  வரத்தும் குறைந்து காணப்படுகிறது. மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, குஜராத்தில் 2014-15-ம் ஆண்டில் 1.58 லட்சம் டன் ஜீரகம் உற்பத்தி ஆகியுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் உற்பத்தியைவிட 54.3% குறைவாகும்.

என்சிடிஇஎக்ஸ் கிடங்குகளில் இருப்பானது ஜூலை 14-ம் தேதி நிலவரப்படி, 19,486 டன்னாக குறைந்து காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய தினத்தில் 19,644 டன்னாகக் காணப்பட்டது.

2014-15-ம் ஆண்டின் ஏப்ரல் - மார்ச் காலகட்டத்தில் ஏற்றுமதியான ஜீரகத்தின் அளவு 1,55,500 டன் என இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.  தற்போதைய நிலையில் ஜீரகத்தின் விளைச்சல் ஏரியா குறைந்து காணப்படுவதால், உற்பத்தி குறையும் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செ.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு