Published:Updated:

டாடாவை முதலீடு செய்ய வைத்த கோவை நிறுவனம்!

கலக்கும் பெண் தொழிலதிபர்

பிரீமியம் ஸ்டோரி

கோவை மாவட்டம், சூலூருக்கு அருகே உள்ள சின்னஞ்சிறு தொழிற்சாலை   ஆம்பியர். பக்கத்தில் இருக்கும் கிராமத்தினருக்குக்கூட இப்படி ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்று தெரியாது. ஆனால், டாடா நிறுவனத்தின் கெளரவத் தலைவரான ரத்தன் டாடாவுக்குத் தெரிந்திருக்கிறது. ஸ்நாப்டீல், பேடிஎம் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துவந்த ரத்தன் டாடா, இந்த ஆம்பியர் நிறுவனத் தில் இப்போது முதலீடு செய்துள் ளதுதான் கோயம்புத்தூர் தொழில் வட்டாரத்தில் லேட்டஸ்ட் டாக்.

டாடாவை முதலீடு செய்ய வைத்த கோவை நிறுவனம்!

ரத்தன் டாடாவின் முதலீடு, ஆம்பியர் நிறுவனத்தின் இயக்குநர் ஹேமலதா அண்ணா மலையை  உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு போயிருக் கிறது.  தொழிலை மேம்படுத்துவதற் கான அடுத்தகட்ட வேலைகளில் தீவிரமாக இருந்த ஹேமலதாவை அவரது தொழிற்சாலையில் சந்தித்தோம்.

“நான் பிறந்தது சேலத்துல. என் அப்பா பேராசிரியர். அம்மா டீச்சர். நான் இன்ஜினீயரிங் படிச்சது கோயம்புத்தூர்ல. இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சு அஞ்சு வருஷம் நான் பெங்களூரு விப்ரோல சாஃப்ட்வேர் இன்ஜினீயரா வேலை பார்த்தேன். அதுக்கு அப்புறம், ஆஸ்திரேலி யாவுல இருக்குற ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில படிக்குற வாய்ப்பு கிடைச்சது. எம்பிஏ முடிச்சதுக்கு அப்புறம் திருமண மாகி சிங்கப்பூரில் செட்டில் ஆனேன். அதுக்கு அப்புறம் சின்னச் சின்ன தொழில்கள் செய்யத் துவங்கினேன். அப்போதுதான் எலெக்ட்ரிக் வாகனம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன்” என தன் கதையைச் சொல்ல ஆரம்பித் தார் ஹேமா.

‘குறிப்பா, எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு தொழிலை ஏன் தேர்வு செய்தீர் கள்?' என்று கேட்டோம்.

“இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, இது சமூகத்துக்குப் பயன ளிக்கும் ஒரு திட்டம். இரண்டா வது, இதன்மூலம் மிகப் பெரிய மாற்றத்தை முன்னெடுக்க முடி யும். 2007-ல் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, முழுமை யாக ஆராய்ந்து 2008-ல் ஆம்பியர் எனும் எலெக்ட்ரிக் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பைத் துவங் கினோம்.

இந்தத் தொழிலில் மூலதனம் என்பது அதிகம் தேவை இல்லை. தொழில்நுட்பம் சார்ந்த தொழில். கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் இந்தத் தொழிலில் நிலைத்து நிற்்கிறோம். நாங்கள் இந்தத் தொழிலை துவங்கும் போது, எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் இருந்தவர்கள் மொத்தம் 68 பேர். ஆனால், இப்போது வெறும் 10 பேர் மட்டுமே இதில் உள்ளனர். அதில் நாங்களும் ஒருவர்’’ என்றார், பெருமை பொங்க.

எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு தொழிலில் அவர் சந்தித்த சவால்களையும் சொன்னார் ஹேமா.

டாடாவை முதலீடு செய்ய வைத்த கோவை நிறுவனம்!

“நாங்கள் தொழில் துவங்கிய பின்னர் பல நிறுவனங்கள் இந்தத் தொழிலைவிட்டு வெளியேற  முக்கிய காரணம், பேட்டரி. இந்தியாவைப் பொறுத்தளவில், மக்களுக்கு எல்லாமே சீக்கிரமாகவும், நல்ல தாகவும், விலை மலிவானதாகவும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதை பூர்த்தி செய்வதற்காக பேட்டரி பற்றி தெரியாமல், லோக்கலில் தயார் செய்ததால், பேட்டரி ஃபெயிலியர் ஆனது. இந்தியாவில் உள்ள நிலையற்ற மின்சாரத்தால் பேட்டரியில் பிரச்னை ஏற்பட்டு, விற்பனை முழுமையாக முடங்கி, தொழிலையும் முடக்கியது. நாங்களும் அதில் பாதிக்கப்பட் டோம்.

ஆனால், உடனே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய துவங்கினோம். நாங்கள் இறக்குமதி செய்த பேட்டரி ‘சிப் எனேபெல்டு பேட்டரி’ என்ப தால், அவ்வளவு எளிதில் பல்ஜ் ஆகாது. திறன் குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

முதலில் சைக்கிள், அதன் பின்னர் ஸ்கூட்டர். இப்போது சரக்கு வாகனங்கள் எனப் பல வண்டிகளை நாங்கள் தயாரித்து விட்டோம். பிரச்னைகளை வாய்ப்பாகப் பார்த்தா மட்டும் தான் தீர்வு கிடைக்கும். நாங்க எல்லா பிரச்னைகளையும், சிக்க லையும் வாய்ப்பாகப் பார்த்தோம். அந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு கண்டோம்.

நான் மெக்கானிக்கல் இன்ஜினீயர் கிடையாது. நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அதையும் மீறி பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் குறித்து முழுமையாகத் தெரிந்து கொண் டேன். தொழிலில் ஜெயிப்பதற்கு ஆண், பெண் பேதமெல்லாம் இல்லை. உங்கள் இலக்கு சரியாக இருந்தால், நிச்சயம் வெற்றிதான்’’ என்றார் அழுத்தமாக.

ரத்தன் டாடா, ஆம்பியரில் முதலீடு செய்தது குறித்து கேட்ட தும், இன்னும் உற்சாகத்துடன் பேசத் தயாரானார் ஹேமா.  

“கடந்த ஆண்டு கோவையில் நடந்த நிகழ்ச்சிக்கு ரத்தன் டாடா வருவதாக அறிந்தேன். இதை யடுத்து அவருக்கு நான் ஒரு மெயில் அனுப்பினேன். அந்த கடிதத்தில் அவரிடம் சில கேள்விகள் கேட்டிருந்தேன்.

டாடாவை முதலீடு செய்ய வைத்த கோவை நிறுவனம்!

‘சீனாவில் 32 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால்,   இந்தியாவில் ஏன் அந்தளவு உற்பத்தி செய்ய முடியவில்லை?’, ‘சீனாவில் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் 2 ஆயிரம் தயாரிப் பாளர்கள் உள்ளனர். இந்தியா வில் வெறும் 12 பேர் மட்டுமே  உள்ளனர். ஏன்?' என்றெல்லாம் அந்த மெயிலில் கேள்வி எழுப்பி யிருந்தேன்.

இதைப் படித்துப் பார்த்த ரத்தன் டாடா, கோவைக்கு வந்த போது என்னைச் சந்தித்தார். எங்கள் தொழிற்சாலையைச் சுற்றிக்காட்டி, எங்கள் எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கினேன்.

நான் பேசியதைப் பொறுமை யாகக் கேட்ட ரத்தன் டாடா,  என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, ‘How Can i help you?’. நான் எனது ஆலையை விரிவாக்க விரும்பும் திட்டத்தைச் சொன்னேன். ‘My office will contact you’ எனச் சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் இரு மாதங்களுக்கு பிறகு ரத்தன் டாடாவுக்கு நெருங்கிய மற்றொருவர் மூலம் மீண்டும் ரத்தன் டாடாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எங்களுக்கு ‘Technology Development Board’-ல் லோன் கிடைத்தது. அந்த லோனுக்கு அவர் உதவி செய்யவேண்டி இருந்தது. எங்களுக்கு கேரன்டி கொடுத்து அவர் உதவினார். அதன்பின்னர், ‘நான் டாடா மோட்டார்ஸ், டாடா கேப்பிட்டல் என எதிலும் இல்லை, என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்’ என்றார். ஆனால், இப்போது எங்களின் ஒட்டுமொத்த நிறுவன வளர்ச்சிக்கும் அவர் உதவி செய்கிறார்’’ என்று பூரிப்புடன் சொன்னவர், தனது எதிர்காலத் திட்டம் பற்றியும் பேசினார்.

“முழுக்கமுழுக்க ஆட்டோ மேட்டட் சைக்கிள் தொழிற் சாலை ஆரம்பிக்க வேண்டும். அதேபோல், இப்போது மிகக் குறைந்த விலை யில் எலெக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை கொண்டுவர முயற்சித்து வருகிறோம். இவை யெல்லாம் நிச்சயம் கைகூடும்’’ என்றார் நம்பிக்கையுடன்.           

படங்கள்: தி.விஜய்

ச.ஜெ.ரவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு