புதிய வீடு, புதிய ஃப்ளாட் வாங்கு வதற்கு மட்டு மல்ல, பழைய வீடு அல்லது பழைய ஃப்ளாட் (அடுக்குமாடிக் குடியிருப்பு) வாங்கவும் வங்கிக் கடன் கிடைக் கும். இன்றைக்கு நகர்ப்புறங்களில் வீடுகளின் விலை மிகவும் அதிகரித்துவிட்டதால், பலரால் புதிய வீட்டை வாங்க முடிய வில்லை. அதுபோன்றவர்கள் பழைய வீடுகளை வாங்கி வருகிறார்கள். அவர்களுக்கு வீடு வாங்க வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் தாராளமாகக் கடன் வழங்கி இருக்கின்றன.

ஏன் பழைய வீடு?

நகரத்துக்குள் புதிய வீடு என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாத கனியாக இருக்கிறது. சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ தூரம் போனால்தான் வாங்கக்கூடிய விலையில் புதிய வீடு பற்றிச் சிந்திக்க முடியும். ஆனால், அது இப்போதைக்கு குடியிருக்க ஏற்றதாக இருக்காது. அதனால் நகருக்குள் வீடு வேண்டும் என்பவர்கள் பழைய வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பழைய அபார்ட்மென்ட்கள் அமைந்திருக்கும் இடம், கட்டடத் தின் வயது போன்றவற்றைப் பொறுத்து, புதிய அபார்ட்மென்ட் களைவிட, சுமார் 25 முதல் 40% விலை குறைவாக இருப்பதால், கடன் வாங்கும் தொகை குறைவாக இருக்கிறது.

பழைய வீடு என்றாலும் மறுவிற்பனை விலை நன்றாகவே இருக்கிறது என்பதால், முதலீட்டு நோக்கிலும் பழைய வீடு வாங்கு வது லாபகரமாகவே இருக்கிறது.

மின்சாரம், குடிநீர் இணைப்பு போன்றவை ஏற்கெனவே இருப்பதால், தனியாகச் செலவு செய்யத் தேவையில்லை.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

பழைய ஃப்ளாட் என்கிற போது, பொதுவாக 10 முதல் 15 வருடத்துக்கு உட்பட்டதாக இருந்தால் மிக மிக நல்லது. நல்ல பில்டர் கட்டியது என்றால் அதிகபட்சம் 18 முதல் 20 வருடங்கள்கூட பழையதாக இருக்கலாம்.

சொத்து தொடர்பான ஆவணங்கள் வில்லங்கம் எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்பதைக் கவனிப்பது முக்கியம்.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

பழைய வீடு/ அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கடன் வழங்கும் தொகையானது வங்கிக்கு வங்கி மாறுபடும். வங்கிகள் பழைய வீடு / பழைய ஃப்ளாட் வாங்க கடன் கொடுக்கும்போது, 20 வருடத் துக்கு உட்பட்டவை என்றால் மார்ஜின் தொகையாக 25% கட்ட வேண்டும். 20 வருடங்களுக்கு மேற்பட்டது எனில், 40% கட்ட வேண்டும்.

கடன் தொகைக்கு ஏற்பவும் இந்த மார்ஜின் தொகை மாறு படும். உதாரணத்துக்கு, கனரா வங்கியில் ரூ.20 லட்சம் வரை யிலான கடனுக்கு 20% மார்ஜின் தொகை கட்ட வேண்டும். கடன் தொகை ரூ.20 லட்சம் முதல் ரூ.75 லட்சம் இருந்தால் மார்ஜின் 25%.

பொதுவாக, 30 ஆண்டுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு வங்கிகள் / வீட்டு வசதி நிறுவனங்கள் கடன் தருவதில்லை.

பழைய வீடு வாங்குவதற்கான வீட்டுக் கடனுக்கான வட்டி, புதிய வீட்டுக்கான வட்டி அளவுக்கே இருக்கும்.

பழைய வீட்டை வங்கிக் கடனில் வாங்கும்போது, புதிய வீட்டுக்கு என்ன வருமான வரிச் சலுகை அளிக்கப்படுகிறதோ, அதுவே தரப்படுகிறது.

வாங்கிய வீட்டில் குடியிருக்கும் போது, திரும்பச் செலுத்தும் அசலில் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரைக்கும், வட்டியில் ரூ.2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.

வங்கிக் கடன் வாங்கி, வீடு வாங்குபவர்களில் சுமார் 20 சத விகிதம் பேர் பழைய வீடுகளை வாங்குவதாகத் தகவல். பட்ஜெட்டுக்குள் வீடு, உடனடி யாகக் குடியேறும் வசதி, அடிப்படை வசதிகள், வீட்டுக் கடன், வருமான வரிச் சலுகைகள் இருக்கும்போது பழைய வீட்டை வாங்க தயக்கம் காட்ட வேண்டிய தில்லையே!

சி.சரவணன்

பழைய வீட்டுக் கடன்: கூடுதல் லாபம்..!

சென்னையைச் சேர்ந்த என்.ஒய்.முரளி, பழைய வீட்டை வீட்டுக் கடன் மூலம் வாங்கி இருக்கிறார். அவருடன் பேசினோம். ‘‘நான் சென்னை நகருக்குள் பிசினஸ் செய்து வருகிறேன். எனக்கு நகருக்குள்ளே வீடு தேவைப்பட்டது. என் பட்ஜெட்டுக்குள் பழைய ஃப்ளாட்தான் வாங்க முடியும் போலிருந்தது. ஆறு ஆண்டுகள் பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை அசோக் நகரில் வாங்கினேன். இது புது ஃப்ளாட்டைவிட 35% விலை குறைவு என்பதால் கடன் தொகையும் குறைவாக இருந்தது. எனக்கு ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருந்த கனரா வங்கியில் சுலபமாகக் கடன் கிடைத்தது. வீட்டின் மதிப்பில் 80 சதவிகிதத் தொகை கடனாகக் கிடைத்தது. வருமான வரிச் சலுகையும் கிடைப்பதால் எனக்குக் கூடுதல் லாபம்” என்றார்.