Published:Updated:

நாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

நாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

பிரீமியம் ஸ்டோரி

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி-பதில் பகுதியில் வருமான வரி கணக்குத் தாக்கல் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் அளித்த பதில்கள்...

நாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

 குடும்பத் தலைவியான நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளேன். என் கணவர் எனக்கு குடும்பச் செலவுக்குத் தரும் தொகையில் மிச்சப்படுத்தி மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வருகிறேன். நான் டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா?

“குடும்பத் தலைவர், மனைவிக்குத் தரும் தொகைக்கு வருமான வரி கிடையாது (இதை pin money என்று சொல்வோம்). இந்த முதலீட்டின் மூலமாக ஈட்டும் வருமானம் வருடத்துக்கு ரூ.2,50,000-ஐ தாண்டாதபட்சத்தில் வருமான வரி கிடையாது. (மூத்த குடிமக்களாக இருந்தால், ரூ. 3,00,000 வரைக்கும் வருமான வரி கிடையாது!)''

ஒருமுறை ரூ.50,000 பிரீமியம் செலுத்தி சிங்கிள் பிரீமியம் பாலிசி ஒன்றை எடுத்திருந்தேன். அதன் பாலிசி ரசீதை எங்கோ மறதியாக வைத்துவிட்டதால், அலுவலக ஃபார்ம் 16-ல் சேர்த்து வரிச் சலுகை பெற முடியவில்லை. அந்த ரசீது இப்போது கிடைத்துள்ளது. இதனைக் கொண்டு வருமான வரிச் சலுகை பெற முடியுமா?

“வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்து அதிகமாகக் கட்டிய தொகையைத் திரும்பப் பெறலாம். ஆன்லைன் மூலமாகப் படிவம் தாக்கல் செய்து, வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிடவும். அதிகம் கட்டிய தொகை உங்கள் கணக்கில் திரும்பப் போடப்படும்.''

மாத சம்பளக்காரர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தாண்டி வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியாதா?

“முடியும், மார்ச் 2016 வரை. ஆனால், அதற்கு வரி செலுத்த வேண்டியிருந்தால் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும். மேலும், இந்த வருமான வரிப் படிவத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் வருமான வரிப் படிவத்தை இரண்டாவது முறை திருத்த முடியாது. ஆகஸ்ட் 31-க்குள் வருமான வரி தாக்கல் செய்திருந்தால் மட்டுமே திருத்த முடியும் (revised return).''

 அண்மையில் வரி கணக்குத் தாக்கல் செய்வதில் அரசு சலுகைகள் அளித்துள்ளதாக என் நண்பர்

நாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

ஒருவர் தெரிவித்தார். அந்தச் சலுகைகள் என்னென்ன என்பதைச்  சொல்ல முடியுமா?

“பெரிய சலுகைகள் எதையும் மத்திய அரசு வழங்காதது ஏமாற்றமே. வங்கிக் கணக்கில் இருப்பு விவரத்தை தெரிவிப்பதற்கு பதில், வங்கிக் கணக்கு எண்களைக் குறிப்பிட்டால் போதும் என குறிப்பிட்டிருப்பது ஒரு சலுகை. அடுத்து, வெளிநாட்டு பயண விவரங்களுக்குப் பதில் பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்று குறிப்பிட்டிருப்பதாகும்.''

கூடுதலாகக் கட்டிய வருமான வரியைத் திரும்பப் பெற முடியுமா?

“முடியும். வருமான வரிக் கணக்கை ஆன்லைன் மூலமாக அனுப்பவும் . வங்கிக் கணக்கையும் குறிப்பிட்டு அனுப்பவும்.''

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமா?

“கட்டாயம் இல்லை. இருந்தால் குறிப்பிடவும். சரியாகக் குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில் EVC கோடு ஜெனரேட் செய்தால் படிவத்தைப் பெங்களூருக்கு அனுப்ப தேவையில்லை (CPC).''

ஒருவர் எப்போது வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?

“ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு அதிகமாக இருந்தால், வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.''

எவ்வளவு வருமானத்துக்கு மேல் இ-ஃபைலிங் கட்டாயம். இ-ஃபைலிங் செய்வதால் என்ன நன்மை?

“ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தாலோ , ரீஃபண்ட் கேட்டு இருந்தாலோ இ-ஃபைலிங் செய்வது கட்டாயம். இ-ஃபைலிங் செய்தால் ரீஃபண்ட் இருந்தால் விரைவில் வரும்.''

நான் 2013-14-ம் நிதியாண்டுக்கு இன்னும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யவில்லை. இப்போது செய்ய முடியுமா?

“செய்யலாம். வருமான வரி அதிகாரி ரூ.5,000 வரை அபராதம் போடுவதற்கு வாய்ப்புண்டு. வரியாகக் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டியும் உண்டு. நீங்கள் வருமான வரி கட்ட தேவையில்லையெனில் வட்டி வராது.''

ITR-1 SAHAJ மற்றும் ITR-4S - SUGAM உள்ள வித்தியாசம் என்ன?

“ITR-1 SAHAJ படிவம் மாத சம்பளதாரர்களுக்கும்; ஒரு வீடு மட்டுமே வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். ITR-4S - SUGAM சிறுதொழில் செய்பவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குக் கீழ் விற்பனை செய்பவர்கள், மேலும் ஒரு வீடு மட்டுமே வைத்திருந்தால் பொருந்தும்.''

நான் கடந்த நான்கு வருடமாக சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். ஆனால், வரி கணக்குத் தாக்கல் எதுவும் செய்யவில்லை. நான்கு வருடத்துக்கும் சேர்த்து இப்போது வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியுமா?

“முடியாது. இரண்டு வருடங்களுக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்துகள் இருந்தால், அபராதம் மற்றும் சிறை தண்டனை உண்டு. வருமானம் இருந்தும், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பது சட்டப்படி குற்றமாகும்.''

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது வரிச் சலுகை பெற்றதற்கான ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டுமா? தவிர, மாத சம்பளம் வாங்கும் எனக்கு குறுகிய கால மூலதன ஆதாயம் இருக்கிறது. நான் எந்த ஐடிஆர் படிவத்தைத் தாக்கல் செய்வது?

“முதல் கேள்விக்குப் பதில்: தேவையில்லை. ஆனால் தவறாக வரிவிலக்குக் கேட்கக்கூடாது. அதிகாரி கேட்கும்பட்சத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாவது கேள்விக்கு பதில்: ஐடிஆர் 2 படிவம் தாக்கல் செய்யவும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு