Published:Updated:

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

கைகொடுக்கும் கைவினைப் பொருட்கள்!

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

றுமணப் பொருட்களின் ஏற்றுமதியைப் போலவே, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியும் நம் நாட்டில் பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய நிலையில் இந்தியாவிலிருந்து தயாராகும் கைவினைப் பொருட்களுக்கு உலக நாடுகளிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. வெளிநாட்டவர்கள் நம் நாட்டுக்கு வரும்போது, அவர்கள் நமது கைவினைப் பொருட்களைப் பார்த்து ஆச்சர்யம் கொள்வதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். இந்த ஆச்சர்யம் ஆர்வமாக வளர்ந்து நமது கைவினை கலைப்பொருட்களை எப்போதும் விரும்பி வாங்கும் விதமாக அமைந்துவிடுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தவகையில் மரம் சார்ந்த, மண் சார்ந்த, கடல் சார்ந்த கைவினைப் பொருட்களின் தயாரிப்பு இந்தியாவில் ஜோராக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து பல கைவினைப் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. மரத்துண்டுகள், கடல் சங்கு மற்றும் சிப்பிகள், கற்கள், மெட்டல், மூங்கில், பேப்பர், கண்ணாடி, துணிகள், பீங்கான், களிமண் மற்றும் டெரகோட்டா போன்ற எண்ணற்ற பொருட்கள் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

புரமோஷனல் கவுன்சில்!

கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிமத்தைப் பெறுவதற்கும், அந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன் ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டுவதற்கும் கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்புக் கழகம் (Export Promotion Council for Handicrafts - EPCH) என்கிற அமைப்பு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிடம் உரிமம் பெறாமல் இங்கிருந்து எந்தவொரு கைவினைப் பொருட் களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. இந்த அமைப்பின் உரிமம் இல்லாத வர்களிடம் இறக்குமதியாளர்கள் யாரும் எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யமாட்டார்கள்.

கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்புக் கழகத்தின் அறிக்கையில், 2010-11-ம் நிதி ஆண்டில் 10,533.96 கோடி ரூபாயாக இருந்த இந்திய கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி, கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் 27,746.84 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்து உள்ளது. தற்போதைய நிலையில், இந்தவகைப் பொருட்களின் தேவை அதிகரித்துக் காணப்படுவதால் நமது அரசாங்கமும், இந்தவகைப் பொருட்களைத் தயாரிப்பவர் களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல், இவர்களின் திறன்களை மேம்படுத்து வதற்குப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

ஏற்றுமதி அதிகரிப்பு!

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி 324.90 கோடி ரூபாய் அதிகரித்துக் காணப்படுகிறது. அதாவது, சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,687.05 கோடியாக இருந்த கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத் தில் 4,011.95 கோடி ரூபாயாகக் காணப்படுகிறது.

இன்றைய நிலையில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி எப்படி இருக்கிறது, அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ள நாடு எது, எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி எப்படி இருக்கும் என சென்னை அண்ணா சாலை யில் உள்ள மத்திய அரசின் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன மான FIEO (Federation of Indian Export Organisations), தென் மண்டல அலுவலகத்தின் இணை துணை பொது இயக்குநர் உன்னி கிருஷ்ணனிடம் பேசினோம்.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

தேவை அதிகரித்துக் காணப்படுகிறது!

“இன்றைய நிலையில் கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினை பரிசுப் பொருட்கள் தேவையானது அதிகரித்துக் காணப்படுகிறது. ஏதாவது ஒரு பரிசுப் பொருள் என்றில்லாமல், பெரும்பாலான வெளிநாட்டவர்கள் கைகளால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பரிசுப் பொருட்களை வழங்கவே அதிகம் ஆசைப்படுகிறார்கள். இதனால் அதற்கான தேவை வெளிநாடுகளில் அதிகரித்துக் காணப்படுகிறது. அதுமட்டு மல்லாமல் அவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை மிகவும் அழகுபடுத்திப் பார்க்கும் ஆசை கொண்டவர்கள் என்பதால் கைவினைப் பொருட்களை அதிகம் நேசிக்கவும் செய் கிறார்கள். இதனாலேயே அங்கு அதற்கான மவுசு அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ், லத்தின் அமெரிக்க நாடுகள், இத்தாலி, நெதர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதியாகிறது.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

இதில் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து நாடுகளின் பங்கு  அதிகம். அமெரிக்காவின் பங்கு 20 சத விகிதமாகக் காணப்படுகிறது. இதற்கு அடுத்து, இங்கிலாந்து மற்றும்  ஐக்கிய அரபு நாடுகள் அதிக சதவிகிதத்துடன் இருக்கின்றன.

தற்போதைய நிலையில், எம்ராய்டரி செய்யப்பட்டப் பொருட்கள் மற்றும் உல்லன் நூல்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி தேவையில் அதிகரித்துக் காணப் படுகின்றன. அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதிலும் இந்தவகைப் பொருட்கள் முன்னணியில் இருக்கின்றன’’ என்றார் தெளிவாக.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

சங்கும், சிப்பிகளும்!

1991-ம் ஆண்டிலிருந்து கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் கன்னியா குமரியிலுள்ள ஏபிஎன் ஷெல் கிராஃப்ட்ஸ் ஏற்றுமதி நிறுவனத் தின் உரிமையாளர் பி.குமரேசனி டம் பேசினோம்.

“இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான கைவினைப் பொருட்களுக்கும் தேவை அதிகமாக இருக்கிறது. கன்னியாகுமரி கடல் சார்ந்த இடம் என்பதாலும், இங்கே அதிக அளவில் சங்கு மற்றும் சிப்பிகள் கிடைப்பதாலும் நாங்கள் அதிலிருந்து தயாரிக்கப் படும் பொம்மைகள், கண்ணாடி கள், பரிசுப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் என 150-க்கும் மேற்பட்ட பொருட் களைத் தயாரித்து அதை உள்நாட்டு வர்த்தகத்துக்கு மட்டுமல்லாமல், ஏற்றுமதியும் சிறப்பாகச்

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

செய்து வருகிறோம்.

பொருட்களாக மட்டுமல்லா மல், சங்குகள் மற்றும் சிப்பிகளை கிலோ கணக்கில் பேக்கிங் (இறக்குமதியாளர்களின் தேவையைப் பொறுத்து) செய்து அதையும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

சிப்பிகள் மற்றும் சங்குகளில் சிறிய ரகம், மீடியம் மற்றும் பெரிய ரகம் எனப் பல வகைகள் கிடைக்கின்றன. இறக்குமதி யாளர்கள் குறிப்பிட்டு இந்த வகைச் சிப்பிகள் வேண்டும், இந்த அளவுள்ள சிப்பிகளால் செய்யப்பட்டப் பொருட்கள் தான் வேண்டும் என்று சொல்லும் போது கலப்படம் இல்லாமல் ஒரேமாதிரியான சிப்பிகள் மற்றும் சங்குகளைப் பயன் படுத்திச் செய்யப்பட்ட பொருட் களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும். இதுதான் அவர் களுடனான வியாபாரத்தைப் பெருக்கி ஏற்றுமதியாளர்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

தரமான பொருட்கள்!

எங்களைப் பொறுத்தவரை, உள்நாட்டில் கிடைக்கும் சிப்பிகள் மற்றும் சங்குகள் மற்றும் அதனால் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யாமல், ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய அரியவகைச் சிப்பிகளை இறக்குமதி செய்து, அதன்மூலம் கைவினைப் பொருட்கள் தயாரித்து அதையும் ஏற்றுமதி செய்கிறோம்.

இதை எல்லோரும் செய்வதில்லை என்பதால் எங்களால் இந்த ஏற்றுமதி சந்தையில் தனித்து நிலைத்திருக்க முடிகிறது. இப்படி இந்த ஏற்றுமதியில் இறங்கும் ஏற்றுமதியாளர்கள், எல்லோரும் செய்வதைப்போலச் செய்யாமல் தங்களின் தனித்திறமைகளை வெளிக்காட்டுவதன் மூலம் இறக்குமதியாளர்களிடமிருந்து அதிக ஆர்டர்களை பெறமுடியும்.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

பேக்கிங் கவனம்!

சிப்பிகள் சங்குகள் மட்டு மல்லாமல், இதர பொருட்களால் (பீங்கான், கண்ணாடி, களிமண், டெரகோட்டா, கொட்டாங்குச்சி போன்றவை) தயாரிக்கப்படும் பொருட்கள் உடையும் தன்மை கொண்டவை என்பதால், இதை பேக்கிங் செய்யும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். பெரும்பாலான இறக்குமதி யாளர்கள், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல, பேக்கிங் செய்து தரச் சொல்லி அதற்கான பேக்கிங் பொருட் களையும் வழங்கிவிடுவார்கள்.

காரணம், அந்தப் பொருட்கள் அப்படியே நேரடியாகச் சந்தைக்குச் செல்லும். அவர்களே கொடுக்காவிட்டாலும், பொருட் கள் உடையாதபடி பேக்கிங் செய்ய வேண்டியது ஒவ்வொரு ஏற்றுமதியாளரின் கடமையாகும்.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 29

தடை செய்யப்பட்ட சிப்பிகள்!

இன்றைய நிலையில் நமது இந்திய அரசாங்கம், அழிந்துவரும் அரியவகைச் சிப்பிகள் எனச் சொல்லி சில சிப்பிகளை ஏற்றுமதி செய்யக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இதனால் இந்தவகைச் சிப்பிகளை விரும்பி வாங்குபவர்களிடமிருந்து ஆர்டர்கள் கிடைப்பதில்லை. இதனால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிப்பிகள் ஓர் இடத்தில் குறைவாகக் கிடைத்தால், இன்னொரு இடத்தில் அதிகமாகவே கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து சில வகைச் சிப்பிகளை இறக்குமதி செய்து அதை ஏற்றுமதி செய்யக் கூடாது எனவும் தெரிவித்திருக்கிறது நமது அரசு. இதுவும் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி வர்த்தகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தீவுகள் அதிகமுள்ள பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் நமக்குப் போட்டி நாடுகளாகத் திகழ்கின்றன. வியட்நாம், இந்தோனேசியா, கென்யா ஆகிய நாடுகளும் அதிக அளவில் கைவினைப் பொருட் கள் ஏற்றுமதியில், குறிப்பாக, சிப்பிகள் மற்றும் சங்குகள் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில் அதிகப் பங்கு வகிக்கிறது.

அவர்களிடம் சரியான தயாரிப்பு முறைகள் இல்லா விட்டாலும் சிறப்பாகவே ஏற்றுமதி செய்து வருகிறார்கள். ஆனால், நம்மிடம் அனைத்து வசதிகள் இருந்தும், அரசின் சில திட்டங்களால் அதிக அளவில் ஏற்றுமதிகளை மேற்கொள்ள முடிவதில்லை” என்றார் தெளிவாக.
வித்தியாசமான இந்தத் தொழிலை நீங்களும் செய்து பார்க்கலாமே!

செ.கார்த்திகேயன்

படங்கள்: ரா.ராம்குமார்

ஏற்றுமதியாளர்கள் கவனத்துக்கு...

ஏற்றுமதி தொழில் சார்ந்த உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை exports@vikatan.com என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பி வையுங்கள். குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வி மற்றும் சந்தேகங்களைப் பதிவு செய்யலாம். அதற்கு 044-668029920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழிகாட்டும்.