நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி-பதில் பகுதியில் பங்கு முதலீட்டில் லாபத்தை புக் செய்வது

தொடர்பான சந்தேகங்களுக்கு பங்குச் சந்தை நிபுணர் எஸ்.லெட்சுமணராமன் (ஆர்எம்ஆர் ஷேர்ஸ், சென்னை) அளித்த பதில்கள்...

பிராஃபிட் புக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

‘‘பங்குகளில் முதலீடு செய்வது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று விற்பனை செய்து ஆதாயம் எடுத்துக் கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காக, வாங்கிய பங்கினை சிறிய அளவு லாபத்துடன் விற்க வேண்டும் என்று கட்டாயமில்லை. முதலில் நீங்கள் எந்த வகையான முதலீட்டாளர் என்பதைத் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, முதலில் உங்கள் முதலீடுகள் குறுகிய / நீண்ட காலமா என்பதை நீங்கள் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகையான முதலீட்டுக்கும் வெவ்வேறு வகையான உத்திகள் கையாளப் படுகின்றன.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது மூன்று முக்கியமான விஷயங்களை மனதில்கொள்ள வேண்டும்.

அ. நம்முடைய முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஆ. நஷ்டம் ஏற்பட்டால் குறைந்த அளவு நஷ்டத்துடன் முதலீட்டை விற்று வெளியேறத் தெரிந்திருக்க வேண்டும்.

இ. லாபங்களை வளரவிட வேண்டும்; அதேசமயம், வளர்ந்த லாபங்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, சந்தையின் போக்கில் (Uptrend to down trend) நிறுவனம் சார்ந்து ஏதாவது எதிர்மறையான தகவல்கள், அதன் காரணமாக பங்கின் விலையில் சரிவு ஏற்படும் என்று கணித்தோமேயானால் பிராஃபிட் புக் செய்யலாம்.’’

பங்கு முதலீட்டில் லாப சதவிகிதத்தை எப்படிக் கணக்கிடுவது?

‘‘முதலில், நீங்கள் எந்த வகையான முதலீட்டாளர் என்பதைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். குறுகிய கால அடிப்படை என்றால், எந்த அளவுக்கு லாபம் வந்தால் உங்களுக்கு திருப்தி ஏற்படுமோ, அதை இலக்காகக் கொண்டு செயல்படலாம். நீண்ட கால முதலீட்டாளர் என்றால் இலக்கு அவசியமில்லை. நீண்ட கால அடிப்படையில் நம்முடைய முதலீடுகள் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களிலோ அல்லது பொருளாதாரப் போக்கினை உணர்ந்து முதலீடு செய்தாலோ சந்தை அபரிமிதமான லாபத்தை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் உங்கள் முதலீடுகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.’’

பங்கு முதலீட்டில் அதிகபட்சம் எத்தனை சதவிகிதம் வரை லாபம் பார்க்க இலக்கு நிர்ணயிக்கலாம்?

‘‘சந்தையைப் பொறுத்தவரை, நீண்ட கால அடிப்படையிலான முதலீடுகள் அபரிமிதமான லாபத்தைக் கொடுத்திருக்கின்றன. முதலீட்டுக்கான வெற்றி என்று பார்த்தால், ஸ்டேயிங் கெப்பாசிட்டி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, ஒரு தீர்மானத்துடன் நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ளும்போது இந்த அபரிமிதமான லாபத்தை நீங்கள் பெறலாம்.’’

லாபத்தை புக் செய்ய வேண்டிய நேரத்தில் சந்தை திடீரெனச் சரிந்தால் என்ன செய்வது. பங்குகள் எவ்வளவு சதவிகிதம் குறையும்போது மீண்டும் வாங்கலாம்?

“பொதுவாக, சந்தைகளின் போக்கு மாறும்போது, நமக்கு முன்கூட்டியே சில அறிகுறிகளைக் காட்டும். மாற்றங்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட எளிய உத்திகளைப் பின்பற்றலாம்.

சந்தையின் குறியீடுகள் உயரும்போது, 52 வார அதிகபட்ச விலையைத் தொடும் பங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு காலகட்டத்தில் குறியீடுகள் மட்டும் உயர்ந்து பங்குகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிடும்.

வார அளவில் பார்க்கும்போது, சந்தை குறியீட்டின் ஆரம்ப நிலைக்கும், முடிவு நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் முடியும்.

சந்தையின் குறியீட்டுக்கும் அதனுடைய 200 நாள் மூவிங் ஆவரேஜுக்கும் இடையேயான வித்தியாசம் 70 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்தால், சந்தையில் கரெக்ஷன் வர வாய்ப்பு இருக்கிறது.

தனிப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்தவரைக்கும், அதனுடைய தற்போதைய பி.இ விகிதத்துக்கும், கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளின் சராசரியைவிட அதிகமாக இருந்தாலும் கரெக்ஷன் வர வாய்ப்பு இருக்கிறது.

வெகு அபூர்வமாக எந்த அறிகுறிகளும் இல்லாமல் சந்தைகள் சரியலாம். நாம் தரமான பங்குகளில் முதலீடு செய்திருந்தால், சந்தை விலை மீண்டு வரும்போது இந்தப் பங்குகள் முன்னோடியாகச் செயல்படும். எனவே, பங்குகளைத் தேர்வு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

காளைச் சந்தை என்றால் கரெக்ஷனில் பங்குகளின் விலைகள் 20% வரை குறைய வாய்ப்பு இருக்கின்றன. 20% வரை குறைந்து பங்குகளின் விலை நிலை பெற்றால், அந்தப் பங்குகளை வாங்கலாம். குறைவு என்பது 20 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் யோசிக்க வேண்டும். சந்தை, காளைச் சந்தையில் இருந்து கரடிச் சந்தைக்குச் செல்கிறது என்று அர்த்தம்.”

குறுகிய கால முதலீடுகளுக்கு லாபத்தை புக் செய்யும்போது என்னென்ன யுக்திகளைக் கையாள வேண்டும். லாப சதவிகித அளவுகோல் என்னவாக இருக்க வேண்டும்?

“குறுகிய கால முதலீட்டாளர்கள் பிராஃபிட் புக் செய்ய கையாள வேண்டிய உத்திகள்:

குறுகிய கால அடிப்படையில் வர்த்தகம் செய்யும்போது ஸ்டாப் லாஸ் மிக முக்கியம்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காமல், நம்மால் எந்த அளவுக்கு நஷ்டத்தைத் தாங்க முடியுமோ, அந்த அளவுக்குத்தான் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்துகொள்வது நல்லது.

முதலீடு செய்தபின் ஒரு குறிப்பிட்ட லாப வரம்பினை (5 - 10 சதவிகிதம்) நிர்ணயித்துக்கொண்டு அந்த இலக்கை அடைந்தவுடன் விற்றுவிட்டு வேறு ஒரு பங்கினை வாங்கலாம்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்திருந்தால் சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் லெவலை அறிந்துகொண்டு, சப்போர்ட் லெவலில் வாங்கி ரெசிஸ்டன்ஸ் லெவலில் விற்று பிராஃபிட் புக் செய்யலாம்.

நாம் வாங்கிய பங்கின் விலை ஏற ஏற, ஸ்டாப் லாஸ் லெவலையும் கட்டாயமாக உயர்த்த வேண்டும்.

லாப சதவிகிதம் உங்கள் வர்த்தகத் திறனை பொறுத்து அமையும்.’’

இந்திய சந்தைகளில் ஷார்ட் டேர்ம், மீடியம் டேர்ம், லாங் டேர்ம், வெரி லாங் டேர்ம் ஆகியவற்றில் எதில் அதிக பிராஃபிட் புக் செய்ய முடியும்?

‘‘பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை, லாங் டேர்ம் மற்றும் வெரி லாங் டேர்ம் முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கின்றன.’’