அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்..!

ராமஸ்வாமி; ரங்கராஜன் - செலவுகளைப் பொறுத்த மட்டில், இருவருக்கும் பொது வான விஷயம் எதுவுமே இல்லை.

ஆனால், ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவருமே ‘வீண் செலவு’ செய்கிறவர்கள்.

ராமஸ்வாமி, அந்தக் காலத்து மனிதர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அவரைத் தேடி அவர் வீட்டுக்கு வருபவர் யாரும் இல்லை. அவரே வீட்டில் இருக்க மாட்டாரே..! கோயில், குளம் என்று வெளியில்தான் அவரைப் பார்க்க முடியும்.

சாப்பாட்டு விஷயத்திலோ, ரொம்ப ‘ஸ்ட்ரிக்ட்’. காபி கூடக் காலையில ஒருதரம், ‘சாயங்காலம்’ ஒருதரம் என எதிலும் ஒரு கணக்கு. காபி உட்பட எல்லாமே, வீட்டுலயேதான். இதற்கு அவர் சொல்லும் காரணம், ஒருவிதத்தில் மிகவும் நியாயமானது.

‘பிரமாதமா ஒண்ணும் இல்லை. என்னோட வரும் படிக்கு, ஓட்டல் எல்லாம் கட்டு படி ஆகாது..!’

இப்படி இருக்கறவரு, என்ன ‘வீண் செலவு’ செய்யப் போறாரு...?

ரங்கராஜனின் வாழ்க்கை முறை இதற்கு நேர்மாறானது. இவருக்கு ரயில்வேயில் இருந்து பென்ஷன் வருகிறது.

இதைத் தவிர்த்து, வேறு வருமானம் இல்லை. ‘புள்ளைங்க..?' எப்பவாவது வருவாங்க... போவாங்க... அவ்வளவுதான்!'

அவர் வீட்டில் எப்போதும் யாராவது விருந்தினர் இருந்து கொண்டே இருப்பார்கள்; யாரும் இல்லை என்றால், வாசலில் நின்றுகொண்டு, தனக்குத் தெரிந்த யாராவது கண்ணில் தென்பட்டால், கூப்பிட்டு உட்கார வைத்துப் பேச ஆரம்பித்துவிடுவார். ரங்கராஜனுக்குத் தெரிந்த ஒரே பொழுதுபோக்கு, இந்த வெட்டி அரட்டைதான். மற்றபடி, சினிமா, டி.வி... எதுவும் வேணாம்.

இரண்டு பேரைப் பத்தியும் மேற்கொண்டு சொல்ல எதுவும் இல்லை. அப்படின்னா... இவங்க ரெண்டு பேருக்குமே, ‘வீண் செலவு’ செய்யறதுக்கு, ஒண்ணும் ‘ஸ்கோப்’ இருக்கற மாதிரியே தெரியலியே..!

‘வீண்செலவு’ என்றவுட னேயே, தவறான செலவு என்றுதான் நமது எண்ணம் போகிறது. அதாவது,

‘நல்ல’ செலவு என்றால், அது வீண் செலவு அல்ல என்று தீர்மானித்து விடுகிறோம்.

இங்குதான் நாம் தவறு செய்கிறோம்.

ராமஸ்வாமிக்கு தினமும் கோயில், குளம் என்று போக வேண்டும். பூ, பழம் என்று வாங்கித்தான் ஆகவேண்டும். ‘ஆமா... உங்களுக்குத்தான் வருமானமே இல்லையே... எப்போதாச்சும் சாமிக்கு செஞ்சா போதாதா?'

ஊஹூம், யார் சொல்வதையும் அவர் கேட்பதாக இல்லை. ‘நான் இப்படித்தான்...' என்று பிடிவாத மாக மறுத்துவிடுவார்.

ரங்கராஜனுக்கு வருவோம். அவருக்கு சாப்பிட ஏதாவது இருந்துக்கிட்டே இருக்கணும். அவருக்கு மட்டும் இல்லை... வீட்டுக்கு வந்தவர்களுக் கெல்லாம் டிபன், பிஸ்கட், டீ என்று எதேனும் கொடுத்தே தீர வேண்டும் என்பதில் பிடிவாத மாக இருப்பார். அப்பப்போ, யாராவது வந்துக்கிட்டே இருப்பாங்க... டீ போட்டுக் கொடுத்துக்கிட்டே இருக்கணும்.

‘வேலையை விடுங்க... எப்படியாவது சமாளிச்சுடுவேன். செலவு..? வர்றவங்க என்ன ஒண்ணும் இல்லாதவங்களா..?

அவங்கவங்க வூட்டுல சாப்பிடத்தானே போறாங்க..? சொன்னா, கேட்க மாட்டேங்கிறாரு...’

இப்போது புரிகிறதா..? இதை ஏதோ ‘பூவும் பிஸ்கட்டும்’ ஆன பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். இதேபோன்று வேறு எதாவது ‘நல்ல’ செலவு செய்துகொண்டும் இருப்பார்கள்.

பெரும்பாலான சமயங்களில், ‘நல்லதுதானே..?’ என்று கேட்டே, சமாதானம் ஆகிவிடுகிறோம். செலவு மேலாண்மையைப் பொறுத்த மட்டும், நல்லதா! அல்லதா என்பதல்ல முக்கியம். செய்கிற செலவு, அவசியமா..? அவசரமா...? அவ்வளவுதான்.

மேலே சொன்ன உதாரணத்தையே பார்ப்போம். பூவுக்கு ஆகும் செலவைக் குறைத்துக்கொள்ள ராமஸ்வாமி தயாராக இல்லை. டீ, பிஸ்கட் விஷயத்தில் விட்டுக் கொடுக்க ரங்கநாதனுக்கு சற்றும் மனம் இல்லை.

இரண்டு பேருக்குமே, இந்தச் செலவின் மூலம் மனநிறைவு கிடைக்கிறது. இதை அவர்களின் துணைவியாரும் அறிந்து வைத்து இருக்கின்றனர்.

‘இவரு ரிட்டையராகி, இத்தனை வருஷத்துல, எந்த நோய் நொடியும் இல்லாம ஆரோக்கியமா இருக்காருன்னா... அதுக்கு இந்த அரட்டைதான் காரணம்னு சொல்வேன். யாரையாவது கூப்பிட்டு ஏதாவது சாப்பிடக் குடுக்கறதுல, அப்படியே குழந்தைங்க மாதிரி சந்தோஷப் படுவாரு... அதைப் போயி ஏன் தடுக்கணும்..?’ என்று சொல்வார் ரங்கராஜனின் மனைவி மாலா.

வாஸ்தவமான பேச்சு. ஆனால், வருமானம் இடிக்கிறதே..? என்ன செய்வது..? இங்குதான், ‘வலிக்காம ஊசி போடற டாக்டர்’ தேவை.

ராமஸ்வாமியின் மகள் மீரா, பிரமாதமாக ஒரு காரியம் செய்தாள். அவர் பூ வாங்கும் பூக்கடைக்காரருடன் ஒரு டீல் போட்டாள்.

‘எங்க அப்பாவுக்கு, தெனமும் நாலு முழம் பூ குடுக்கிறீங்க இல்லை..? அதை, எல்லாருக்கும் குடுக்கறமாதிரி, அத்தனை ‘நெருக்கமா’ கட்டிக் குடுக்க வேணாம்...கொஞ்சம் ‘லூசாவே’ கட்டுங்க.. அதுக்கு ஏத்த மாதிரி, விலையைக் குறைச்சுக்குங்க...’

‘இல்லைம்மா.. அப்படிப் பண்ணா உங்கப்பா ஒப்புக்க மாட்டாரே..?’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது.. எங்கப்பா ஒப்புக்கற மாதிரி, பூ தர வேண்டியது உங்க சாமர்த்தியம். ரெண்டு முழத்துக்குக் காசு வாங்கிக்குங்க... நாலு முழம் பூ குடுங்க. அவ்வளவுதான்...’

கடைக்காரருக்கு மீராவின் பிரச்னை புரிந்துவிட்டது. ராமஸ்வாமிக்கு விலை குறைவான பூக்கள், தழைகளைக் கொண்டு, மாலை தொடுத்து, ‘அய்யா... உங்களுக்காவே கட்டியிருக்கேன்...' என்று சொல்லியே, மலிவு விலையில் பூ தந்து, அவரின் செலவைக் குறைத்தார்.
மீரா செய்தது ஏமாற்று வேலை அல்ல; ‘மாற்று வேலை’. ஒருவரின் மனமும் நோகாமல், மடைமாற்றும் வேலை.

குறைந்த மதிப்பீடு (வேற ஒண்ணும் இல்லை... குறைந்த விலை!) அதே அளவு பயன்பாடு. இதை உறுதி செய்யும் ‘டெக்னிக்’.

ரங்கராஜனின் மனைவி மாலாவுக்கு இதேபோன்ற ஒரு டெக்னிக்தான் உதவியது. தட்டு நிறைய பிஸ்கட்டுகளும், கோப்பை நிறையத் தேநீரும் வைக்கிற பழக்கத்தைச் சற்றே மாற்றினார். ஒரு காகிதத் தட்டில் இரண்டு பிஸ்கட்டுகள். முன்பை விடச் சிறிய கோப்பையில், அரைக் கப் அளவுக்கு மட்டுமே ‘சுமாரான’ தேநீர்.

வருகிறவர் யாரும் இரண்டாவது முறை பிஸ்கட் கேட்கப் போவது இல்லை; தேநீரின் தரமும் அவர்களுக்கு அத்தனை முக்கியம் இல்லை. ‘பேச்சு’தான் பிரதானம். பிற எல்லாம், வெறும் தானம். ஆக, மாலா செய்தது சரிதானே..?

விருந்தினரை மரியாதைக் குறைவாக நடத்துவதாக எண்ண வேண்டாம். ‘தண்டிக்கணும்; அதே சமயம் குழந்தைக்கு வலிக்கவும் கூடாது’.

ராமஸ்வாமியும் ரங்கராஜனும் யார் யாரோ அல்ல. நாம்தான். அப்படியே அச்சு அசலாக இதே சூழல்தான் என்று இல்லை; நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதுபோன்ற ஆயிரம் ஆயிரம் சூழ்நிலைகளைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்போதெல்லாம், ‘வலியில்லா மல் ஊசி போடுகிற’ டெக்னிக் தான் கைகொடுக்கும்.

செலவு மேலாண்மையில் இது, மிகமிக அத்தியாவசியமான அத்தியாயம்.

‘சரி, குறைந்த மத்திய வருவாய்ப் பிரிவினருக்கே சொல்லிக்கிட்டு இருந்தா, மத்த பிரிவினருக்கு எல்லாம் செலவு மேலாண்மை தேவை இல்லையா..?’

‘இருங்க.. அடுத்தப் பிரிவினருக்குப் போறதுக்கு முன்னே, இன்னும் ஒரே ஒரு ‘பாயின்ட்’ மட்டும் பார்த்துடுவோம்!’

‘அப்படியா..? சரி.. அது என்ன அவ்வளவு முக்கியமா..?’

‘அதை, நான் சொன்னப்புறம், நீங்களே முடிவு பண்ணிக்குங்க... அடுத்து நாம பார்க்கப் போறது.. ‘ரெண்டாவது கை’!’

‘என்னது ரெண்டாவது கையா..?’

(சேர்ப்போம்)

ஸ்மார்ட் போனில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

அமெரிக்காவை காட்டிலும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்திய சந்தை அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஆன்லைன் வர்த்தகத்தினால் ஸ்மார்ட் போன் விற்பனை இந்தியாவில் அதிகரித்தபடி இருக்கிறது. சீனாவின் சந்தை வளர்ச்சி குறைந்துவரும் நிலையில் உலகிலேயே ஸ்மார்ட் போன்களின் அடுத்த இரண்டாவது பெரிய சந்தையாக அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முந்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2015-16 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட் போன் இறக்குமதி 44% அதிகரித்து, 2.65 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. இந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இது மேலும் 19% அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் வளர்ச்சியின் மூலம் வரும் 2017-க்குள் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஸ்மார்ட் போன் சந்தையாக நம் இந்தியா இருக்கும்!