{?}குறைப் பிரசவத்தில் பிறந்த எனது குழந்தைக்கு மூன்று வாரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். பேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்திருந்த நிலையிலும் க்ளெய்ம் மறுக்கப்பட்டது ஏன்?

கே.செல்வி, திருப்பூர்,

சி.பாலாஜி பாபு, சென்னை மண்டலத் தலைவர், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்

‘‘இரு காரணங்களால் உங்களுக்கு க்ளெய்ம் மறுக்கப்பட்டிருக்கலாம். 1. நீங்கள் எடுத்திருந்த பாலிசியில் குழந்தையின் பெயர் இல்லாமல் இருந்திருக்கலாம். 2. உங்களின் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு பாலிசியில் க்ளெய்ம் இல்லாமல் இருந்திருக்கலாம். எந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியாக இருந்தாலும், குழந்தைகளைப் பொறுத்தவரை, சைல்டு டே ஒன் என்கிற கவரை எடுத்திருந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கான சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்கும்.’’

{?}10 வயது மகளின் எதிர்காலத்துக் காக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். ரிஸ்க் எடுக்கவும் தயாராக உள்ளேன். நல்ல தரமான மிட் கேப் ஃபண்டுகளை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

கே.காந்தி, திருவண்ணாமலை,

விஜய்பாபு, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், பிளான் டு வெல்த் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்

‘‘சிறந்த மிட் கேப் ஃபண்டுகள் என்கிறபோது, ஃப்ராங்க்ளின் பிரைமா பிளஸ், பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன், மிரே அஸெட் எமெர்ஜிங் ப்ளூசிப் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் போன்றவற்றில் உங்கள் மகளின் எதிர்காலத்துக்காக முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளலாம். இவை டைவர்சிபைடு ஃபண்டுகள் என்பதால், நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படும் என்பதோடு, நல்ல வருமானமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. (மிட் கேப் ஃபண்டுகள் பற்றி விரிவாக அறிந்துகொள்ள நாணயம் விகடனில் வெளிவந்த இந்த கட்டுரையைப் படியுங்கள்: https://www.vikatan.com/  /personalfinance/article.php?aid=10480)

{?}நான் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து ஒரு வருட காலத்துக்கு எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.10,000 வீதம் ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்டிலும் முதலீடு செய்து வருகிறேன். 30.6.15 கணக்கின்படி, ரிலையன்ஸ் ஃபண்டில் ரூ.78,864 ரூபாயும் ஐசிஐசிஐ ஃபண்டில் 81,698 ரூபாயும் இருக்கிறது. தற்போது எஃப்டியில் கிடைக்கும் வருமானத்தைவிட குறைவாகவே இந்த ஃபண்டுகளில் கிடைக்கிறது. தொடர்ந்து இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாமா? வேறு நல்ல ஃபண்டுகள் இருந்தால் பரிந்துரைக்கவும்.

எஸ்.சந்தானகிருஷ்ணன், சென்னை

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர், வைஸ் வெல்த் அட்வைசர்ஸ்

‘‘முதலில், எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது குறுகிய காலத்துக்கு ஆனதல்ல. குறைந்தபட்சம் 10 வருடங்களை கருத்தில்கொண்டு முதலீடு செய்ய வேண்டும். நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் வழியாகத்தான் ஈக்விட்டி ஃபண்டின் செயல்திறனை நம்மால் உணர முடியும். நீங்கள் நல்ல ஃபண்டைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்.

இப்போது முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் ஐந்திலிருந்து பத்து ஆண்டுகளில் நல்ல வருமானத்தை கொடுக்கக் கூடியவை. எஸ்ஐபியை பத்து வருடங்களுக்கு புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். வேறு ஃபண்டுக்கு மாற வேண்டாம்.’’

{?}எல்ஐசி வெளியிட்ட ஜீவன் அக்ஷய் -VI, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வரிஸ்தா பென்ஷன் பீம யோஜனா திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரிவிலக்கு உண்டா?

க.வை.மணியன்,

ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ்

‘‘எல்ஐசி வெளியிட்டுள்ள ஜீவன் அக்ஷய் VI திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் காப்பீட்டுத் தவணை தொகைக்கு (Insurance Premium) வருமான வரிச் சட்டம் 80c விதியின் கீழ் வரிச் சலுகை உண்டு. இந்த விதியின் கீழ் காப்பீட்டுத் தவணை தவிர, மற்ற சில முதலீடு / செலவுகளுக்கும் சேர்ந்து ரூ.1,50,000 வரை வரிச் சலுகை கிடைக்கும். இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வரிஸ்தா பென்ஷன் பீம யோஜனா திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எந்தவிதமான வருமான வரிவிலக்கும் இல்லை. இந்தத் திட்டத்துக்கு 2015 ஏப்ரல் 1-ம் தேதி முதல் சேவை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இது மேலும் பயனுள்ளதாகும்.’’

{?}கடந்த 2005-ம் வருடம் அரசுப் பணியில் சேர்ந்த எனக்கு கடந்த 10 வருடங்களாக சிபிஎஸ் (CPS - Contributed Pension Scheme) பிடித்து வருகிறார்கள். இதில் கடனோ அல்லது பகுதிப் பணமோ எடுக்க வாய்ப்பு இருக்கிறதா?

எஸ்.பாரதி, திருவாரூர்,

கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர், ஜிவிஎன் சங்கர் அண்ட் கோ

‘‘தமிழ்நாடு அரசு சட்டத் திட்டத்தின்படி சிபிஎஸ்-ல் இருந்து கடன் அல்லது பகுதிப் பணமோ எடுக்க அனுமதியில்லை. 2009-ம் ஆண்டு பென்ஷன் துறையின் தமிழக அரசு ஆணையின்படி, அரசு ஊழியர் வேலையில் இருக்கும்போது இறந்துவிட்டால், அவர் பணியிலிருந்தவரை பிடிக்கப்பட்ட சிபிஎஸ் தொகையுடன், அரசின் கருணைத் தொகையும் அதற்கு உண்டான வட்டியும் சேர்த்து இறந்தவரின் நியமனதாரருக்கோ அல்லது குடும்பத்துக்கோ வழங்கப்படும்.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.