வெற்றி தரும் ஸ்ட்ராட்டஜி!

இதுவரை...!

இந்தத் தொடரில் இதுவரை ஏழு அத்தியாயங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த அத்தியாயங்களைச் சுருக்கமாகத் திரும்ப எடுத்துச் சொல்கிறேன்.

ஒருவர் தன் வாழ்நாளில் தொழில் செய்து சம்பாதிக்கும் பணத்தைப்போல வேறு எதிலும் சம்பாதிக்க முடியாது. 10,000 ரூபாய் முதலீட்டில் தன் பிசினஸைத் தொடங்கிய சன் பார்மாவின் அதிபர் திலிப் சங்வீ இன்றைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி. எனவே, நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிசினஸ் தொடங்குவதுதான் சரியான முடிவாக இருக்கும். அது மட்டுமல்ல, நீங்கள் பிசினஸ் தொடங்குவதன் மூலம் உங்களைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம். இதன் மூலம் நம் நாட்டுக்கு மிகப் பெரிய பங்களிப்பினை செய்ய முடியும்.

பிசினஸ் செய்ய நினைத்தால் ரிஸ்க் எடுத்துதான் ஆகவேண்டும். ரிஸ்க் எடுக்காமல் பிசினஸில் வெற்றி என்பது சாத்தியமே இல்லை. பிசினஸ் தொடங்கு வதற்கு நம்மிடம் பல மனத்தடை கள் உள்ளன. நிறைய பணமிருந் தால்தான் பிசினஸ் செய்ய முடியும்; படித்திருந்தால்தான் பிசினஸ் செய்ய முடியும்; பெண்களால் பிசினஸ் செய்ய முடியாது என்றெல்லாம் பல தவறான அபிப்ராயங்களைக் கொண்டிருக்கிறோம். இவற்றை எல்லாம் உடைத்தெறிந்தால்தான் நாம் வெற்றிகரமாக பிசினஸ் செய்ய முடியும்.

பிசினஸ் செய்வது என்று முடிவு செய்துவிட்டால், உங்களுக்கான தொழிலை முதலில் கண்டுபிடியுங்கள். உங்களுக்கான தொழிலைக் கண்டுபிடிக்க சந்தைக்குச் சென்று அங்கு நடக்கும் பல தொழில்களைப் பற்றி ஆராயுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் பல நூறு தொழில் களில் அதிக லாபம் தரும் தொழில்களை மட்டும் வடிகட்டிப் பிரித்தெடுங்கள். உங்களுக்கான தொழிலைக் கண்டுபிடித்தபின், அந்தத் தொழிலை எப்படி வித்தியாச மாகச் செய்ய வேண்டும் என்று பாருங்கள். அப்போதுதான் நீங்கள் தேர்ந்தெடுத்த தொழிலில் ஜெயிக்க முடியும்.

இனி, நாம் ஒரு தொழிலை எப்படி செய்யப்போகிறோம் என்பதைப் பார்ப்போம்.

இனி...

ஒரு தொழிலின் வெற்றி என்பது மூன்று முக்கியமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதில், முதலாவது ஸ்ட்ராட்டஜி. இரண்டாவது, ஸ்ட்ரக்சர். மூன்றாவது, ஊழியர்கள்.

மறைந்த சுமந்த்ரா கோஷால் ஒரு பேராசிரியர். அவர் இந்த மூன்றையும் பற்றி விரிவாகவே எடுத்துச் சொல்லி இருக்கிறார். லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பேராசிரியராகவும் ஹைதராபாத்தில் உள்ள இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் டீனாகவும் இருந்தவர் கோஷால்.

இந்த மூன்று விஷயங்களுடன் செயலாக்கம் என்கிற நான்காவது விஷயமும் மிக முக்கியம். ஒருவர் தனது பிசினஸில் தோல்வி அடைகிறார் என்றால், மேற்சொன்ன நான்கு விஷயங் களில் ஏதோ ஒன்றில் தவறு செய்திருப்பார். எனவே, இந்த மூன்று விஷயங்களையும் அடுத் தடுத்த வாரங்களில் விரிவாகப் பார்ப்போம். முதலில் ஸ்ட்ராட் டஜி பற்றிப் பார்ப்போம். ஸ்ட்ராட்டஜி என்றால்...?

ஸ்ட்ராட்டஜி என்றால் திட்டமிடுவது. ஒரு போருக்குப் போகிறோம். அந்தப் போரில் வெற்றி பெறுவதே நம் லட்சியம். அந்த நிலையில் நம்முடைய யுக்திகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்வது தான் நம்முடைய ஸ்ட்ராட்டஜி.

ஒரு பிசினஸ் செய்யப் போகிறோம் எனில், நாம் எந்த சந்தையைப் பிடிக்கப் போகிறோம் என்பதற் கான திட்டமிடுதல்தான் ஸ்ட்ராட்டஜி. சுருக்கமாக, பிசினஸில் ஜெயிக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய வித்தியாசமான அணுகுமுறை யைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதுதான் ஸ்ட்ராட்டஜி.

இதற்கு ஓர் உதாரணமாக என் தந்தை சின்னிகிருஷ்ணனையே எடுத்துக் கொள்ளலாம். அவர் தனக்கான தொழிலை எப்படி உருவாக்கிக் கொண்டார் என்பதைச் சொல்கிறேன்.

அவரது காலத்தில் ஷாம்பு என்பது பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தது. காரணம், ஷாம்பு என்பது பாட்டிலில்தான் கிடைத்தது. பாட்டில்களில் 100 மி.லி, 200 மி.லி என்று கிடைக்கும் போது அதன் விலை அதிகமாக இருந்தது. அந்த விலையைத் தந்து சாதாரண மனிதர்களால் ஷாம்பு வாங்க முடிவதில்லை. எனவே தான், சாதாரண மனிதர்களால் ஷாம்பு பயன்படுத்த முடியவில்லை என்பதை அவர் முதலில் புரிந்துகொண்டார்.

எனவே, சிறிய பாக்கெட்டு களில் ஷாம்பினை அடைத்து விற்றால், ஷாம்பின் விலை குறையும். இதனால் சாதாரண மக்களும் ஷாம்பினை பயன் படுத்தமுடியும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவர் புரிந்து கொண்ட இந்த உண்மையைச் செயல்படுத்த நினைத்து அவர் கண்டுபிடித்த ஒரு யுக்திதான் சாஷே என்கிற தொழில்நுட்பம். இது ஒரு பவர்ஃபுல் யுக்தி.

100 மி.லிட்டர், 200 மி.லிட்டர் என்கிற அளவுகளில் கிடைத்து வந்த ஷாம்பினை சிறிய அளவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்க நினைத்தது ஒரு புதுமை யான சிந்தனை (innovation). வெறும் புதுமையான யுக்தி என்றில்லாமல், மற்றவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிற, அர்த்தம் பொதிந்த புதுமையான (meaningful) யுக்தியாகவே அது இருந்தது. மற்றவர்கள் யோசிக்காத அந்தக் கோணத்தில் அவர் யோசித்து, அதை நடைமுறைப்படுத்தியதால்தான் அவர் வெற்றி பெற்றார்.

ஆக, அவரது பிசினஸ் நோக்கம், எளிய மக்களும் அன்றாடம் பயன்படுத்துகிற மாதிரி மிகக் குறைந்த விலையில் ஷாம்பினைத் தரவேண்டும் என்பதே. தனது நோக்கத்தை இப்படி ஒரே வரியில் சொல்ல முடிந்ததால்தான், அவரால் தன் ஸ்ட்ராட்டஜியை சரியாக வடிவமைத்துக் கொண்டு ஜெயிக்க முடிந்தது.

நீங்கள் செய்யும் பிசினஸ் பற்றி உங்களால் ஒரே வரியில் எடுத்துச் சொல்ல முடிகிற அளவுக்கு உங்களிடம் ஒரு தெளிவு இருக்கும் என்றால், உங்களுக்கான ஸ்ட்ராட்டஜி தயார் என்று அர்த்தம்.

அண்மையில் புனேவுக்குச் சென்றிருந்தேன். அங்கே கயானி என்று ஒரு பேக்கரி. இந்த பேக்கரிக்கு எப்போது போனா லும் கூட்டம் அலைமோதுகிறது. நானும் வரிசையில் நின்று சில அயிட்டங்களை வாங்கிச் சாப்பிட்டேன். அருமையான சுவை! இந்த பேக்கரியில் இவ்வளவு கூட்டம் அலை மோது கிறதே! என்ன காரணம்? என சிலரிடம் கேட்டேன். ‘இங்கு எல்லாமே ஃப்ரெஷ்-ஆகக் கிடைக்கும். நேற்று தயாரித்த பொருளை இன்று தரவே மாட்டார்கள். தவிர, இந்த டேஸ்ட் வேறு எங்கும் வராது’ என்று அடித்துச் சொன்னார்கள் வாடிக்கையாளர்கள்.

ஆக, தங்கள் கஸ்டமர்களுக்கு சுவையான பேக்கரி அயிட்டங்களை ஃப்ரெஷ்-ஆகத் தரவேண்டும் என்பதே கயானி பேக்கரியின் நோக்கம். அதுதான் அந்த நிறுவனத்தின் ஸ்ட்ராட்டஜி.

இன்றைக்கு நாம் பார்க்கும் பல தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான ஸ்ட்ராட்டஜியை எப்படி அமைத்துக் கொண்டிருக் கின்றன என்பதை அடுத்த இதழில் சொல்கிறேன்.

(ஜெயிப்போம்)

சி.கே.ஆரிடம் கேளுங்கள்!

நான் ஜவுளி ஆலையை நடத்தி வருகிறேன். இந்த ஆலையில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு சில கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு 57 வயதாகிவிட்ட நிலையில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரும் செயலில் இறங்குவது சரியா?

ராஜேந்திரன், கோவை.

"பிசினஸ் செய்ய வயது ஒரு தடையே அல்ல. நம்மிடம் இருக்கும் மன உறுதிதான் நம்மை பிசினஸில் ஜெயிக்க வைக்கும். உங்களுக்கு 57 வயதுதானே ஆகிறது. உங்களுக்கு ஒன்றும் வயதாகிவிட வில்லையே! கண்களை கொஞ்சம் அகலத் திறந்து வெளியுலகத்தைப் பாருங்கள்; 80 வயதுக்கும் மேலானவர்கள் எத்தனை துறைகளில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அவர்கள் எல்லாம் சளைக்காமல் ஓடியாடி உழைத்து வரும்போது உங்களால் மட்டும் முடியாதா என்ன? தவிர, மருத்துவம் என்பது இன்றைக்கு எவ்வளவோ வளர்ந்துவிட்டது. அதனால் நம் ஆயுட்காலமும் 80 ஆண்டுகளுக்கு மேல் சென்றுவிட்டது. எனவே, இன்னும் 20 ஆண்டுகளுக்கு நீங்கள் கவலைப்படாமல், நம்பிக்கையோடு உங்கள் பிசினஸை செய்ய முடியும். தயங்காமல் முடிவெடுங்கள்!''

தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு!

தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை businesssecrets@vikatan.com என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.