Published:Updated:

தங்கம் விலை குறைவதற்கான 10 காரணங்கள்!

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

ழு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 2008-ம் ஆண்டுக்கு பிறகு தங்கத்தின் விலை வேகமாக உயர ஆரம்பித்து, பிற்பாடு ஒரு அவுன்ஸ் தங்கம் அதிகபட்ச மாக 1,900 டாலரைத் தொட் டது. அதற்குப்பின், கடந்த மூன்று  ஆண்டுகளாக தங்கத் தின் விலை குறைந்து, தற் போது ஒருவிதமான மந்தநிலை யில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை கடுமையாக சரிவடைந்து, தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.2,400-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து குறையக் காரணம் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

தங்கம் விலை குறைவதற்கான 10 காரணங்கள்!

• தங்கத்தின் விலையானது நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவுகிற சூழ்நிலை, மத்திய வங்கிகள் வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மற்றும் பணவீக்கம் உயர்வு போன்ற சமயங்களிலும் அதிகரிக்கும். ஆனால், இன்றைய சூழ்நிலையில், மேலே கூறிய காரணங்கள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்மறையாக உள்ளது. மேலும், கிரீஸ் நிதிப் பிரச்னைக்கும் தற்காலிகமாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வட்டி உயர்த்தப்படலாம் என்கிற கருத்து நிலவுகிறது. உலகெங்கும் சந்தைப் பொருட்களின் விலை சரிந்து வருவதால், பணவீக்கம் அதிகரிக்காமல் உள்ளது. ஆக ரிஸ்க் குறைவாக இருப்பதால், தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து வருகிறது.

• 2002-லிருந்து 2008 வரை அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துகொண்டே வந்தது. அதனால் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. அதாவது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1900 டாலர் வரை இருந்தது. ஆனால், இப்போது டாலரின் மதிப்பு வலிமை அடைந்து வருகிறது. குறிப்பாக, யூரோ மற்றும் யென்னுக்கு நிகராக டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.

• உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த நம்பிக்கை மாற்றம் அடைந்து வருகிறது. டாலரை சிறந்த முதலீடாக நினைத்து, அதனை வாங்கி வைக்க ஆரம்பித்துள்ளார்கள். டாலர் அதிகமாக வாங்கப்படுவ தாலும் மதிப்பு அதிகரிக்கிறது.

• தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடான சீனாவில் தற்போது பொருளாதார மந்தநிலை காணப்படுவதால், தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளது. இதன் காரண மாக கடந்த ஆறு மாதங்களில் சீனாவின் தேவை 24 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும், சாதாரண மக்களின் நுகர்வுக் குறையும் (Consumption) போதும் தங்கத்தின் விலை சரிய வாய்ப்புள்ளது.

• தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை டாலரில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. வளரும் நாடுகள் அனைத்துமே இந்த பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலையில்தான் உள்ளன. இதன் காரணமாக இப்போது டாலரை வாங்கி வைப்பது அதிகரித்துள்ளது.

• பிஸிக்கலாக தங்கத்தை வாங்க விரும்பாதவர்கள் கோல்டு இடிஎஃப் திட்டங்களில் முதலீடு

தங்கம் விலை குறைவதற்கான 10 காரணங்கள்!

செய்வார்கள். தற்போது இடிஎஃப் மீதான முதலீட்டிலிருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறுவதால், இடிஎஃப் நிறுவனங்கள் தங்கத்தை விற்பனை செய்கிறார்கள். இதனால் தங்கத்தின் விலை குறையத் துவங்கியுள்ளது. உலகின்  பெரிய இடிஎஃப் நிறுவனமான SPDR GOLD TRUST 2012-ல் தன்னுடைய கையிருப்பாக 1,291 மெட்ரிக் டன்கள் தங்கம் வைத்திருந்தது. தற்போது 47% குறைந்து 690 மெட்ரிக் டன்களாக உள்ளது.

• தங்கத்தின் விலை கடுமையாக உயரும் என  பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்க துவங்கியது. ஆனால், தற்போது எந்த நாட்டின் மத்திய வங்கியும் தங்கத்தை இருப்பு வைக்க விரும்பவில்லை.

2009-ம் ஆண்டு  இந்திய ரிசர்வ் வங்கி 200 மெட்ரிக் டன்கள் தங்கத்தை வாங்கியது. 2008-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின்  பொருளாதாரத்தில் அடிப்படையிலான அளவில் முன்னேற்றம் இல்லாமல் டாலரின் மதிப்பு உயர்ந்து காணப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுவதால், ஒருவேளை பிற்காலத்தில், டாலர்  மதிப்பு சரியுமேயானால் மீண்டும் தங்கம் விலை ஏறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகையால் இத்தகைய காலகட்டத்தில் நம் ரிசர்வ் வங்கி  ஐஎம்எஃப்- இடமிருந்து தங்கம் வாங்குவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

• அமெரிக்காவின் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முன்பாக, பணவீக்க விகிதம் சாதாரண நிலைக்கு வரவேண்டும் என்று அமெரிக்க ஃபெடரல் வங்கியின் துணைத் தலைவர் ஸ்டான்ஸி ஃபிஷ்கர் கூறியுள்ளார். இவர் இப்படி சொன்னவுடன் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 10 டாலர் அதிகரித்தது. மேலும், அமெரிக்காவின் வட்டி விகித உயர்வில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை உயர்வு இருக்கும். அதாவது, வட்டி விகிதத்தை உயர்த்தினால் விலை அதிகமாக குறையும்; வட்டி விகித உயர்வை தள்ளி வைத்தால் விலை சரிவு தடுக்கப்படும். ஒருவேளை வட்டி விகித உயர்வு இல்லையெனில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

• தங்கத்தின் மீதான முதலீட்டின் மூலமாக எந்தவிதமான வருமானமும் கிடைப்பதில்லை. அதாவது, அரசு பாண்டுகளில் முதலீடு செய்யும்போது, குறிப்பிட்ட அளவு வட்டி அல்லது டிவிடெண்ட் கிடைக்கும். ஆனால், தங்கத்தில் முதலீடு செய்யும்போது எந்தவிதமான வருமானமும் கிடைப்பதில்லை.

• தங்கம், சர்வதேச சந்தையில் டாலரில் வர்த்தகமாவதால் உற்பத்தியில்  முக்கிய பங்கு வகிக்கக்கூடிய நாடுகளான சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் நாணய மதிப்பு டாலருக்கு நிகராக குறைந்து வருகிறது. தவிர, எரிபொருள், மற்றும் சுரங்கம் தொடர்பான எந்திரங்களின் விலைச்சரிவு, தொழிலாளர் ஊதியம் குறைந்து, உற்பத்திச் செலவு  அதிகரிக்காமல் காணப்படுகிறது. இதனால், தற்போதைய உற்பத்திச் செலவு 1 டிராய் அவுன்ஸ் 750  டாலர் வரை இறங்கலாம் என்கிறார்கள்!

ட்விட்டர்: இனி 10,000 எழுத்துகள்!

ட்விட்டரில் நேரடியாக அனுப்பப்படும் செய்திகளுக்கான (Message) எழுத்துக்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடு 140-லிருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனத்தால் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின்படி, தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட செய்தி அனுப்பும் வசதியானது தனிப்பட்ட ஒருவருக்கு செய்தி அனுப்பவே பயன்படுத்தப்படுகிறது. அந்தச் செய்தியை அவர் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், எழுத்துக்களின் எண்ணிக்கையில் இருந்த கட்டுப்பாட்டினைத் தளர்த்தியுள்ளது ட்விட்டர்.

அடுத்த கட்டுரைக்கு