2015-16-ம் நிதியாண்டில் இந்திய அரசு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதாவது, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக இந்த பாண்டுகள் வெளியிடப்படுகிறது. இதன் மூலமாகக் கிடைக்கும் தொகையை வைத்து உள்கட்டமைப்பு வேலைகளைச் செய்து முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2013 - 14 நிதியாண்டில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசு நிறுவனங்கள் பாண்டுகளை வெளியிட்டது.

யார் முதலீடு செய்யலாம்?

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளில் முதலீடு செய்து அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கிடையாது. நீண்ட கால நோக்கில், நிரந்தர வருமானம் எதிர்ப்பார்க்கக் கூடியவர்களுக்கு இந்த பாண்டுகள் சிறந்த முதலீடாக இருக்கும். மேலும், 30 சதவிகித வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு ஏற்ற திட்டமாக இந்த டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் இருக்கும்.

ஓய்வு நிதியை முதலீடு செய்து அதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட வருமானம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பாண்டுகளில் முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்யும் முறை!

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளை டீமேட் கணக்கு மூலமாகவும் வாங்கலாம். டீமேட் கணக்கு இல்லாதவர்கள் பிசிக்கலாக பாண்டுகளை வாங்க முடியும். ஆனால், பிசிக்கலாகப் பாண்டுகளை வாங்கும்போது அதை சந்தையில் மறுவிற்பனை செய்ய முடியாது.

டீமேட் வடிவில் வாங்கும் போது, அதை என்எஸ்இ அல்லது பிஎஸ்இ சந்தையில் விற்க முடியும். இதில் மொத்தமாக ஒரே முறையாகத்தான் முதலீடு செய்ய முடியும். எதிர்காலத்தில் கடன் சந்தையில் வட்டி விகிதம் அதிகமாக குறைந்தால் இது போன்ற பாண்டுகளின் முக மதிப்பு உயரும்.

ரிஸ்க் இல்லாத முதலீடு!

அரசு நிறுவனங்கள் பாண்டுகளை வெளியிடுவதால், ரிஸ்க் மிகவும் குறைவு. இந்த பாண்டுகள் AAA மற்றும் AA ரேட்டிங் பெற்றவை ஆகும். இந்த பாண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிப் பிரிவில் விலக்கு பெற முடியாது. அதாவது, 80சி பிரிவில் விலக்கு பெற முடியாது.

முதலீட்டுக் காலம்!

இந்த பாண்டுகள் அனைத்தும் 10, 15 மற்றும் 20 ஆண்டுகள் முதிர்வு கொண்டது. அதனால் ரிஸ்க் தேவையில்லை என நினைப்பவர்கள் தைரியமாக முதலீடு செய்யலாம். மேலும், சிறு முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யமுடியும். அதேபோல, ரூ.1,000 மற்றும் ரூ.5,000 மதிப்பில் பாண்டுகள் இருக்கும். வட்டி விகிதம் எவ்வளவு என்பது பாண்டுகள் வெளியிடும்போதுதான் தெரியும். கடந்த வெளியீடுகளில் 7.3 -7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டது. வட்டி வருமானத்தை ஆண்டுக்கு ஒருமுறை கொடுத்துவிடுவார்கள்.

ஃபிக்ஸட் டெபாசிட்!

அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் அல்லது வரி விலக்கு பெற நினைப்பவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.

வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் 5 வருடம் லாக் இன் பிரீயட் இருக்கும். இதில் கிடைக்கும்

வட்டிக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, கிடைக்கும் வட்டிக்கு அவர் வருமான வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, எஃப்டியில் ஒருவர் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் எனில் 8.5 - 9% வரை வட்டி கிடைக்கும். இந்த வட்டிக்கு 10% வருமான வரம்பில் இருப்பவர்களுக்கு வரிக்குப் பின் 7.6 சதவிகித வருமானம்தான் கிடைக்கும்.

மேலும், வரிச் சலுகைக்காக ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும்போது அசல் தொகை 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கு பெற முடியும். இதே போல டாக்ஸ் ஃப்ரீ பாண்டின் வருமானத்தை பிபிஎஃப், மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பீட்டு ஆடிட்டர் என்.ஸ்ரீகாந்த் தந்துள்ள அட்டவணையை பார்க்கவும்.

நெகட்டிவ் அம்சங்கள்!

டாக்ஸ் ஃப்ரீ பாண்டில் வட்டியை மறு முதலீடு செய்ய முடியாது. ஒவ்வொரு வருடமும் வட்டி வருமானம் நமக்குக் கிடைத்துவிடும்.

இதனால் குமுலேட்டிவ் வருமானம் நமக்குக் கிடைக்காது. முதலீடு செய்த தொகைதான் முதிர்வில் கிடைக்கும்.

குறைந்தபட்ச வருமான வரம்பில் (10%, 20%) இருப்பவர்களுக்கு இது பெரிய பயன் அளிக்காது.

டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் முதலீடு செய்ய விண்ணப்பித்த முழுத் தொகைக்கும் கிடைக்குமா என்பது தெரியாது.

முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்குத்தான் முன்னுரிமை தரப்படும். சிறு முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

10, 20 சதவிகித வருமானத்தில் இருப்பவர்கள் இந்தப் பாண்டு களில் முதலீடு செய்யும்முன், எல்லா வருமான வரி விலக்குப் பிரிவுகளிலும் முழுவதுமாக முதலீடு செய்துவிட்டீர்களா என்று பார்க்க வேண்டும்.

முழுவதும் முதலீடு செய்து கூடுதலாகத் தொகை இருக்கும்போது இதில் முதலீடு செய்யலாம்.

இப்போது குறைந்தபட்சம் 10% வருமான வரம்பில் இருப்பவர்கள், அடுத்த பத்து வருடத்தில் எப்படி யும் 30% வருமான வரம்புக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. அப்போது புதிதாக முதலீடு செய்வதைவிட, இப்போது இதில் முதலீடு செய்வது நல்லது.

இரா.ரூபாவதி