உலக அளவில் பல்வேறு கமாடிட்டி பொருட்களின் விலைகள் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் பயன் பெற்றிருக்கிறதா என்று கேட்டால், ஒரு சில துறைகள் மிகவும் பயன் அடைந்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

கச்சா எண்ணெய், இரும்பு, காப்பர், அலுமினியம் போன்ற கமாடிட்டி பொருட்களின் விலைச் சரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட் டாலும், சீனாவின் நுகர்வு குறைந்ததுதான் முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும். அதாவது, முக்கியமான பல கமாடிட்டிகளின் இறக்குமதி சீனாவில் கடந்த ஒரு வருடமாக குறைந்துகொண்டே வந்தது. முக்கியமாக, உலோகப் பயன்பாட்டில் இது பெரிதாகவே எதிரொலித்தது. இதனால் சர்வதேச சந்தையில் அலுமினியம், நிக்கல் என்று மட்டுமல்லாமல் விலையுயர்ந்த வைரம் மற்றும் பிளாட்டினம் போன்றவற்றின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக, இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களில் சிலவற்றுக்கு சாதகமான பலனையும் வேறு சிலவற்றுக்கு பாதகமான பலனையும் தந்துள்ளது.

கமாடிட்டிகளின் விலைச் சரிவு!

முதலில் சர்வதேச சந்தையில் கமாடிட்டி பொருட்களின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் எவ்வளவு குறைந்திருக்கிறது என்று பார்ப்போம். சோயா பீன் எண்ணெய்தான் குறைந்த அளவில் இறக்கம் கண்ட கமாடிட்டியாக இருக்கிறது. அது 14% மட்டுமே இறக்கம் கண்டதாக இருக்கிறது. கச்சா எண்ணெய் அதிக அளவில், அதாவது ஏறக்குறைய 50% வரை இறக்கம் கண்டிருக்கிறது (பார்க்க: அடுத்த பக்கத்திலுள்ள மூலப்பொருட்கள் விலைச் சரிவு அட்டவணை!)

எந்தெந்தத் துறைக்கு நன்மை?

கமாடிட்டி பொருட்களின் விலை குறைந்திருப்பதினால் சில துறைகளுக்கு நன்மை பிறந்திருக்கிறது. உதாரணமாக, கச்சா எண்ணெய்யை எடுத்துக் கொண்டால், நம் நாட்டில் பெரிய அளவில் உற்பத்தி இல்லாததால், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் பாதிப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஏனென்றால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதியை நம்பி இருக்கின்றன. கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல், அதன் துணைப்பொருட்களின் (Byproducts) விலைகளும் சரிந்தே வர்த்தகம் நடைபெறுவதால், துணைப்பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் லாப சதவிகிதம் அதிகரித்துள்ளன. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யும் நிறுவனங்களும் லாபம் கண்டுள்ளன.

ஜவுளித் துறையை எடுத்துக் கொண்டால், பருத்தி விலைச் சரிவு நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரப்பரின் சர்வதேச விலையானது கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் டயர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது. கரும்புச் சக்கை விலை குறைந்ததால், ஆல்கஹால் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சாதகம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியாக வேண்டும். கமாடிட்டி பொருட்களின்

விலைச்சரிவால் எல்லா நிறுவனங்களாலும் லாபம் கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், மூலப்பொருட்களின் விலை குறையும்போது, நிறுவனங்கள், தொழில் போட்டி காரணமாக அதன் பயன்களை முழுவதுமாக எடுத்துக்கொள்ளமுடியாமல், நுகர்வோருக்கு அதைத் தள்ளுபடியாகவோ அல்லது வேறு விதமாகவோ தரவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். அவ்வாறு இல்லாமல் விலைகளைக் குறைக்காமல் விற்பனை செய்ய முடிந்தால் மட்டுமே நிறுவனத்தின் லாப சதவிகிதம் அதிகரிக்கும்.

எந்த நிறுவனங்களுக்கு லாபம்?

கமாடிட்டி பொருட்களின் விலை குறைந்துள்ளதால், இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டு முடிவுகளில் சில நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் சில நிறுவனங்களுக்குப் பாதகமாகவும் முடிந்துள்ளது. எஃப்எம்சிஜி (FMCG), வாகனத் துறை (Auto), ஆயில் (Oil) சார்ந்த நிறுவனங்கள் சாதகமான பலனைப் பெற்றுள்ளன. மூலதனப் பொருட்கள் (Capital goods), மின்சாரம் (Power), மருந்துத் தயாரிப்பு (Pharma), உலோகத் துறை சார்ந்த நிறுவனங்கள் பாதிப்பு அடைந்துள்ளன.

இனி ஒவ்வொரு துறை சார்ந்த நிறுவனங்களையும் பார்ப்போம்.

எரிபொருள் (Energy)

இந்தியாவில் எண்ணெய் கண்டுபிடிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஓஎன்ஜிசி மற்றும் எண்ணை விற்பனை செய்யும் நிறுவனமான ஐஓசி ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகளில் நிகர லாபமானது, இதற்கு முந்தைய காலாண்டுகளைவிட ஓஎன்ஜிசி 14.5% அதிகமாகவும், ஐஓசி இரண்டு மடங்குக்கு மேலாகவும் அதிகரித்துள்ளன. கச்சா எண்ணெய்யின் விலை ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 43% குறைந்து காணப்பட்டது. ஓஎன்ஜிசி-யை பொறுத்தவரை, எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் அளித்ததால், இதன் லாபம் அதிகரித்தது. அதே சமயத்தில் ஐஓசி-யைப் பொறுத்தவரை, நிறுவனங்களின் ஜிஆர்எம் அதிகரித்ததால் லாபமும் அதிகரித்தது.

ஜிஆர்எம் என்பது கிராஸ் ரிஃபைனரி மார்ஜின் (Gross Refinery Margin). அதாவது, கச்சா எண்ணெய்யின் விலைக்கும், அதை சுத்திகரித்தபின் பிரித்தெடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களின் விலைக்கும் உள்ள விகிதாசாரத்தைக் குறிப்பதுதான் ஜிஆர்எம். ஐஓசி, பிபிசில், ஹெச்பிசில் போன்ற நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை வாங்கி, சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் நிறுவனங்களாகும்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்து வருவது, ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விமான எரிபொருள் செலவுகளைக் குறைக்கச் செய்துள்ளது. இதனால் இந்த நிறுவனம் நிகர லாபம் கண்டுள்ளது. இதேபோல், ஸ்பைஸ் ஜெட் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 72 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.

எஃப்எம்சிஜி (FMCG)

கடந்த ஆறு மாதங்களில் பாமாயில் 20% இறக்கம் கண்டுள்ளது. ஹெச்யூஎல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் விற்பனை 6% அதிகரித்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையிலான வளர்ச்சி விகிதம் 5% (volumn growth) அதிகரித்துள்ளது. ஆனால், நிகர லாபமானது 0.2% மட்டுமே கூடியுள்ளது. மூலப் பொருளின் விலைச்சரிவு, கிராமப்புற விற்பனை குறைந்ததை அடுத்து, நிறுவனம் விளம்பரச் செலவுகளில் ஈடுபட்டதால் நிகர லாபத்தில் பிரதிபலிக்கவில்லை. ஆனால், தற்போது பணவீக்கம் குறைந்து காணப்படுவது, விழாக்காலங்கள் நெருங்குவது போன்றவற்றின் காரணமாக வரும் மாதங்களில் மார்ஜின் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ரப்பர் (Rubber)

இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி இந்த ஆண்டு 12% முதல் 15% வரை குறையக்கூடும் என்று எதிர்பார்த்தாலும், கச்சா எண்ணெய்யிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சிந்தெடிக் ரப்பர் குறைந்து கொண்டு வருவது டயர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. சென்ற வருடம் இதே ஜூன் காலாண்டின் இயற்கை ரப்பரின் விலையைவிட, இந்த வருட ஜூன் காலாண்டில் 13% விலைச் சரிவை (1 கிலோ ரூ.126) சந்தித்துள்ளது. இதனால் முடிவடைந்த காலாண்டில் சென்ற வருடம் 230 கோடியாக இருந்த எம்ஆர்எஃப் நிறுவனத்தின் நிகர லாபம், இந்த ஆண்டு 446 கோடிகளாக உயர்ந்துள்ளது. பங்கு விலை சென்ற வருடம் ரூ.23,000-ஆக இருந்தது, தற்போது ரூ.44,000-ஆக அதிகரித்துள்ளது.

மொத்தத்தில்..!

முடிவடைந்த ஜூன் காலாண்டில் 2300 நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த மூலதனப் பொருட்கள் துறையின் ஜூன் மாத வருவாய் (Earnings) அதிகரித்துள்ளது. விற்பனை (Sales) குறைந்தாலும் உலோகங்களின் விலை சரிந்ததின் அடிப்படையில் நிகர லாபம் இரட்டிப்பாகியுள்ளது. கமாடிட்டிகளின் விலை தொடர்ந்து குறையும் பட்சத்தில் அடுத்த காலாண்டிலும் பல நிறுவனங் களுக்கு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

அரசுக்குத்தான் அதிக லாபம்!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்திருப்பதால் தனியார் நிறுவனங்கள் அடைந்த லாபத்தைவிட நமது மத்திய அரசாங்கம் அடையும் லாபம்தான் அதிகம். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறையும்பட்சத்தில் நமது மத்திய அரசாங்கத்துக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் அந்நிய செலாவணி மிச்சம் ஆகிறது என்பது முக்கியமான விஷயம்!