நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி-பதில் பகுதியில் நியூ பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்)

சம்பந்தமான சந்தேகங்களுக்கு நிதி ஆலோசகர் வி.சங்கர் பதில் அளித்த பதில்கள்...

என்பிஎஸ் (நியூ பென்ஷன் சிஸ்டம்) திட்டத்தில் 80சி மற்றும் 80சிசிடி பிரிவுகளில் வரி விலக்கு பெற எப்படி முதலீடு செய்வது?

‘‘நீங்கள் என்பிஎஸ்-ல் முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு அதற்கான 80சி சான்றிதழ் தரப்படும். அதைக் காட்டி வரி விலக்கு வாங்கிக்கொள்ளலாம்.

80சிசிசி என்பது இன்ஷூரன்ஸ் நிறுவனம் மூலமாக முதலீடு செய்யக்கூடியது. 80சிசிடி என்பிஎஸ் மூலம் முதலீடு செய்வது. கடந்த வருடம் வரை இந்த மூன்று முதலீட்டிலும் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருக்கலாம்.

ஆனால், நடப்பு 2015-16 நிதி ஆண்டு முதல் 80 சிசிடியில் 50 ஆயிரம் ரூபாய் அதிகபட்சமாக முதலீடு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. மேலே கூறப்பட்ட மூன்றும் சேர்த்து ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

80சிசிடி-ல் முதலீடு செய்ய எட்டு பென்ஷன் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பாயின்ட் ஆஃப் ப்ரெசன்ஸ் சர்வீஸ் புரவைடர் (பிஓபி-எஸ்பி) தருபவர்களை அணுகி விண்ணப்பம் பெற்று, நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என எழுதிக் கொடுத்தால், உங்களுக்கென ஒரு எண் ஒதுக்கி, முதலீட்டை ஆரம்பிப்பார்கள். அவர்கள் தரும் ஆதாரத்தை வைத்து நீங்கள் வரிவிலக்கு கோரலாம்.''

நான் என்பிஎஸ் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்புகிறேன். நான் ஆட்டோ சாய்ஸிலிருந்து ஆக்டிவ் சாய்ஸுக்கு மாற்றிக் கொள்ள யாரை அணுக வேண்டும்?

‘‘நீங்கள் ஆரம்பத்தில் கணக்கு தொடங்கிய பிஓபி - எஸ்பியை அணுகி, உங்கள் தேர்வை ஆட்டோ சாய்ஸிலிருந்து ஆக்டிவ் சாய்ஸுக்கு மாற்றித் தர சொன்னால், அவர்களே மாற்றித் தருவார்கள். அப்படி மாற்றும்போது எதில் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும். அதற்கான ஒப்புகை உங்களுக்கு தரப்படும். அதை நீங்கள் ஆவணமாக வைத்துக்கொள்ளலாம்.''

என் அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதமான 3,700 ரூபாயை என்பிஎஸ்-ல் முதலீடு செய்து வருகிறேன். மேலும் வரி விலக்குப் பெற என்பிஎஸ்-ல் நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

‘‘உங்கள் சம்பளத்திலோ அல்லது நீங்கள் செய்யும் தொழிலில் கிடைக்கிற மொத்த வருமானத்திலோ 10 சதவிகித தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும். அதில் மேல் வரிவிலக்கு கிடைக்காது. கூடுதலாக உங்கள் நிறுவனம் முதலீடு செய்யும் பென்ஷன் தொகை இருந்தால், அதில் 10 சதவிகித தொகைக்கு வரிவிலக்கு கிடைக்கும்.''

என்பிஎஸ் திட்டத்தில் சேர்ந்தபிறகு, முதலீட்டுப் பிரிவுகளை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

‘‘எந்த மாற்றம் செய்ய விரும்பினாலும், பிஓபி - எஸ்பியை அணுக வேண்டும். உங்களுடைய முதலீட்டுக்கான ஆதாரத்தை எடுத்துச்சென்று அவர்களை அணுகினால், மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.''

என்பிஎஸ் திட்டத்தில் 58 வயதுக்குப் பிறகு எத்தனை வருடங்களுக்கு பென்ஷன் கிடைக்கும்? பென்ஷன் காலத்தில் இடையில் இறந்துவிட்டால், நாமினியாக நியமிக்கப்பட்டவர் மீதமுள்ள பென்ஷன் தொகையை மொத்தமாகப் பெறமுடியுமா?

‘‘60 வயது வரை மட்டுமே என்பிஎஸ் பென்ஷன் கிடைக்கும். பின்னர் உங்களுடைய அக்கவுன்ட் குளோஸ் செய்யப்படும். அப்போதுவரும் கார்பஸ் தொகையில் 40% வரை ரொக்கமாக பெற்றுக்கொள்ள முடியும். மீதமுள்ள 60 சதவிகித தொகையை என்பிஎஸ் பரிந்துரைத்துள்ள 6 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களோ, அதில் முதலீடு செய்யலாம். அதன்மூலம் உங்களுக்கு மாதாமாதம் கணிசமான தொகை கிடைக்கும்.

உதாரணமாக, எல்ஐசியில் 7 விதமான ஆனுட்டி வருமான விதங்கள் உண்டு. 60 வயதில் 1,00,000 ரூபாயை நீங்கள் எல்.ஐ.சி திட்டத்தில் முதலீடு செய்தால், 1. பென்ஷன்தாரருக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்கக்கூடிய தொகை ரூ.745. அதற்குப் பிறகு அவர் வாழ்கிற காலம் வரை இந்தத் தொகை கிடைக்கும். ஒருவேளை இடையில் இறந்துவிட்டால் எந்த தொகையும் தரப்படாது. 2. அடுத்து,15 வருடம் வரை நிச்சயமான பென்ஷன். 15 வருடத்துக்குப் பிறகு வாழ்ந்தாலும் கிடைக்கும். 15 வருடத்துக்குள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் பென்ஷன்தாரருடைய குடும்பத்துக்கு 15 வருடம் வரை பென்ஷன் கிடைக்கும். 3. பென்ஷன்தாரருடைய காலம் முடியும் வரை ரூ.566 பென்ஷன் கிடைக்கும். பென்ஷன்தாரரின் காலம் முடிந்தபிறகு அவர் கட்டிய அந்த பிரீமியம் தொகையான ரூ.1 லட்சம் அவரது குடும்பத்துக்குக் கிடைக்கும். 4. முதல் வருடம் மாதத் தொகையாக ரூ.604. அடுத்தடுத்த வருடங்களில் இந்தத் தொகையில் 3% கூடுதலாக கிடைக்கும். இருக்கிற காலம் வரை கிடைக்கும். 5. பென்ஷன்தாரர் இருக்கிற காலம் வரை ரூ. 691 கிடைக்கும்; அவர் இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு இந்தத் தொகையில் பாதி ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். 6. பென்ஷன்தாரரும் அவரது மனைவியும் உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் ரூ.644 ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். 7.

பென்ஷன்தாரருக்கும் அவரது மனைவிக்கும் ரூ.562 ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். இருவரும் இறந்துவிட்டால் வாரிசுகளுக்கு அவருடைய பிரீமியம் தொகை அப்படியே கிடைக்கும்.''

என்பிஎஸ் திட்டத்தில் சேர்ந்தபின் முதலீட்டுத் தொகையை அதிகரிக்க முடியுமா?

‘‘என்பிஎஸ் திட்டத்தில் டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு திட்டங்கள் உண்டு. இதில் டயர் 2-ல் நீங்கள் தொகையை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும்.''

எனக்கு நிரந்தர வருமானம் கிடையாது. நான் என்பிஎஸ் திட்டத்தில் சேர முடியுமா?

‘‘என்பிஎஸ் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பணம் கட்டுவது கட்டாயம். அதனால் இப்போதைக்கு என்பிஎஸ்-ல் நீங்கள் சேர வாய்ப்பு இல்லை.''

என்பிஎஸ் திட்டத்தில் என் 22 வயதிலிருந்து மாதம் ரூ.2,500 முதலீடு செய்தால், 58 வயதுக்குப் பிறகு எனக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?

‘‘மாதம் ரூ.2,500 வீதம் 288 மாதங்கள் (24 வருடங்கள்) தொடர்ந்து கட்டி, அதற்கு ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால், நீங்கள் ஓய்வு பெறும்போது கிடைக்கும் தொகை ரூ.29,99,000. இந்தத் தொகையை 20 ஆண்டுகளுக்கு ஆனுயூட்டியாக வாங்க விரும்பி, அதற்கு 6% வட்டி கிடைத்தால் 21,500 ரூபாயும், 8% வட்டி கிடைத்தால் 25,500 ரூபாயும் ஒவ்வொரு மாதமும் பென்ஷனாகக் கிடைக்கும்.''

டிவிட்டர் கேள்வி-பகுதியை விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10529